யாழ்ப்பாண சாதி அமைப்பு.

சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்து சாதி அமைப்பு மற்றும் இனப்போராட்டம் காரணமாக சாதி அமைப்பின் வீழ்ச்சி தொடர்பாக இறக்குவானை நிர்ஷன் ஒரு பதிவிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிமுறைமைபற்றி பல்வேறு நூல்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லி இருக்கின்றன.

1790 இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின்போது காணப்பட்ட சாதிகள் பற்றி யாழ்ப்பாணச்சரித்திரம் (1912) என்கின்ற நூலில் அ. முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிட்டிருக்கின்றார். அதன் பிரகாரம் சாதி அமைப்பு கீழ்வருமாறு தரப்பட்டிருக்கின்றது.

வேளாளர்
பரதேசிகள்
மடைப்பள்ளியர்
மலையகத்தார்
செட்டிகள்
பிராமணர்
சோனகர்
தனக்காரர்
குறவர்
பரம்பர்
சிவியார்
பள்ளிவிலி
செம்படவர்
கடையர்
பரவர்
ஒடாவி
சான்றார்
கன்னார்
தட்டார்
யானைக்காரச்சான்றார்
கயிற்றுச்சான்றார்
கரையார்
முக்கியர்
திமிலர்
கோட்டைவாயில் நளவர்
கோட்டைவாயிற் பள்ளர்
மறவர்
பாணர்
வேட்டைக்காரர்
வலையர்
வர்ணகாரர்
வண்ணார்
தந்தகாரர்
சாயக்காரர்
தச்சர்
சேணியர்
கைக்கோளர்
குயவர்
கடையற்காரர்
குடிப்பள்ளர்
சாயவேர்ப்பள்ளர்
தம்பேறு நளவர்
தம்பேறுப்பள்ளர்
குளிகாரப்பறையர்
பறங்கி அடிமை
கொல்லர்
தவசிகள்
அம்பட்டர்
கோவியர்
தமிழ்வடசிறை
நளவர்
பள்ளர்
பறையர்
துரும்பர்
எண்ணெய்வணிகர்
சாயவேர்ப்பள்ளர்
சாயவேர்ப்பறையர்
அர்ச்கோயில் பறையர்.

ஆனால் இதிலே

மலையகத்தார்
சோனகர்
ஒடாவி
பறங்கி அடிமை

ஆகியன சாதி என்பதை விட அவர்களது இன ரீதியான இடரீதியான பாகுபாடாகத்தான் காணப்படுகின்றது.

இதன்பின்னர் நீண்டகாலப்போக்கில் இந்த சாதி அமைப்பினுள்ளே கிளைச்சாதிகள் மறைந்து ஏனையவை நிலவி வருகின்றன எனலாம்.

ஆனாலும் இன்றைய நாளிலும் சில சாதி மக்களிடையே கிளைச்சாதிகள் (இடசார்பாயோ அல்லது பழக்கம் சார்பாயோ தெரியவில்லை) காணப்படுவது கண்கூடு (செம்படவர் – மேல்கரை, கீழ்க்கரை). ஆனால் நான் நிர்ஷனின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போன்று அதன் தீவிரம் பெருமளவான நிகழ்வுகளில் குறைவடைந்து, திருமணத்தில் மிக்க தீவிரமடைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சாதியை விட்டு திருமணம் செய்வதை நூறுவீதம் தவிர்த்து விடுகின்றார்கள்). அதற்காக யாழ்ப்பாணம் முழுவது அந்த நிலைதான் என்பது அர்த்தமல்ல. நான் பணிபுரிந்த சில இடங்களில் சில சாதிகாரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பது இன்னமும் நடைமுறையில் இருக்கின்றது. இப்பொழுது அச்சாதியினைச்சேர்ந்த மக்கள் தங்களுக்கென்று கோயில் அமைத்து இருக்கின்றார்கள். அதேபோல் இன்னோரிடத்தில் ஒரே கிராமத்தில் இருக்கும் இரு சாதி மக்கள் தமக்குள் எந்த சம்பந்தமும் அற்று இருக்கிறார்கள். ஒருவர் ஒருவரை பற்றி பேசுவது கூட இல்லை. இவை சில உதாரணங்கள் தான்.

