நற்சிந்தனை

நல்லூரான் திருவடி

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி – கிளியே
இரவுபகல் காணேனடி.

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி – கிளியே
நல்லூரான் தஞ்சமடி

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி – கிளியே
கவலையெல்லாம் போகுமடி

எத்தொழிலைச் செய்தாலென்
எதவத்தைப் பட்டாலென்
கந்தன் திருவடிகள் – கிளியே
காவல் அறிந்தி்டெடி

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவோமோ நாங்களடி – கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி

சுவாமி யோகநாதன்
சொன்ன திருப் பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலெடி – கிளியே
பொல்லாங்கு தீருமெடி.

குறிச்சொற்கள்: ,

27 பின்னூட்டங்கள்

  1. வெற்றி சொல்லுகின்றார்: - reply

    பகீ,
    அருமை. பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். இது உங்களின் ஆக்கமா?

  2. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ
    அருமையான பாடல் ; பாரதியாரின் “நெஞ்சில் உரமும் இன்றி” மெட்டில் பாட வேண்டும்; நித்தியசிரியும் அருணாசலக் கவியின் ஓர் பாடல் இம்மெட்டில் பாடியுள்ளார்.
    யாவுக்கும் நன்றி!!
    யோகன் பாரிஸ்

  3. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    கடைசிவரி “பூமியிற் சொன்னாலெடி”….என்பதே!!! பொருந்தும் போல் உள்ளது. நான் கூறுவதை யோசித்துப் பார்க்கவும்.
    யோகன் பாரிஸ்

  4. வெற்றி சொல்லுகின்றார்: - reply

    பகீ,
    அருமை. பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். இது உங்களின் ஆக்கமா?

  5. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ
    அருமையான பாடல் ; பாரதியாரின் “நெஞ்சில் உரமும் இன்றி” மெட்டில் பாட வேண்டும்; நித்தியசிரியும் அருணாசலக் கவியின் ஓர் பாடல் இம்மெட்டில் பாடியுள்ளார்.
    யாவுக்கும் நன்றி!!
    யோகன் பாரிஸ்

  6. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    கடைசிவரி “பூமியிற் சொன்னாலெடி”….என்பதே!!! பொருந்தும் போல் உள்ளது. நான் கூறுவதை யோசித்துப் பார்க்கவும்.
    யோகன் பாரிஸ்

  7. பகீ சொல்லுகின்றார்: - reply

    வெற்றி, யோகன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. வெற்றி இது என்னுடைய படைப்பு அல்ல? யார் எழுதியது என்றும் தெரியவில்லை. யோகன் தெரிந்தால் சொல்லுங்கள்.

  8. பகீ சொல்லுகின்றார்: - reply

    வெற்றி, யோகன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. வெற்றி இது என்னுடைய படைப்பு அல்ல? யார் எழுதியது என்றும் தெரியவில்லை. யோகன் தெரிந்தால் சொல்லுங்கள்.

  9. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

    வணக்கம் பகீ

    இந்தப்பாடல் யோகர் சுவாமிகளுடையது. என் ஆக்கம் இதோ
    http://kanapraba.blogspot.com/2006/07/blog-post_08.html

  10. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

    வணக்கம் பகீ

    இந்தப்பாடல் யோகர் சுவாமிகளுடையது. என் ஆக்கம் இதோ
    http://kanapraba.blogspot.com/2006/07/blog-post_08.html

  11. பகீ சொல்லுகின்றார்: - reply

    கானா பிரபா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நற்சிந்தனை என்ற பெயரும் கடைசி பாடலின் முதல் வரியும் இதை எனக்கு உணர்த்தியிருந்தாலும். உறுதியாக தெரியாத படியால் குறிப்பிடவில்லை. தங்கள் பதிவை படித்தேன். மிகச்சிறப்பாயிருந்தது.
    வெற்றி கானா பிரபாவின் பதிவையும் இதுவரை பார்க்காவிட்டால் பார்க்கவும். பூரண விபரம் உண்டு

  12. பகீ சொல்லுகின்றார்: - reply

    கானா பிரபா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. நற்சிந்தனை என்ற பெயரும் கடைசி பாடலின் முதல் வரியும் இதை எனக்கு உணர்த்தியிருந்தாலும். உறுதியாக தெரியாத படியால் குறிப்பிடவில்லை. தங்கள் பதிவை படித்தேன். மிகச்சிறப்பாயிருந்தது.
    வெற்றி கானா பிரபாவின் பதிவையும் இதுவரை பார்க்காவிட்டால் பார்க்கவும். பூரண விபரம் உண்டு

  13. வெற்றி சொல்லுகின்றார்: - reply

    பகீ,
    /*சுவாமி யோகநாதன்
    சொன்ன திருப் பாட்டைந்தும்
    பூமியிற் சொன்னானெடி */

    யார் இந்தச் சுவாமி யோகநாதன்? யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளா?
    அவர் சொன்ன திருப்பாட்டு ஐந்து உங்களிடம் கைவசம் இருக்கிறதா?

