கதிரைச் சிலேடை வெண்பா 6 -10
பாயிருள்சீக் கும்பகலும் பண்ணைவாய்ப் பைங்கூழுங்
காய்கதிரைக் காட்டு்ங் கதிரையே – மேயசடை
ஆறா னனத்தனவ னத்தற் கிறைமைதரும்
ஆறா னனத்த னகம் (6)
விற்கொண்ட காளையர்கண் மெல்லியலார் தோண்
கற்கண்டங் கூறுங் கதிரையே – அற்பார் மொழியிற்
உறுவர்பய முண்டாண் டொருவாவின் பீந்தான்
அறுவர்பய முண்டா னகம் (7)
வாசமடத் தேழையரும் வாவியிடைத் தாமரையுங்
காசிலன முண்ணுங் கதிரையே – மோசக்
கருவிளையாட் டம்மாயக் காமருல கெல்லாந்
திருவிளையாட் டம்மான் சிலம்பு (8)
அற்பூரு மன்பர் சிரத்து மலையகத்துங்
கற்பூர மேவுங் கதிரையே – பொற்பூரு
மஞ்சத்தான் றோற்று மறுகவரு வானடியே
மஞ்சத்தான் றோற்று மரண். (9)
மேயகொடி மாளிகையு மெய்யடியார் கூட்டமுமா
காயங் கடக்குங் கதிரையே – தீய
மடக்குஞ் சரத்தானை மாமுகனைப் போரின்
மடக்குஞ் சரத்தான் மலை (10)