ஆனால் அதற்காக கைபட்டால் அடிப்பது போன்ற அளவுக்கு பிரச்சனைகள் இல்லை. பெரும்பாலான இளைஞர்கள் முற்போக்குள்ளவர்களாக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கின்றது.

ஆனால் இதனை விட வித்தியாசமான சாதி அமைப்பொன்று யாழப்பாணத்தரசர் காலத்தில் இருந்ததென்று பண்டைய நூல்கள் சொல்கின்றன. அவற்றை தொகுத்து இன்னும் ஒரு பதிவில் தர முயற்சிக்கின்றேன்.

குறிச்சொற்கள்: , , ,

23 பின்னூட்டங்கள்

  1. JEYANTHAN சொல்லுகின்றார்: - reply

    DEAR WRITER,
    YOU HAVE CONVEYED A GOOD INFORMATION FOR ALL. IN MY POINT OF VIEW, CAST IS NOT A MAJOR PROBLEM FOR ALL HUMAN BEINGS. BUT I DON’T KNOW ABOUT JAFFNA PEOPLE.
    SO NICE. THANK YOU FOR YOUR CONCLUSION.

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    ஜெயந்தன் வாங்க,

    அதனால் தான் நானும்

    ///பெரும்பாலான இளைஞர்கள் முற்போக்குள்ளவர்களாக இருப்பதால் இது சாத்தியமாகி இருக்கின்றது.///

    என்று சொல்லியிருக்கின்றேன். நானும் இன்னமும் இளைஞன்தான் என்பதும் என் எண்ணம்.

    அப்ப நீங்கள் எங்க இருக்கிறனீங்கள்.

  3. நிர்ஷன் சொல்லுகின்றார்: - reply

    பகீ,
    உண்மையில் நல்லதொரு பதிவு.
    இன்னும்கூட யாழ்ப்பாணத்தில் கீழ்சாதிக்காரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. கீழ்சாதிமாணவர்கள் எனக் கூறப்படுவோர் பள்ளியில் பின்வரிசையில் தான் கற்கிறார்கள் என்ற துன்பமான செய்தியை கேட்கும்போது வருத்தமாயிருக்கிறது பகீ.

    மட்டக்களப்பில் (மட்டக்களப்பை உதாரணமாகக் கொண்டுள்ளேன்) யாரோ ஒருவர் காலால் மிதித்து உழுது விளைந்த நெல்லை உயர்சாதிக்காரரால் எப்படி உண்ண முடிகிறது?

    வேற்று சாதிக்காரர் ஒருவர் நெய்த ஆடையை எப்படி அணிய முடிகிறது?

    வேற்று சாதிக்காரர் வெட்டிய தலைமயிரைக்கொண்டு எப்படி உயிர்வாழ முடிகிறது?

    இறந்த பின்னர் வேற்று சாதிக்காரரின் உடலோடு உயர்சாதிக்காரரின் உடலும் மண்ணோடு மண்ணாவதை அவரால் தடுக்கமுடியுமா?

    எல்லாம் இறுமாப்புதான் பகீ, உண்மையில் நீங்கள் சொல்வதைப் போல கொங்கொங் ஈழவன் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல இளைஞர் சமுதாயம் இதை மாற்றியமைக்கும்.

    தேவையான பதிவு பகீ. எனது நண்பர்கள் பலர் சாதி வெறியினால் எத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    நிர்ஷன் வாங்க,

    ////உண்மையில் நல்லதொரு பதிவு.
    இன்னும்கூட யாழ்ப்பாணத்தில் கீழ்சாதிக்காரர்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. கீழ்சாதிமாணவர்கள் எனக் கூறப்படுவோர் பள்ளியில் பின்வரிசையில் தான் கற்கிறார்கள் என்ற துன்பமான செய்தியை கேட்கும்போது வருத்தமாயிருக்கிறது பகீ.////

    நான் பொதுவாக அவ்வாறு கூறவில்லை நிர்ஷன். அவ்வாறு நடக்கும் ஓரிரு இடங்கள் இருப்பதாக மட்டும்தான் கூறி இருக்கின்றேன். அனேக இடங்களில் இன்னிலை மாறிவிட்டது.

