இந்துக்களின் போரில் வென்றது யாழ் இந்து.
இந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 222 ஓட்டங்கள் குவிக்க, தொடர்ந்து வந்த பெரிதும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கொக்குவில் இந்து 209 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. முதல் முறையாக சர்வதேச தரத்திலான நிற உடைகள், மற்றும் அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் என களைகட்டியிருந்தது போட்டி. கீழே கைப்பேசியில் எடுத்த சில படங்கள். மேலும் சில படங்கள் விரைவில். (படங்களை தரவேற்றிறது பெரிய சிக்கலாயிருக்கப்பா…)
பகீ,
படங்கள் பாக்குறதுக்கு ஒண்டில் தலையைச் சரிக்கவேண்டிக் கிடக்குது இல்லாட்டி கணினித் திரையை சரிக்கவேண்டிக் கிடக்குது. எல்லாத்தையும் நிமிர்ந்த நிலையில் போட்டால் பாக்க நல்லாயிருக்கும்.
மதுவதனன் மௌ அல்லது கௌபாய்மது
எல்லாத்தையும் நிமிர்ந்த நிலையில் போட்டால் பாக்க நல்லாயிருக்கும்.
மதுவதனன், அமலன் வாங்க,
எல்லாபடத்தையும் நிமித்திதான் போட்டனான். ஆனா என்ன நடந்தது எண்டு தெரியேல்ல. இப்படி இருக்கு. பிறகு சரிப்பண்ணி விடுறன்.
*/பிறகு சரிப்பண்ணி விடுறன்./* பிறகு என்ன பிறகு இப்படி தான் எல்லாவற்றையும் பிறகுதான் செய்வீர்களா பகீ?
அருள் எல்லாத்தையும் இல்லை, சிலதை இப்பிடி சொல்லித்தான் சமாளிக்கிறது.
யாழ்.இந்து வென்றது மகிழ்ச்சி. படங்களுக்கு நன்றி. ஆனால் மதுவதனன் எனப்படுகிற கெளபாய்மது சொன்னதையே படங்கள் தொடர்பில் நானும் சொல்லவேண்டியிருக்கிறது.. 🙂