கூகிள் மேலதிக வசதிகள்

இணையத்தில் ஏதாவது ஒரு விடயத்தை பற்றி அறிந்து கொள்ளவேண்டுமாயின் எங்களில் அனேகர் உடன் செல்வது கூகளின் தேடுபொறிக்கே. இத்தேடுபொறி தேடுதல் தவிர ஆனேக மேலதிக வசதிகளை கொண்டுள்ளது. இவற்றில் சிலவற்றினை கீழே பார்ப்போம்.

நீங்கள் கூகிளை ஒரு பல் வசதி கொண்ட இணையக்கணிப்பானாய் பயன்படுத்த முடியும். உங்கள் சமன்பாட்டை கூகிளின் தேடுபெட்டியினில் உள்ளிட்டுவிட்டு தேடு பொத்தானை அழுத்தினால் அதற்கான விடையை கூகிள் உங்களுக்கு தரும். உதாரணமாக 2+3 என உள்ளிட்டு தேடினால் 5 என விடை வரும். இப்படியான சாதாரண கணக்குகள் மட்டுமன்றி திரிகோணகணிதம் போன்ற கடின கணக்குகளையும் தீர்க்கும்.

கூகிளில் நாங்கள் சமன்பாடுகளை உள்ளிடும் போது கணித விஞ்ஞான மாறிலிகளை பயன்படுத்த முடியும். உதாரணத்திற்கு pi என உள்ளிட்டு தேடினால் 3.14159265 எனவும் speed of light என உள்ளிட்டால் 299792458 m/s என விடைகளை தரும்.

கூகிளால் ஒரு அளவீட்டில் இருக்கும் ஒரு பெறுமானத்தை இன்னொரு அளவீட்டுக்கு மாற்ற முடியும்.
உதாரணமாக 1 meter in feet, 1 cup in teaspoons மற்றும் 100 usd in euros போன்றவற்றை உள்ளிட்டு தேடிப்பாருங்கள்.

கூகிளை ஒரு அகராதியாக பயன்படுத்த முடியும். உதாரணமாக நீங்கள் defenestrate என்ற சொல்லின் அர்த்தத்தினை அறிய வேண்டுமாயின் what is defenestrate என உள்ளிட்டு தேடுங்கள் அவ்வளவுதான்.
ஏதாவது ஒரு சொல்லின் வரைவிலக்கணத்தை அறியவும் நாங்கள் கூகிளை பயன்படுத்த முடியும். உதாரணமாக defenestrate என்ற சொல்லின் வரைவிலக்கணத்தை அறிய define:defenestrate என உள்ளிட்டு தேடுங்கள். peer to peer இன் வரைவிலக்கணத்தை அறிய வேண்டுமாயின் define:”peer to peer” என உள்ளிட்டு
தேடுங்கள் அவ்வளவுதான். உங்களுக்கு இப்போது வரைவிலக்கணம் தெரிந்திருக்கும்.

சில குறிப்பிட்ட விடயங்களை அறிந்துகொள்ள நாங்கள் கூகிளை பயன்படுத்த முடியும். உதாரணமாக president germany என உள்ளிட்டு தேடினால் எங்களுக்கு தேவையான பதில் உடனே கிடைத்துவிடும்.

இதைவிட ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் செல்லுபடியாகும் பல வசதிகள் கூகிளில் உண்டு. தேவையெனில் அவற்றை வேறொரு பதிவில் பார்ப்போம். உங்களுக்கு இந்த தகவல்கள் பயனுள்ளவையாக பட்டால் எனக்கு ஒரு பின்னூட்டமிட்டுவிடுங்கள்

குறிச்சொற்கள்: ,

10 பின்னூட்டங்கள்

 1. சின்னக்குட்டி சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் பகீ …நன்றிகள் இப்பதிவுக்கு…. .. நீங்கள் சொன்ன மாதிரி உந்த கூகிளை கேட்டுத்தான் கம்பியூட்டரை எப்படி கையாள்வது என்பதையே அறிந்து கொண்டேன்

 2. Jafar Ali சொல்லுகின்றார்: - reply

  அருமையான தகவல்கள்! நன்றி நண்பரே!

 3. Jafar Ali சொல்லுகின்றார்: - reply

  அருமையான தகவல்கள்! நன்றி நன்பரே!

 4. சின்னக்குட்டி சொல்லுகின்றார்: - reply

  வணக்கம் பகீ …நன்றிகள் இப்பதிவுக்கு…. .. நீங்கள் சொன்ன மாதிரி உந்த கூகிளை கேட்டுத்தான் கம்பியூட்டரை எப்படி கையாள்வது என்பதையே அறிந்து கொண்டேன்

 5. Jafar Ali சொல்லுகின்றார்: - reply

  அருமையான தகவல்கள்! நன்றி நண்பரே!

 6. Jafar Ali சொல்லுகின்றார்: - reply

  அருமையான தகவல்கள்! நன்றி நன்பரே!

 7. johan-paris சொல்லுகின்றார்: - reply

  பகீ!
  கணக்குகள் முயற்சிக்கவிலை;ஆனால் வேறு தகவல்கள்,நீங்கள் குறிப்பிடுவது போல் பெற்றுள்ளேன்.
  புதிய விடயமறிந்தேன்.
  நன்றி
  யோகன் பாரிஸ்

 8. johan-paris சொல்லுகின்றார்: - reply

  பகீ!
  கணக்குகள் முயற்சிக்கவிலை;ஆனால் வேறு தகவல்கள்,நீங்கள் குறிப்பிடுவது போல் பெற்றுள்ளேன்.
  புதிய விடயமறிந்தேன்.
  நன்றி
  யோகன் பாரிஸ்

 9. பகீ சொல்லுகின்றார்: - reply

  இன்றுதான் மறுமொழியுமளவு விரலுக்கு தெம்பு வந்தது. சின்னக்குட்டி, யோகன் அண்ணா, ஜாபர் அலி வருகைகளுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

 10. பகீ சொல்லுகின்றார்: - reply

  இன்றுதான் மறுமொழியுமளவு விரலுக்கு தெம்பு வந்தது. சின்னக்குட்டி, யோகன் அண்ணா, ஜாபர் அலி வருகைகளுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.