    ஆனால் திருமணம் என்றால் பிரச்சனைதான்.

  5. கடகம் சொல்லுகின்றார்: - reply

    யாழ்ப்பாணத்தில் சாதிப்பிரச்சினையை தூண்டுவதற்கு ஊரோடி மூலம் வழிவகுக்குகிறீர்களா????????????????

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    ஐயா கடகம்,

    உங்களுக்கும் எனக்கும் தனிப்பட ஏதும் பகையிருக்கா என்ன?? எதை வச்சு இப்பிடி சொல்லூறீங்கள்.

  7. Shuthan சொல்லுகின்றார்: - reply

    Dear Pakee

    Actually I don’t know the lot of cast were in Jaffna as you mention. By your website, I have known lot of information. I think this article leads to awareness the public.
    thank you

  8. பகீ சொல்லுகின்றார்: - reply

    சுதன் வாங்க,

    உங்கள் ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி.

  9. HK Arun சொல்லுகின்றார்: - reply

    யாழ்ப்பாணத்தில் சாதிய வேறுப்பாடுகள் தற்போதும் இருக்கிறது தான்.

    நிலைமைப் பார்த்தீர்களா? எத்தனை சாதிகள் இருந்தன என்பதை அறிவதற்கு “(1912) யாழ்ப்பாணச்சரித்திரம் என்கின்ற நூலில் அ. முத்துத்தம்பிப்பிள்ளை” யின் பழைய ஏடுகளைப் பிரட்ட வேண்டியிருக்கிறது.

    இனி வரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் சாதிகள் இருந்ததற்கான சான்றுகளறிய எதிர்காலச் சந்ததியினர் எமது காலப் புத்தகங்களைத் தான் பிரட்ட வேண்டியேற்படும்.

    நன்றி!
    அன்புடன் அருண்

  10. பகீ சொல்லுகின்றார்: - reply

    அருண் வாங்க,

    அந்த நாளில இருந்த சாதி அமைப்ப பாக்க அந்தநாளய புத்தகத்தை தானே பாக்கவேணும். அதுக்காக சாதி இல்லை எண்டு சொல்லீரேலாது.

    பெருஞ்சாதிகள் மட்டும் இருக்கேக்கயே இவ்வளவு பிரச்சனையா இருக்கு இவ்வளவு கிழைச்சாதிகளும் இருக்கக்க என்னெல்லாம் நடந்திருக்கும்..

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

  11. ஊரோடி சொல்லுகின்றார்: - reply

    நான் நீண்ட கால மாக ஊரோடி எனும் புனைப்பெயரில் தமிழ் பத்திரிக்கைகளில் எழுதிவருகின்றேன்…எதிர்வரும் 22 23 தேதிகளில் யாழ்பாணம் வரும் பணியும் உள்ளது..வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம்

  12. kumaran சொல்லுகின்றார்: - reply

    கள்ளர் பறையர் கனத்த அகம்படியார் மெள்ள மெள்ள இங்கு வந்து வெள்ளாளர் ஆகினர்.

    இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், மறவர், அகம்படியர், செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?

    அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:
    Burgher ——-477
    Bramman ——-1935
    Chetty ——— 1807
    Madappally —12995
    Moors —2166
    Paradesy — 1830
    Mallagam — 1501

    Cariar —- 7562
    Brassfounder — 105
    Masons —- 47
    Tuners — 76
    Welper —50
    Cycolas — 1043
    Chandar —- 2173
    Dyers —902
    Chevia — 1593
    Pandaram—- 41
    Parawa — 35
    Tannecaras — 1371
    Silversmith — 899
    Blacksmith — 904
    Carpenters — 1371
    Barbers — 1024
    slave of Burgher — 18
    Washermen — 2152
    Moquah —2532
    Malayalam —210
    Covias — 6401
    Company Nalum — 739
    Pallas —6313
    Parayars — 1621
    Torampas — 197
    Weavers — 272
    Cawere chetty —18
    Tawesy — 437
    Nattowen — 22
    Oil monger — 4
    Tunmilah — 1291
    Pallevely —376
    Simpadawer — 40
    cadia —970
    Nallua — 7559
    Potters — 329
    Ship carpenter — 33
    Marava — 54
    Choyaroot-Digger —408
    Paramber — 362

