வல்லிபுரத்தாழ்வார் – யாழ்ப்பாணம்

சிங்கை என்று யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பருத்தித்துறைப்பிரதேசத்தில் அலைகடலின் அருகே குடிகொண்டிருக்கின்ற வல்லிபுரத்தாழ்வார் திருத்தலத்தில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இன்று எட்டாம் திருவிழாவிற்கு போகின்ற பாக்கியம் கிட்டியது. அதிகாலையில் சென்றமையினால் சில புகைப்படங்ளை எடுக்க முடிந்நது.
குறிச்சொற்கள்: , ,

7 பின்னூட்டங்கள்

 1. மோகன் சொல்லுகின்றார்: - reply

  படங்கள் பட்டைய கெளப்புது… ஆனாலும் உங்களண்ட ஊரில் எப்போதுமே ஒரு விதமான அமைதி தெரியுது… கடந்தமுறை ஒரு பதிவில் போட்டது போன்றே, இங்கேயும் ஜனநடமாட்டம் மிஸ்சிங்

 2. நிர்ஷன் சொல்லுகின்றார்: - reply

  நேரில் பார்க்கவேண்டும்போல் இருக்கிறது பகீ. படங்கள் அருமை.
  கோபுரத்தின் அமைப்பு வித்தியாசமாக உள்ளது. திருவிழா படங்களை முழுமையாக தரமுடியாதா?

 3. siva sinnapodi சொல்லுகின்றார்: - reply

  எனது ஊர் கோவிலை கண்முன் நிறுத்திய உங்களுக்கு நன்றி

 4. தங்கராசா ஜீவராஜ் சொல்லுகின்றார்: - reply

  நன்றி பகீ,
  யாழில் இருக்கையில் தரிசித்தற்குப் பிறகு நேரில் பார்த்தது போன்ற உணர்வு.

  எங்களூர் திருவிழா http://thampainakar.blogspot.com/ நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

 5. நிமல் - NiMaL சொல்லுகின்றார்: - reply

  முன்னர் ஒருதடவை இந்த கோவிலுக்கு போன ஞாபகம்…
  படங்கள் நன்றாக இருக்கிறது.

 6. பகீ சொல்லுகின்றார்: - reply

  மோகன் வாங்க,

  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. யாழ்ப்பாணத்தில் சனநடமாட்டம் மிஸ்சிங் எண்டது உண்மைதான். ஆனாலும் படத்தில இருக்கிற அளவுக்கு இல்ல. திருவிழா பின்னேரம் தான். சனம் வரத்தொடங்க முன்னரே நான் கோவிலுக்கு போயிட்டு வந்திட்டன். அதுதான் படத்தில் பெரிச ஆக்கள் இல்லை.

 7. பகீ சொல்லுகின்றார்: - reply

  நிர்ஸன் வாங்க,

  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இது பெருமாள் கோவில் என்பதால் சிறிய வித்தியாசங்கள் இருக்கின்றன. நான் இருக்கிமிடத்தில் இருந்து மிகத்தூரத்தில் இந்த கோவில் இருக்கின்றது. இப்பொழுது பேருந்தில் செல்வதானால் இரண்டு மணத்தியாலங்கள் தேவைப்படும். அதனால் முழுமையாக திருவிழா படங்களை தருவது என்பது சாத்தியமற்றது. முடிந்தால் முக்கியமான ஒரு திருவிழாவிற்கு போக முயற்சிக்கின்றேன்.

  சிவா சின்னப்பொடி, வாங்க

  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.