வரதர்
ஈழத்தின் முன்னோடி மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று அறியப்படும் வரதரோடு நீண்ட நாட்களாகவே எனக்கு பழக்கம் இருந்து வருகின்றது. நான் புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்து (1994இன் முற்பகுதி) அவரது புத்தகச் சேமிப்பே எனது நூலகமாக இருந்துவந்தது. அவரது அனேகமான படைப்புகளை கையெழுத்து பிரதியாகவே வாசித்து விடும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது. அக்காலங்களில் நான் ஓவியமென்ற பெயரில் கிறுக்கியவற்றையெல்லாம் திருத்துவதும் அவரே.
வரதர் அவர்களை ஒரு ஓவியராக அறிந்தவர்கள் மிகச்சொற்பமே. அவரது வீட்டு சுவர்களை அலங்கரிக்கும் அவரது தாயாரின் ஓவியம் உட்பட அனைத்து ஓவியங்களும் அவரது கைவண்ணமே.
நான் கொழும்பால் யாழ்ப்பாணம் வந்ததும் என்னை பார்க்கவும் எனது சிறிய புத்தக தொகுதியை பார்க்கவும் வீட்டுக்கு வந்திருந்தார்.
தான் ஒரு கதை எழுத தொடங்கியிருப்பதாயும், தான் எழுதும் கையெழுத்து தனக்கே புரிவதில்லை எனவும் இதனால் ஒரே அத்தியாயத்தை மூன்று முறை திருப்பியெழுத வேண்டி இருந்ததாயும் குறைபட்டுக்கொண்டார்.
கடந்த வருடம் இதற்காகவே ஒரு மடிக்கணினி வாங்கி தமிழ் ரைப்பிங் பழகி கணினியில் எழுதத்தொடங்கியிருந்தவர் இப்போது அது பழுதடைந்து கொழும்பிற்கு அனுப்பியிருந்தார். அது எப்போது திரும்பி வரும் என்றும் பேசும்போது கவலைப்பட்டவாறு கூறினார். என்னுடைய சிறிய புத்தகச் சேர்க்கையிலிருக்கும் புத்தகங்களில் தன்வரலாறு கூறும் புத்தகங்களையும் உளவியல் புத்தகங்களையும் வாசிப்பதற்கு தருமாறு கேட்டவர் தான் வாசிக்கும் ஆர்வத்திலேயே வாசிப்பதாயும் வாசிப்பது இரண்டு நாட்களுக்கு மேல் ஞாபகம் நிற்பதில்லை என்றும் குறைபட்டுக்கொண்டார்.
இத்தனை வயதிலும் தெளிவான பேச்சு , அறிந்து கொள்ளும் ஆர்வம், புத்தகங்கள் மீது தீராத காதல், எழுதுவதில் துடிப்போடு வியக்க வைக்கின்றார் வரதர் ஐயா.
வணக்கம். பகீ.. நீங்கள் கொழும்பிலிருந்த போது எனது வலைப்பதிவில் பின்னூட்டம் இட்டவர் தானே..
வரதர் அவர்கள்தான் எனது பெயரை முதலில் அச்சில் கொண்டு வந்தார். புதினம் என்ற ஒரு சஞ்சிகையில் எனது நகைச்சுவை ஒன்றுபிரசுரமானது.
அதன் பின்னர் அறிவுக்களஞ்சியம்..
அதில் ஒரு சுவையான கதையுண்டு. அறிவுக் களஞ்சியத்துக்கு நான் முதலில் எழுதிய வெந்நீருற்றுக்கள் என்ற சிறிய கட்டுரை எனது பெயரின்றி வெளியானது. உடனேயே அதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். அடுத்த இதழில் அந்த கடிதமும் அதற்காக மன்னிப்பும் வரதரிடமிருந்து வந்தது.
அப்போது எனக்கு வயது 13.
மேலும் சில பதிவுகளை வரதர் பற்றி அறிய ஆசை. நல்ல முயற்சி. தொடருங்கள்.

நான்தான் சயந்தன் உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இட்டது. நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை சாரலில் காணவில்லை. கவனியுங்கள்.
நான்தான் சயந்தன் உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இட்டது. நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளை சாரலில் காணவில்லை. கவனியுங்கள்.
பகீ, வரதர் அவர்களைப்பற்றி மேலும் அறிய ஆவலாயுள்ளேன். அவரைப்பற்றியும் அவரது நூல்களைப்பற்றியும் விரிவாக ஒரு பதிவைப் போடுங்கள்.
பகீ, வரதர் அவர்களைப்பற்றி மேலும் அறிய ஆவலாயுள்ளேன். அவரைப்பற்றியும் அவரது நூல்களைப்பற்றியும் விரிவாக ஒரு பதிவைப் போடுங்கள்.
நிச்சயமாக. நேற்று இரவு ஒரு நேர்காணல் போல வரதர் ஐயாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அதனையும் அவரது புதிய முயற்சிகளையும் நிச்சயம் பதிவாக்குவேன். சயந்தனின் கதை எந்த வருடம் எந்த மாதம் வெளிவந்தது என்று தெரியவில்லை. தெரிந்தால் ஒரு பிரதி சயந்தனுக்கு அனுப்பி வைப்பேன்.