நிகழ்வுகள்

தினமும் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பு

உன் நினைவினிலே – ஈழத்திலிருந்து புதிய திரைப்படம்

இலங்கையில இருந்து தமிழ் படமே வாறதில்லை எண்டுற குறைய நீக்கிற மாதிரி (வடிவா கவனியுங்கோ.. இலங்கையில இருந்து) கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான மற்றும் கணினி படிக்கிற மாணவர்கள் சேர்ந்து “உன் நினைவினிலே” எண்டு ஒரு படம் எடுத்திருக்கினம். சும்மா சாதாரண குறும்படங்கள் எண்ட சொல்லுற அளவிலில்லாமல், ஒன்றரை மணித்தியாலம் இந்த படம் ஓடுது. கீழ ஒரு 5 நிமிச முன்னோட்டத்தை பாருங்கோ.


பாத்தாச்சா.. நல்லாயிருக்கா.. இப்ப பிரச்சனையை கேளுங்கோ. இந்த படத்தை எடுக்க பெடியளுக்கு 250,000.00 இலங்கை ரூபாயளவுக்கு செலவாகி இருக்குதாம். படத்தை வெளியிட முதல் இந்த கடனை தீர்க்க வேண்டி இருக்கு. வாசிக்கிற உங்களில யாருக்காவது விருப்பம் இருந்தா உங்களால முடிஞ்சளவு பணத்தை கொடுத்து அவர்களை ஊக்குவிக்கலாம் (தயவு செய்து ஊக்குவியுங்கோ). பின்னூட்டத்தில தெரிவியுங்கோ. உங்களுக்கு மீதி தகவல்களை அனுப்பி வைக்கிறன்.

5 பங்குனி, 2008

Adobe Releases AIR 1.0

ஏறத்தாள ஒரு வருட கால பீற்றா மற்றும் அல்பா சோதனைகளின் பின்னர் அடொப் நிறுவனம் சற்று முன்னர் தனது Adobe AIR 1.0 இனை வெளியிட்டுள்ளது.




HTML, AJAX, Flash and Flex போன்ற இணைய மென்பொருள் உருவாக்க திறமை உள்ளவர்கள் Adobe AIR இனை பயன்படுத்தி அவற்றை தமது கணினியில் பயன்படுத்தக்கூடிய மென்பொருட்களாக மாற்றிக்கொள்ள முடியும்.

இங்க போய் AIR இனை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

26 மாசி, 2008

தினக்குரலில் ஊரோடி

தினக்குரலில வாற வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தில இந்த முறை ஊரோடி இடம்பெற்றிருக்கு. இடம்பெற வைத்த தாசன் அண்ணாவிற்கு நன்றிகள். காலையில சில நண்பர்கள் தொலைபேசியில அழைச்சு சொன்னாங்கள் இப்படி உன்ரை வலைப்பதிவு பற்றி எழுதியிருக்கு எண்டு சொன்னாங்கள். பிறகு மாயாவும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இவர்களுக்கும் நன்றி. (கொழும்பு தினக்குரல் யாழ்ப்பாணத்தில் கிடைப்பதில்லை.)

25 மாசி, 2008