இணையம்

அழகிய புளொக்கர் அடைப்பலகைகள்

அனேகமான தமிழ் வலைப்பதிவாளர்கள் கூகிள் நிறுவனத்தின் இலவச வலைப்பதிவு சேவையான புளொக்கரினையே பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால் அவற்றில் அனேகமானவை புளொக்கர் தரும் அடைப்பலகைகளோடேயே இருந்து வருகின்றது.

கீழே சில அழகான புளொக்கர் அடைப்பலகைகள் சிலவற்றை வரிசைப்படுத்தி இருக்கின்றேன். பயன்படுத்தி உங்கள் வலைப்பதிவுகளை அழகாக்கி கொள்ளுங்கள்.

Arthemia

arthemia

Bizmax

bizmax

Cheerful Blues

cheerful-blues

Cracked

cracked

Flow

flow

Gamezine

gamezine

Happy blog

happy-blog

Letter Frame

letter-frame

Magazeen

magazeen

Milano

milano

Paper craft

paper-craft

Presents

presents

2 கார்த்திகை, 2009

கூகிள் மொழிபெயர்ப்பானில் மேலும் ஏழு மொழிகள்

இணையத்தில் மொழி மாற்றுவதற்கு மிகவும் இலகுவானதும் இலவசமானதுமான சேவை கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பான் சேவையாகும். இச்சேவையில் இப்போது மேலும் ஏழு மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.

1. Albanian (9-13 மில்லியன் மக்கள்)
2. Estonian (1.1 மில்லியன் மக்கள்)
3. Galician (3-4 மில்லியன் மக்கள்)
4. Hungarian (15 மில்லியன் மக்கள்)
5. Maltese (400,000 மக்கள்)
6. Thai (60-65 மில்லியன் மக்கள்)
7. Turkish (63 மில்லியன் மக்கள்)

4 மாசி, 2009

உபுந்து படிக்கலாம் வாங்க – இலவச மின்புத்தகம்

லினிக்ஸ் என்ற சொல்லே ஏதோ கணினியில் கரைகண்டவர்களுக்கு மட்டும்தான் என்ற நினைப்பை பெருமளவில் மாற்றி உதவியது உபுந்து லினிக்ஸ் வெளியீடு. அதேபோல நீண்டகாலமாக வின்டோஸை நம்பி மட்டுமே கணினிகளை வெளியிட்டு வந்த HP, Dell நிறுவனங்களும் உபுந்துவுடன் கணினிகளை வெளியிட ஆரம்பித்தது. நோட்புக் கணினிகளுக்கு சிறந்தது உபுந்துதான் என்று பலரும் கருதுமளவிற்கு சிறப்பான வசதிகளுடன் தன்னை காலத்துக்குகாலம் மேம்படுத்தி இலவசமான சிறந்த இயங்குளமாக உபுந்து வளர்ந்து வருகிறது.

நீங்கள் உபுந்துவுக்கு மாற விரும்பினால் அல்லது உபுந்து பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு இந்த “Ubuntu pocket guide and reference” என்கின்ற இந்த புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். இதன் அச்சடிக்கப்ட்ட பிரதி 10 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்பட்டாலும் மின்புத்தகம் இலவசமானது.

இங்கே சென்று தரவிறக்கி கற்றுக்கொள்ளுங்கள்.

30 தை, 2009