வண்ணை வரதராஜ பெருமாள் கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க வண்ணை வெங்கடேச வரதராஜ பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்த பத்து தினங்கள் நடைபெறும் உற்சவங்களி்ல் எதிர்வரும் 22ம் திகதி காலை எட்டு மணிக்கு நடைபெறும் வசந்த மண்டப பூசைகளை தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு வரதராஜப் பெருமாள் தேரில் வலம்வந்து அடியவர்களுக்கு அருள் பாலிப்பார். மறுநாள் காலை 9.30 மணிக்கு சந்திரபுஸ்கரணியில் வரதராஜப்பெருமாளின் தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.

குறிச்சொற்கள்: ,

பின்னூட்டங்களில்லை