    Free slaves — 348
    இந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக்கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக்கொள்கிறார்கள்.இது மிகவும் சிரிப்புக்குரயது.வெள்ளளாளர் என்றால்,வெள்ளத்தை அடக்கிஆள்பவெரன்றும்,மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும்.வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக்கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்துவ்௫கின்ற்னர்.ஏனென்றால் அவரகளில்பலர் வெள்ளாளர்களே அல்ல என்பதுதான்.இந்த வரலாற்றாதாரங்கள் அதனைமெய்ப்பிக்கும்.

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      குமரன்,

      நான் தந்திருக்கும் பட்டியல் 1790 சனத்தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டது.

      100 வருடங்களுக்கு முன் சாதி மாறியவர்கள் என்ற உங்கள் கூற்று எவ்வரலாற்றை ஆதாரமாக கொண்டது?சைமன் காசிச்செட்டியையெனில், சைமன் காசிச்செட்டியால் 1859 இல் எழுதி வெளியிடப்பட்ட TAMIL PLUTARCH என்று நூல் யாழ்ப்பாணத்தார் பற்றி சொல்லும்போது எத்தனை முறை வெள்ளாளர் என கூறுகிறது என நீர் அறியமாட்டீர் என நம்புகின்றேன்.

      அன்புடன்
      பகீ

      • kumaran சொல்லுகின்றார்: - reply

        நான் தந்திருக்கும் பட்டியலும் 1790 சனத்தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டது.தவறுதலுக்கு வருந்துகின்றேன்.

        • kumaran சொல்லுகின்றார்: -

          .அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?

  13. puliyadiyan சொல்லுகின்றார்: - reply

    ///யாழ்ப்பாண சாதி அமைப்பு///
    ஐயா பதிவாளரே
    குலத்தளவே ஆகுமாம் குணம்
    இது உண்மை தானே
    சிட்டு குருவி உயர பறந்தாலும் பருந்து ஆகமுடியாது
    அன்புடன்
    புளியடியான்

    • sivanadiyan சொல்லுகின்றார்: - reply

      ஐயா குமரன்

      பகி சொன்னது போல
      எவர் பெரியவர் என்ற பிரச்சனை இல்லை
      உங்களுக்காக வரலாறு உள்ள சில கருத்துக்கள்
      “கள்ளர் மறவர் கணக்கர் அகம்படியர் மௌ;ள மௌ;ள வந்து வேளாளரானார்கள்” என்று ஒரு சுலோகமும் தமிழ் நாட்டிலுண்டு. இவர்களைக் கள்ளரென்று கூறியவுடன் பொதுவாக வீட்டிலும் நாட்டிலும் களவெடுக்குஞ் சாதியாரென்றும், கொள்ளையடிப்பவரென்றும் நம்பிக் கொள்ளுகிறார்கள். அது முற்றிலுந்தவறு. அதனை நன்கு விளங்கினால் அதன் உண்மை தெரியும்?
      முதலாவது கள்ளரை எடுப்போம். போர் துவங்குவதற்கு முன் இவர்களுக்குள்ள முதற்பணி என்னவெனில், எதிரிகளின் நாடுகளிற் புகுந்து கோட்டை, கொத்தளம், அகளி, படைவீரர்முகாம் முதலானவிடங்களெல்லாம் மறைமுகமாகச் சுற்றிப் பார்த்து அங்குள்ள பலம், பலவீனம், வெடிப்பு, உடைப்பு, பயிற்சி, கருவி முதலானவைகளைக் கண்ணோட்டம் பார்த்தும். பின் கடற்துறைகளிற் சென்று எந்தெந்த முனைகளில் புதிதாகக் கோட்டைகள் அமைக்கிறார்கள். கொத்தளங்கள் கட்டுகிறார்கள். எத்தனைபோர் மீளிகள், மருந்துக் கப்பல், உணவுக்கப்பல் புதிதாக வெள்ளோட்டம் விடுகிறார்களெனவறிந்தும், பிற்பாடு உள்நாடுகளில் புகுந்து, செல்வங்கொழிக்குதா அல்லது பஞ்சம் நிலவுதா, குடிமக்களுக்கு மன்னன் பால் வெறுப்பா அல்லது விருப்பாவென ஆராய்ந்தும் இவைமுதலான வேவுகளைப்பார்த்து தன் நாட்டரசனுக்கு இரகசியத்துப்பு கொடுப்பவர்களே கள்வராவர். மற்றப்படி பிறருடைய பொருட்களைக் களவெடுப்பவரல்லர்.

