சூத்திரஞானம்

வால்மீகரின் சூத்திரஞானத்திலிருந்து 2ம் மற்றும் 3ம் பாடல்கள் உங்கள் பார்வைக்காக.

வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்
வானில் வரும் ரதிமதியும் வாசி யாகும்
சிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்
செகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்
நந்தியென்ற வாகனமே தூலதேகம்
நான்முகனே கண்மூக்குச் செவி நாக் காகும்
தந்திமுகன் சிவசத்தி திருவமூச் சாகும்
தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே
அறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம்
அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்
பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்
பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்
மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு
மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு
சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்
சிவசிவா அவனவனென் றுரைக்கலாமே.

(பூரகம் – மூச்சு உள்வாங்கல், கும்பகம் – சுவாச பந்தனம், இரேசகம் – சுவாசத்தை விடல்)

குறிச்சொற்கள்: ,

பின்னூட்டங்களில்லை