புதிய தேடுபொறி Hakia

வழமையான எங்கள் கூகிள், யாகூ போலல்லாது ஒரு புதிய தேடுபொறி hakia. இந்த தேடுபொறி தேடப்படும் சொல்லின் பிரபல்யத்தை கருத்தில் கொள்ளாது மனித மூளையினைப்போன்று தேடப்படும் விடயத்தின் கருத்தொற்றுமையினை மட்டுமே கவனத்தில் கொள்ளுகின்றது. இதனால் இங்கு இணையப்பக்கங்களல்லாது இணையப்பக்கங்களில் உள்ள விடயங்களே பட்டியற்படுத்தப்படுகின்றன.

இந்த தேடுபொறி இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே வேலைசெய்கின்றது. அத்தோடு எழுத்துப்பிழைகளையும் சரியாக கவனிப்பதில்லை. இது இன்னமும் பேற்றா நிலையில் தான் உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

ஒரு முறை தேடிப்பார்த்துவிட்டு எனக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கள்.

குறிச்சொற்கள்: ,

12 பின்னூட்டங்கள்

  1. johan -paris சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    சில தேடல்கள் செய்தேன். தந்தது.
    உங்கள் பக்கம் என் வீட்டு கணனியில் பிரச்சனையாகத்தான் இருக்கிறது.
    யோகன் பாரிஸ்

  2. johan -paris சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    சில தேடல்கள் செய்தேன். தந்தது.
    உங்கள் பக்கம் என் வீட்டு கணனியில் பிரச்சனையாகத்தான் இருக்கிறது.
    யோகன் பாரிஸ்

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    யோகன் அண்ணா பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் இணைய உலாவி எதுவென தயவுசெய்து கூற முடியுமா??

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    யோகன் அண்ணா பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் இணைய உலாவி எதுவென தயவுசெய்து கூற முடியுமா??

  5. கரிகாலன் சொல்லுகின்றார்: - reply

    வணக்கம் பகி.
    உங்கள் வலைப்பதிவினை இ.எக்ஸ். ரரில் திறப்பது கடினமாக இருக்கிறது.
    வலைப்பக்கம் வருகிறது.அத்தோடு ஒரு மெசேஜ் வருது இ.எ ரல்லால் ஓபன்
    பண்ணமுடிவில்லை என்று அதை ஓ.கே பண்ண பிறவுசர் வெறுமையாகிறது.

    நல்ல விடயங்களை தரும் நீங்கள் இதனையும் சரி செய்தால் நன்றாக இருக்கும்.

    கரிகாலன்.

  6. கரிகாலன் சொல்லுகின்றார்: - reply

    வணக்கம் பகி.
    உங்கள் வலைப்பதிவினை இ.எக்ஸ். ரரில் திறப்பது கடினமாக இருக்கிறது.
    வலைப்பக்கம் வருகிறது.அத்தோடு ஒரு மெசேஜ் வருது இ.எ ரல்லால் ஓபன்
    பண்ணமுடிவில்லை என்று அதை ஓ.கே பண்ண பிறவுசர் வெறுமையாகிறது.

    நல்ல விடயங்களை தரும் நீங்கள் இதனையும் சரி செய்தால் நன்றாக இருக்கும்.

    கரிகாலன்.

  7. பகீ சொல்லுகின்றார்: - reply

    கரிகாலன் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இந்த ரெம்பிளற் CSS 2 இனை பயன்படுத்துவதால் IE 6 இல் சில பிரச்சனைகளை கொடுக்கிறது. ஆனால் நெருப்பு நரியில் மிகச்சிறப்பாக இயங்கும். எனது இணைய உலாவி நெருப்பு நரியாகையால் இதனை கவனிக்காது விட்டுவிட்டேன். விரைவில் சரிசெய்ய முயற்சிக்கின்றேன். IE 7 இலும் பிரச்சனை இன்றி இயங்குகின்றது.

  8. பகீ சொல்லுகின்றார்: - reply

  9. செல்லி சொல்லுகின்றார்: - reply

    பகீ
    புதுப் புது விடயங்கள் எல்லாம் நன்றாகப் பொழிகின்றன. வாழ்த்துக்கள்!

  10. செல்லி சொல்லுகின்றார்: - reply

    பகீ
    புதுப் புது விடயங்கள் எல்லாம் நன்றாகப் பொழிகின்றன. வாழ்த்துக்கள்!

  11. பகீ சொல்லுகின்றார்: - reply

    நன்றி செல்லி . வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

  12. பகீ சொல்லுகின்றார்: - reply

    நன்றி செல்லி . வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.