பறாளை விநாயகர் பள்ளு

சுந்தரிக்காக வென்று இப்பதிவு

பறாளை விநாயகர் பள்ளு நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் செயத நூலாகும். இது சுழிபுரத்திலுள்ள பறாளை என்னுந் தலத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானை பாட்டுடைத்தலைவனாக கொண்டு பாடப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். இத்தகய நூல்களின் இலக்கணத்துக்கமைய மூத்தபள்ளி, இளையபள்ளி, பள்ளன், பண்ணைக்காரன் ஆகிய நான்கு பாத்திரங்களைக்கொண்டு பறாளை விநாயகர் பெருமை தோன்றச் சிந்தும் விருத்தமும் கலிப்பாவும் விரவிச் செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் மூத்தபள்ளி ஈழமண்டலப் பள்ளியாயும் இளையபள்ளி சோழமண்டலப்பள்ளியாயும் காட்சியளிக்கிறார்கள்.

இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு மாறாக ‘கண்ணனே காப்பு’ என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது. அதன் பின் விநாயகர், நடேசர், சிவகாமியம்மை துதி இடம்பெறுகின்றது. இவற்றைத்தொடர்ந்து பள்ளியர் தோற்றம், பள்ளியர் வரலாறு கூறல், பள்ளன் தோற்றம், பள்ளியர் தத்தம் நாட்டுவளங் கூறல், குலமுறை கிளத்தல், குயில் கூவுதல், மழைகேட்டல், ஆற்றுவரவு, பண்ணைக்காரன் தோற்றம், ஆண்டையை வணங்கல், விதைவகை கேட்டல், முறைப்பாடு, பள்ளன் மூத்த பள்ளியை வேண்டல், மூத்த பள்ளி ஆண்டையை வேண்டல், பள்ளன் கணக்கொப்பித்தல், முகூர்த்தங் கேட்டல், மூத்த பள்ளி இரங்கல், நாற்று நடுதல், அதன் விளைவு ஆகியன சொல்லப்பட்டு இடையிடையே அகப்பொருட்டுறை விரவிய செய்யுள்கள் இடம்பெற்று விளங்கும். நூலில் எல்லாமாக 130 செய்யுள்கள் காணப்படுகின்றன.

சுத்தர்பணிந் தேத்துஞ் சுழிபுரத்து வீற்றிருக்கும்
அத்த பரஞ்சோதி அண்ணலே – தைத்தலத்துச்
சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக்
காலன் வரும்போது கா

குறிச்சொற்கள்: , , ,

16 பின்னூட்டங்கள்

  1. விருபா / Viruba சொல்லுகின்றார்: - reply

    நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் பாடிய மற்றைய பிரபந்தங்கள் –

    மறைசையந்தாதி – இது வேதாரணியேசுரர் மேற் பாடப்பெற்றது. இதற்கான உரையை உடுப்பிட்டி அ.சிவசம்புப் புலவரும், மதுரை மாகா வித்துவான் சபாபதி முதலியார் எழுதியுள்ளார்கள்

    கல்வளையந்தாதி – இது யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் கல்வளையில் உள்ள விநாயகர் மீது பாடப் பெற்றது. இதற்கான உரையை வல்வெட்டித்துறை இயற்றமிழ்ப் போதகாசிரியர் ஸ்ரீ.வைத்திலிங்கம் பிள்ளை எழுதியுள்ளார்.

    கரவை வேலன் கோவை – கரவெட்டி பிரபு திலகராகிய வேலாயுதம் பிள்ளை மேற் பாடப்பட்டது. இக்கோவையை அரங்கேற்றியபோது ஒவ்வொரு செய்யுட்கும் ஒவ்வொரு பொற்றேங்காய் பரிசாக அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இச் செய்யுட்கள் சுண்ணாகம் அ.குமாரசாமிப் பிள்ளை அவர்களால் “செந்தமிழ்” பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

    நல்லூர் சின்னத்தம்பிப்புலவரின் தந்தையார் பெயர் வில்வராய முதலியார், இவர் ஒல்லாந்தர் அரசினால் “தேச வளமை” நூலை திருத்தி அமைக்க பணிக்கப்பட்ட அறிஞர்.

  2. விருபா / Viruba சொல்லுகின்றார்: - reply

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    நன்றி விருபா,
    மேலும் நல்ல விடயங்களை தந்துள்ளீர்கள் இவற்றை சேர்த்து ஒரு பதிவிட எண்ணுகின்றேன். ஆடசேபனை இருக்காது தானே.

    வருகைக்கும் வாழத்துகளுக்கும் நன்றி.

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    நன்றி விருபா,
    மேலும் நல்ல விடயங்களை தந்துள்ளீர்கள் இவற்றை சேர்த்து ஒரு பதிவிட எண்ணுகின்றேன். ஆடசேபனை இருக்காது தானே.

