Google Knol அனைவருக்கும் – விக்கிபீடியாவிற்கு போட்டியா?
கடந்த மார்கழி மாதம் அல்பா பதிப்பாக கூகிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட knol சேவை இப்பொழுது அனைத்து பயனாளருக்குமாக திறந்து விடப்பட்டுள்ளது. இது விக்கிப்பீடியாவிற்கு போட்டியாக உருவாக்கப்ட்டுள்ளதாக பலர் கருத்துக் கூறி வந்தாலும் கூகிள் தொடர்ச்சியாக அதனை மறுத்து வந்திருக்கிறது. இருந்த போதும் இது ஒரு வகையில் விக்கிப்பீடியாவை ஒத்த ஒரு சேவைதான்.
இவை இரண்டும் ஒரே மாதிரியான சேவையாக தோற்றமளித்தாலும் உண்மையில் இரண்டினதும் பார்வைத்தன்மை அடிப்படையில் வேறுபடுகின்றது. விக்கிப்பீடியா உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும் அதே நேரம் knol authorship இல் கவனம் செலுத்துகின்றது.
இன்னொரு முக்கியமான விடயம் விக்கிப்பீடியாவை போலல்லாது எங்களால் நாங்கள் உருவாக்கும் கட்டுரைகளின் காப்புரிமையை இங்கு மாற்றி அமைக்க முடியும்.
சரி இங்க வந்து ஒருக்கா சுத்தி பாருங்க.
very late move by google, Wiki by now is huge in size, knowledge & popularity..
//யாத்திரீகன்: very late move by google, Wiki by now is huge in size, knowledge & popularity..//
அப்படி எல்லாம் உறுதியாக சொல்லி விட முடியாது. கூகுள் வரும் முன் எத்தனை தேடியந்திரங்கள் இருந்தன அத்தனையும் பின்னுக்குத் தள்ளி விட்டு கூகிள் முன்னால் வரவில்லையா?
அது மட்டுமில்லாமல் வர வர விக்கிபீடியா ரொம்பவே சொதப்புகிறது. பல விசயங்களில் இரைச்சல் (signal to noise ratio) அதிகம். நிபுணர்கள் எழுதுவதால் இந்த பிரச்சனை பெருமளவு குறையும். கூகுள் எப்படி நிபுணர்களை முடிவு செய்யும் என்பது தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விசயம்.
பார்ப்போம் என்ன நடக்கின்றது. தகவலுக்கு நன்றி.
விக்கீபிடியாவில் நடுநிலை என்று எதுவும் கிடையாது.
அவர்கள் (விக்கிபீடியாவின் மூத்த பயனர்கள்) கொண்டுள்ள கொள்கையே நடுநிலை என்றாகிறது.
ச்ந்தேகம் இருந்தால் ஆங்கில விக்கீபிடியாவில், சாதி, இடப்பங்கீடு குறித்த கட்டுரைகளை பாருங்கள் 🙂
கூகிள் ஆண்டவர் மட்டுமல்ல… யார் வந்தாலும் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது.
யாத்திரீகன் அப்படி சொல்ல முடியாது. இப்பவே page rank இல Knol முன்னுக்கு வந்திட்டுது.
மணிவண்ணன் நிபுணர்களை தெரிவு செய்வது என்பதை விட ஒரு அசிரியரை தெரிவு செய்வது என்று சொல்வது பொருந்தும் என நினைக்கின்றேன். இதற்கு கூகிள் மூன்று தெரிவுகளை தந்திருக்கின்றது.
மயூரேசன், மோகன், புரூனே, வாங்க
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.