திருக்கேதீஸ்வரம் – புகைப்படங்களாய்
தேவாரம் பெற்ற சிவஸ்தலங்களுள் இரண்டு இவ்விலங்கையில் உள்ளன. அவைகளில் ஒன்றாகிய திருகோணமலைக்குச் சம்பந்த மூர்த்தி நாயனார் திருப்பதிக மொன்றிருக்கின்றது. மற்றொன்றாகிய திருக்கேதீச்சுரத்துக்குத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்றுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பதிகமொன்றும் இருக்கின்றன. இத் திருக்கேதீச்சுரம் இவ்வடமாகாணத்தின் கண்ணுள்ள மன்னாருக்கு அதிசமீபத்திலிருக்கின்ற மாதோட்த்தினுள்ளது. இத் திருக்கேதீச்சுரம் அழிந்து காடாகக்கிடக்கின்றதே! புதிது புதிதாக இவ்விலங்கையில் எத்தனையோ கோயில்கள் கட்டப்படுகின்றனவே! நீங்கள் இந்த மகா ஸ்தலத்தைச் சிறிதும் நினையாததென்னையோ! இவ்விலங்கையிலுள்ள விபூதிதாரிகள் எல்லோருஞ் சிறிது சிறிது உபகரிக்கினும் எத்துணைப்பெருந்தொகைப்பொருள் சேர்ந்துவிடும்! இதை நீங்கள் எல்லீருஞ் சிந்தித்து இத் திருப்பணியை நிறைவேற்றுவீர்களாயின், அருட்கடலாகிய சிவபெருமான் உங்களுக்கு அநுக்கிரகஞ் செய்வர். – திருச்சிற்றம்பலம்
என்கின்ற ஆறுமுக நாவலர் பெருமானின் வேண்டுகை சைவ மக்களை எழுச்சிபெறச் செய்து, போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட, இரண்டாயிர்த்து ஐந்நூறு வருடங்களுக்கும் மேலான பழமைவாயந்த திருக்கேதீஸ்வரம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே மீள அமைக்கப்பெற்றது. இவ்வாலயத்தின் தற்போதய புகைப்படங்கள்.
பின்னூட்டங்களில்லை