    வருகைக்கும் வாழத்துகளுக்கும் நன்றி.

  5. சுந்தரி சொல்லுகின்றார்: - reply

    பகீ
    பறாளாய் விநாயகர் பள்ளு பற்றி நிறைய விசயங்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே வாசிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது.
    விருபாவின் பின்னூட்டமும் மிக விளக்கமாக அமைந்திருந்தது. இருவருக்கும் நன்றிகள்.

  6. சுந்தரி சொல்லுகின்றார்: - reply

    பகீ
    பறாளாய் விநாயகர் பள்ளு பற்றி நிறைய விசயங்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி. உண்மையிலேயே வாசிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது.
    விருபாவின் பின்னூட்டமும் மிக விளக்கமாக அமைந்திருந்தது. இருவருக்கும் நன்றிகள்.

  7. கோபி சொல்லுகின்றார்: - reply

    பறாளை விநாயகர் பள்ளு ஒளிநகல் வடிவில் நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள சுந்தரி அதனைத் தட்டெழுதி நூலகத்தில் இணைக்கலாமே…

  8. கோபி சொல்லுகின்றார்: - reply

    பறாளை விநாயகர் பள்ளு ஒளிநகல் வடிவில் நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள சுந்தரி அதனைத் தட்டெழுதி நூலகத்தில் இணைக்கலாமே…

  9. Kanags சொல்லுகின்றார்: - reply

    அக்காலத்திலே செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கிய வில்லவராய முதலியார் என்பவர் ஒருவர் நல்லூரில் இருந்தார். கூழங்கைத் தம்பிரான் இவ்வில்லவராயர் முதலியார் வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகாலட்சேபஞ் செய்து வந்தனர். முதலியார் புத்திரன், தம்பிரான் காலக்ஷேபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர் என்றால் அப்புத்திரனுடைய விவேகம் இவ்வளவென்று சொல்லவேண்டுமா? ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,

    பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்

    நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் – மின்பிரபை

    வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்

    வாசலிடைக் கொன்றை மரம்.

    என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரனாரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமெனக் கூறிக் கட்டித்தழுவி உச்சி மோந்து சென்றனர். அப்புத்திரனாரே சின்னத்தம்பிப் புலவர். அவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரஞ் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதி பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய மேல்வருங்கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது:

    செந்தா தியன்மணிப் பூம்புலி யூரரைச் சேர்ந்துநிதம்

    சிதா தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்

    நந்தா வளஞ்செறி நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்

    அந்தாதி மாலையை வேதாட வேசர்க் கணிந்தனனே.

  10. kannabiran, RAVI SHANKAR (KRS) சொல்லுகின்றார்: - reply

    அருமையான பள்ளுப்பாட்டு தந்திருக்கீங்க! நன்றி பகீ!
    பள்ளுப் பாட்டில் வரும் இயற்கை வர்ணனைகளையும் பதிவாய் இடுங்களேன்!

    //இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு மாறாக ‘கண்ணனே காப்பு’ என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது//

    பாட்டில் தற்போது குழந்தையான கணபதியை, அவனையே அவனைக் காத்துக் கொள்ளச் சொல்லுதல் சிறப்பன்றே! அதனால் தான் ஏற்கனவே குழந்தையாய் வீர சாகசங்கள் புரிந்து ஆயரைக் காத்த கண்ணனை அழைக்கிறார் போலும் கவிஞர்!

    //சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக்//
    சூலம் திரித்து = சூலம் தரித்து??

  11. Kanags சொல்லுகின்றார்: - reply

  12. kannabiran, RAVI SHANKAR (KRS) சொல்லுகின்றார்: - reply

    அருமையான பள்ளுப்பாட்டு தந்திருக்கீங்க! நன்றி பகீ!
    பள்ளுப் பாட்டில் வரும் இயற்கை வர்ணனைகளையும் பதிவாய் இடுங்களேன்!

    //இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு மாறாக ‘கண்ணனே காப்பு’ என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது//

    பாட்டில் தற்போது குழந்தையான கணபதியை, அவனையே அவனைக் காத்துக் கொள்ளச் சொல்லுதல் சிறப்பன்றே! அதனால் தான் ஏற்கனவே குழந்தையாய் வீர சாகசங்கள் புரிந்து ஆயரைக் காத்த கண்ணனை அழைக்கிறார் போலும் கவிஞர்!

    //சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக்//
    சூலம் திரித்து = சூலம் தரித்து??

  13. பகீ சொல்லுகின்றார்: - reply

    கனக்ஸ், கண்ணபிரான் வருகைக்கும் தகவல்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

  14. பகீ சொல்லுகின்றார்: - reply

    கனக்ஸ், கண்ணபிரான் வருகைக்கும் தகவல்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

  15. பகீ சொல்லுகின்றார்: - reply

    கோபி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

  16. பகீ சொல்லுகின்றார்: - reply