நிகழ்வுகள்

தினமும் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பு

சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)

கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு 10.30க்காக்கும் கடைசி மத்தியான நேரம்.

முந்தி படத்துக்கு போறெண்டா (நான் அதிகமா படம் பாக்கிறதில்லை) ஒரு முப்பது பேர் மட்டில போவம் அண்டைக்கு ரெண்டு பேர்தான். எங்க ஒருத்தரும் யாழ்ப்பாணத்தில இல்லையே என்ன செய்யிறது. இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்ச ஆக்களில ஒருத்தரை யாழப்பாணத்தில தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும். இப்பயே ஒரு நாலு ஐஞ்சு பேர்தான் இருக்கினம். மிச்செல்லாரும் ஒண்டு கொழும்பில அல்லது வெளிநாட்டில.

போன அண்டு கூட்டத்துக்கு குறைவில்லை. சங்கக்கடையில மாவுக்கும் அரிசிக்கும் நிக்கிற கியூவ விடவும் பெற்றோல் எடுக்கிறதுக்கு பெற்றோல் ஸ்ரேசனில நிக்கிற கியூவை விடவும் பெரிய கியூ. ஒரு அறுநூறு எழுநூறு பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. என்ர நண்பர் காலமயே ரிக்கற்றுக்கு சொல்லி எடுத்து வச்சிருந்தார். அதில ரிக்கற் எடுக்கிற பிரச்சனை இருக்கேல்ல. வழமையா நூறு ரூபா விக்கிற பல்கணி ரிக்கற் அண்டைக்கு நூற்றி அறுபது ரூபா. உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். வழமையா நான் யாழ்ப்பாண தியேட்டர்களில பொம்பிளப்பிள்ளைகளை காணுறது குறைவு. சிவாஜி படத்துக்கு அரைவாசி பொம்பிளைகள் தான்.

படம் ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். கனகாலத்துக்கு பிறகு (ஏறத்தாள ஒரு வருடம்) ஒரு படம் எண்டா இப்பிடி தானே இருக்கும். பின்னுக்கு மொட்டை சிவாஜி வந்தாப்பிறகு படம் நல்லாயிருந்த மாதிரியிருந்துது. (எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது)

27 ஆனி, 2007

ஐபோன் வெளியாகிறது

அறிவிக்கப்பட்டு நீண்டகாலமாக வருகிறது வருகிறது என்று சொல்லப்பட்டுவந்த ஐபோன் வருகின்ற 29 ஆம் திகதி பாவனைக்கு வருகின்றது என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (BBC News)

ஐபோன் பற்றிய எனது ஏனைய பதிவுகள்.

http://oorodi.blogspot.com/2007/01/f.html

http://oorodi.blogspot.com/2007/02/iphone.html

5 ஆனி, 2007

காதலர் தினம் – (கொண்டாடுபவர்களுக்கு மட்டும்)

வழமையான எந்த ஒரு நாளையும் விட காதலர் தினம் எண்டா பெரிய பட்டிமன்றங்கள் விவாதங்கள் எல்லாம் தொடங்கீரும். நானும் இந்த வயசுபோனாக்கள் எல்லாம் இந்த தினமெல்லாம் தேவையில்லையெண்டும், வயசு வந்த பெடி பெட்டையள் எல்லாம் வேணுமெண்டும் ஒரு கிழமைக்கெண்டாலும் ஒரே பிச்சுப் புடுங்கலா இருக்கும்.

நான் உதைப்பற்றி ஒண்டும் கதைக்க வரேல்ல. நீங்கள் யாராவது வாழ்த்துமட்டை கொடுக்கிற எண்டா கீழ இருக்கிற படங்களை எடுத்து உங்களுக்கு ஏற்றமாதிரி மாத்தி விரும்பின பேருகளை படங்களை போட்டு குடுத்துககொள்ளுங்கோ. என்னால முடிஞ்ச உதவி. (படத்தை சொடுக்கி பெரிசாக்கி எடுங்கோ)
















கனகாலமா நானும் இந்த படங்களை பாவிச்சு வாழ்த்துமட்டை செய்து குடுப்பம் எண்டு பாத்தா…………. எங்க சரிவருது……

13 மாசி, 2007