      அடுத்தது மறவரை எடுப்போம். இவர்கள் தான் தவறாமல் போர்ப்பயிற்சி செய்தும், இளஞ்சிப்பாய்களுக்குப் போர்க்கலைபயிற்றுவித்தும், கருவிகளைத் துருப்பிடியாமல் பாதுகாத்தும், கரியேற்றம், பரியேற்றம், ரதவோட்டம் முதலான பயி;ற்சிகளைப் பரந்த வெளியிடங்களில் கொண்டு சென்று அணிவகுத்து ஒத்திகை பார்த்தும் வருவதே இவர்களின் கடமையாகும்.

      கணக்கரானோரும் மறக்குலப் போர்வீரர்களிலொருவர். இவர்களின் பிரதான கடமை அரசனுக்குச் சேர வேண்டிய திறைகளை, வரிகளை, கப்பங்களை வசூலிப்பதாகும். வேறுகுலத்தவர்களால் திறைப்பணங்களை ஒழுங்காக அறவிட முடியாதபடியால் இப் பொறுப்பையும் மறவருக்கே ஒப்படைக்கப்பட்டது. இவர்களைக் கணக்கர், கணக்காயரென்றும் அழைப்பர்.

      கடைசியாக அகம்படியாரை எடுப்போம். அகம் + படியார், நெஞ்சுபணியாதவர். அதாவது எவருக்கும் தலைவணங்காதவர் என்று அர்த்தம். அடுத்தது அகம் ஸ்ரீ வீடு. வீட்டில் தங்குபவர் என்றும் ஒரு கருத்துண்டு. போராற்றி நாடுபிடிபட்டதும் எவருக்கும் தலைவணங்காமல், அந்நாட்டில் முதன் முதல் அஞ்சா நெஞ்சத்துடனும், ஓர்மத்துடனும் குடிபுகுந்து, அங்கே நிலையாகத் தங்கி அரசனின் பணிகளாற்றுபவர்களாவர். இந் நால்வரும் நாலு தொழில்களைச் செய்தாலும் யுத்தகாலங்களில் ஒன்றாகவே போர்முனையில் நின்று போர்புரிபவர்களாவர்.

      நன்றி

    • kumaran சொல்லுகின்றார்: - reply

      உண்மைதான் அய்யா.ஆனால் கீழே சற்றுப்படித்துப்பாருங்கள்.

      பள்ளர்/மள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு ஆயிரக்கணக்கில் ஆதாரங்கள்( சங்க இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் உட்பட) இலங்கை இந்தியா உட்படப் பல இடங்களில் உண்டு.ஆதலால் மள்ளர் குலத்தவர்கள் கண்டபடி அலட்டிக்கொள்வதில்லை.
      பள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மன்னர்க்கு ஏற்பட்டிருந்த உரிமைகளில் சிலவாவது இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மன்னர்க்குரிய உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் ( கல்வெட்டு இலக்கம். 432/1914) பாணடியன் உக்கிரப் பெருவழுதி இம்மரபினர்க்கு வெள்ளை யானை வண்வட்டக் குடை கெராடி பகற்பந்தம் பாவாடை இரட்டைச்சிலம்பு இரட்டைக்கொடுக்கு நன்மைக்குப் பதினாறு கால்பந்தல் துண்மைக்கு இரண்டு தேர் பஞ்சவன்(பாண்டியன்) விருது பதினெட்டு மேளம் வளங்கி அன்றுதொட்டு இம்மரபினர் அவற்றை அனுபவித்து வந்துள்ளனர்.
      குறிப்பு:
      தெய்வேநதிர குலத்தார்க்கு( மள்ளர் / பள்ளர்) வழங்கப்பட்ட மேலே கூறிய உரிமைகள் தமிழகத்தில் பிராமணர் உட்பட இன்று உயர்சாதியெனப் பாராட்டும் வகுப்புகள் ஒன்றிற்க்காவது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
      அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
      வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்
      – என்று திவாகர நிகண்டும்.
      செருமலை வீரரும் திண்ணியோரும்
      மருத நில மக்களும் மள்ளர் என்ப
      – என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன
      “மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர் பள்ளக்கணவனாய்…”(முக்கூடற்பள்ளு)

