இதனைப்பற்றிய பதிவொன்றினை முன்னமே நான் இட்டிருந்தாலும், அவற்றில் விடப்பட்ட அல்லது பின்னர் அறியப்பட்ட சில விடயங்களை மட்டும் இந்த பதிவு கொண்டுள்ளது.
பொத்தான்கள்
இந்த கைப்பேசி மூன்றே மூன்று பொத்தான்களை மட்டுமே கொண்டுள்ளது.
- Home button – இதனை அழுத்துவதன் மூலம் பிரதான முன்திரைக்கு எங்களால் செல்ல முடியும்
- Ring / Silent switch – இதன் பயன்பாடு என்னவென்று உங்களுக்கு தெரியும்
- A volume slider – ஒலியளவினை கூட்ட அல்லது குறைக்க.
இவற்றில் volume slider ஆனது மின்கலத்தின் செயற்றிறனை அதிகரிக்கவே திரையில் வைக்கப்படாமல் பொத்தானாக உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளீட்டு வசதி
இந்த கைப்பேசியின் உள்ளீட்டு வசதியான “Multi-touch” எனப்படுவது, அப்பிள் நிறுவனத்தின் 200 காப்புரிமை பெறப்பட்ட கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். அத்துடன் இதன் திரைவிசைப்பலகை மிக அதிஉணர்திறன் கொண்டதுடன் எங்களின் உள்ளீடுகளின்போது ஏற்படும் தவறுதலான அழுத்தல்களை நிவர்த்திசெய்ய ஒரு வினைத்திறன் வாய்ந்த சொற்பிழை திருத்தியினையும் கொண்டுள்ளது.
Sensor control
இந்த ஐபோன் ஆனது நாங்கள் எந்த வகையில் வைத்திருக்கிறோம் என்பதனை (நிலைக்குத்தாக, கிடையாக) Sensor மூலமாக உணர்ந்து அதற்கேற்ற வகையில் தனது திரையினை அமைத்துக்கொள்ளும்.
Text (SMS)
வழமையான கைப்பேசிகளில் இருக்கும் sms போலல்லாது இந்த கைப்பேசி iChat போன்றதொரு சிறிய மென்பொருளை sms சேவைக்கு பயன்படுத்துகின்றது. இதனால் எங்களால் bubbles, icons போன்றவற்றினையும் எஙகள் sms இல் சேர்த்துக்கொள்ள முடியும்.
மின்னஞ்சல்
இந்த கைப்பேசியில் உள்ள மின்னஞ்சல் மென்பொருளில் எங்கள் கணனியில் உள்ள மின்னஞ்சல் மென்பொருட்களை (Outlook, lotos notes) போன்று IMAP, POP3 சேவைகளை பயன்படுத்த முடியும். அதைவிட யாகூ நிறுவனம் அனைத்து ஐபோன் பாவனையாளர்களுக்கும் Blackberry இல் பயன்படுத்துவதைப்போன்ற Push mail கணக்குகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
iPhone ஒரே பார்வையில்.
முன்னைய ஒப்பீட்டுப் பதிவு இங்கே.
13 மாசி, 2007