    நன்றி.

  14. வெற்றி சொல்லுகின்றார்: - reply

    பகீ,
    /*சுவாமி யோகநாதன்
    சொன்ன திருப் பாட்டைந்தும்
    பூமியிற் சொன்னானெடி */

    யார் இந்தச் சுவாமி யோகநாதன்? யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளா?
    அவர் சொன்ன திருப்பாட்டு ஐந்து உங்களிடம் கைவசம் இருக்கிறதா?

    நன்றி.

  15. பகீ சொல்லுகின்றார்: - reply

    யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் தான். நிச்சயம் யோகர் சுவாமிகளின் படைப்புகளை வலையேற்ற முயற்சிக்கியேன்.

    பின்னூட்டத்திற்கு நன்றி வெற்றி

  16. பகீ சொல்லுகின்றார்: - reply

    யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் தான். நிச்சயம் யோகர் சுவாமிகளின் படைப்புகளை வலையேற்ற முயற்சிக்கியேன்.

    பின்னூட்டத்திற்கு நன்றி வெற்றி

  17. Kanags சொல்லுகின்றார்: - reply

    பகீ, யாழ்ப்பாணம் யோகசுவாமிகளைப் பற்றியும் அவரது நற்சிந்தனைகளையும் எனது வலைப்பக்கத்தில் பதிந்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கலாம்:

    யோக சுவாமிகள்

  18. Kanags சொல்லுகின்றார்: - reply

    பகீ, யாழ்ப்பாணம் யோகசுவாமிகளைப் பற்றியும் அவரது நற்சிந்தனைகளையும் எனது வலைப்பக்கத்தில் பதிந்துள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் சென்று பார்க்கலாம்:

    யோக சுவாமிகள்

  19. பகீ சொல்லுகின்றார்: - reply

    யோகன் உங்கள் திருத்தமே சரியானது. நற்சிந்தனை புத்தகம் நண்பரிடம் இருந்து பெற்று பார்த்தேன். நன்றி. பதிவிலும் மாற்றிவிட்டேன். வெற்றி ஐந்து பாடல்கள் என்பது முதல் ஐந்து பாடல்களைத்தான்.

  20. பகீ சொல்லுகின்றார்: - reply

    யோகன் உங்கள் திருத்தமே சரியானது. நற்சிந்தனை புத்தகம் நண்பரிடம் இருந்து பெற்று பார்த்தேன். நன்றி. பதிவிலும் மாற்றிவிட்டேன். வெற்றி ஐந்து பாடல்கள் என்பது முதல் ஐந்து பாடல்களைத்தான்.

  21. குமரன் (Kumaran) சொல்லுகின்றார்: - reply

    மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் இருக்கிறது பகீ. ஏற்கனவே யோகர் சுவாமிகளைப் பற்றி உங்கள் பதிவில் படித்திருந்ததால் இந்தப் பாடலைப் படிக்கத் தொடங்கியவுடன் இது யோகர் சுவாமிகள் எழுதியதாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. சில நண்பர்களுக்கு இந்தப் பதிவின் சுட்டியை அனுப்ப எண்ணியிருக்கிறேன்.

  22. குமரன் (Kumaran) சொல்லுகின்றார்: - reply

    மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் இருக்கிறது பகீ. ஏற்கனவே யோகர் சுவாமிகளைப் பற்றி உங்கள் பதிவில் படித்திருந்ததால் இந்தப் பாடலைப் படிக்கத் தொடங்கியவுடன் இது யோகர் சுவாமிகள் எழுதியதாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. சில நண்பர்களுக்கு இந்தப் பதிவின் சுட்டியை அனுப்ப எண்ணியிருக்கிறேன்.

  23. பகீ சொல்லுகின்றார்: - reply

    நன்றி குமரன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

  24. பகீ சொல்லுகின்றார்: - reply

    நன்றி குமரன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

  25. G.Ragavan சொல்லுகின்றார்: - reply

    முருகா முருகா முருகா!

    தமிழ் இனிமையென்றால்…அந்த இனிமையைக் கொண்டு வாழ்வில் இனிமை கூட்டும் வள்ளற் பெருமான் வேலவனைப் பாடுவதும் படிப்பதும் கேட்பதும் எத்துணை இனிமை.

  26. G.Ragavan சொல்லுகின்றார்: - reply

    முருகா முருகா முருகா!

    தமிழ் இனிமையென்றால்…அந்த இனிமையைக் கொண்டு வாழ்வில் இனிமை கூட்டும் வள்ளற் பெருமான் வேலவனைப் பாடுவதும் படிப்பதும் கேட்பதும் எத்துணை இனிமை.

  27. Aananthan. சொல்லுகின்றார்: - reply

    நல்ல பதிவு.
    யோகர் சுவாமியின் பாடல்களும்
    நெகிழ்வானவை.
    உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.