      • sivanadiyan சொல்லுகின்றார்: - reply

        உசாத்துணை நுhல்கள்:
        1. யாழ்ப்பாணக் குடியேற்றம் – முத்துக்குமாரசாமிப்பிள்ளை
        2. வையாபாடல்
        3. கைலாயமாலை
        4. யாழ்ப்பாண வைபவமாலை – மயில்வாகன புலவர்
        5. யாழ்ப்பாண வைபவ கெளமுது – க. வேலுப்பிள்ளை
        6. யாழ்ப்பாண சரித்திரம் – தொகுப்பு : சி.க. சிற்றம்பலம்
        7. யாழ்ப்பாணம் – சமூகம் – பண்பாடு – கருத்துநிலை – பேராசிரியர் கா. சிவத்தம்பி,
        8. சிலோன் கசற்றியர்- சைமன் காசிச் செட்டி
        9. இலங்கையில் தமிழர் – பேராசிரியர் கா. இந்திரபாலா
        10. ஈழத்து இலக்கியமும் வரலாறும் – பேரா. சி. பத்மநாதன்
        11. சமூக விஞ்ஞானம் – தொல்குடிகள் – ஆர். பூங்குன்றன்
        12. தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு – கலாநிதி வ. புஸ்பரட்ணம்
        13. இலங்கையில் தமிழர் ஓர் முழுமையான வரலாறு – கலாநிதி முருகர் குணசிங்கம்

  14. pakalavan சொல்லுகின்றார்: - reply

    yalppana vellalar enru thangalai koorikkolvor unmayil uyarsaathiyinaraka irukka mudiyathu. because avarkalil nalla kunam ullavarkal athikam illai. eliya kunankal yal vellalaridam undu. but eliyavarkal ena ivarkalal purakkanikkappadum makkalidam uyar kunankalai kana mudikirathu. kulaththalave akumam kunam enpathu jaffna’vil porunthathu. but batticaloa’vil porunthum. anku ulla saathi murai kalappadam illathathu. as a batticalonian I can say this confirmly.

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      பகலவன்,

      இந்தப்பதிவு யார் பெரியவர் சிறியவர் என்றோ தாழ்ந்தவர் உயர்ந்தோர் என்றோ கூறுவதற்காக இடப்பட்டதல்ல. இது ஒரு தகவலுக்காக மட்டுமே.

      நன்றி

  15. puliyadiyan சொல்லுகின்றார்: - reply

    ஐயா குமரன்

    பகி சொன்னது போல
    எவர் பெரியவர் என்ற பிரச்சனை இல்லை

    உங்களுக்காக வரலாறு உள்ள சில கருத்துக்கள்

    “கள்ளர் மறவர் கணக்கர் அகம்படியர் மௌ;ள மௌ;ள வந்து வேளாளரானார்கள்” என்று ஒரு சுலோகமும் தமிழ் நாட்டிலுண்டு. இவர்களைக் கள்ளரென்று கூறியவுடன் பொதுவாக வீட்டிலும் நாட்டிலும் களவெடுக்குஞ் சாதியாரென்றும், கொள்ளையடிப்பவரென்றும் நம்பிக் கொள்ளுகிறார்கள். அது முற்றிலுந்தவறு. அதனை நன்கு விளங்கினால் அதன் உண்மை தெரியும்?

    முதலாவது கள்ளரை எடுப்போம். போர் துவங்குவதற்கு முன் இவர்களுக்குள்ள முதற்பணி என்னவெனில், எதிரிகளின் நாடுகளிற் புகுந்து கோட்டை, கொத்தளம், அகளி, படைவீரர்முகாம் முதலானவிடங்களெல்லாம் மறைமுகமாகச் சுற்றிப் பார்த்து அங்குள்ள பலம், பலவீனம், வெடிப்பு, உடைப்பு, பயிற்சி, கருவி முதலானவைகளைக் கண்ணோட்டம் பார்த்தும். பின் கடற்துறைகளிற் சென்று எந்தெந்த முனைகளில் புதிதாகக் கோட்டைகள் அமைக்கிறார்கள். கொத்தளங்கள் கட்டுகிறார்கள். எத்தனைபோர் மீளிகள், மருந்துக் கப்பல், உணவுக்கப்பல் புதிதாக வெள்ளோட்டம் விடுகிறார்களெனவறிந்தும், பிற்பாடு உள்நாடுகளில் புகுந்து, செல்வங்கொழிக்குதா அல்லது பஞ்சம் நிலவுதா, குடிமக்களுக்கு மன்னன் பால் வெறுப்பா அல்லது விருப்பாவென ஆராய்ந்தும் இவைமுதலான வேவுகளைப்பார்த்து தன் நாட்டரசனுக்கு இரகசியத்துப்பு கொடுப்பவர்களே கள்வராவர். மற்றப்படி பிறருடைய பொருட்களைக் களவெடுப்பவரல்லர்.

    அடுத்தது மறவரை எடுப்போம். இவர்கள் தான் தவறாமல் போர்ப்பயிற்சி செய்தும், இளஞ்சிப்பாய்களுக்குப் போர்க்கலைபயிற்றுவித்தும், கருவிகளைத் துருப்பிடியாமல் பாதுகாத்தும், கரியேற்றம், பரியேற்றம், ரதவோட்டம் முதலான பயி;ற்சிகளைப் பரந்த வெளியிடங்களில் கொண்டு சென்று அணிவகுத்து ஒத்திகை பார்த்தும் வருவதே இவர்களின் கடமையாகும்.

    கணக்கரானோரும் மறக்குலப் போர்வீரர்களிலொருவர். இவர்களின் பிரதான கடமை அரசனுக்குச் சேர வேண்டிய திறைகளை, வரிகளை, கப்பங்களை வசூலிப்பதாகும். வேறுகுலத்தவர்களால் திறைப்பணங்களை ஒழுங்காக அறவிட முடியாதபடியால் இப் பொறுப்பையும் மறவருக்கே ஒப்படைக்கப்பட்டது. இவர்களைக் கணக்கர், கணக்காயரென்றும் அழைப்பர்.

    கடைசியாக அகம்படியாரை எடுப்போம். அகம் + படியார், நெஞ்சுபணியாதவர். அதாவது எவருக்கும் தலைவணங்காதவர் என்று அர்த்தம். அடுத்தது அகம் ஸ்ரீ வீடு. வீட்டில் தங்குபவர் என்றும் ஒரு கருத்துண்டு. போராற்றி நாடுபிடிபட்டதும் எவருக்கும் தலைவணங்காமல், அந்நாட்டில் முதன் முதல் அஞ்சா நெஞ்சத்துடனும், ஓர்மத்துடனும் குடிபுகுந்து, அங்கே நிலையாகத் தங்கி அரசனின் பணிகளாற்றுபவர்களாவர். இந் நால்வரும் நாலு தொழில்களைச் செய்தாலும் யுத்தகாலங்களில் ஒன்றாகவே போர்முனையில் நின்று போர்புரிபவர்களாவர்.
    நன்றி .

  16. Selva pandiyar சொல்லுகின்றார்: - reply

    சக்கிலியர்களுக்கும் யாழ்ப்பானத்து வடுகர்களுக்கும் இரத்த உறவு இருப்பது உண்மையா? http://yaalppaanam.wordpress.com