பதிபவர்கள்

எல்லா இடத்திலயும் பதிபவர்கள் ஒன்றுகூடி கூட்டங்கள் வைக்கினம். எனக்கும் ஒரு ஆசை கூட்டம் வைக்க இல்ல. எத்தனை பேர் யாழ்ப்பாணத்தில இருந்து பதியினம் எண்டு அறிய. உங்களுக்கு யார் யார் யாழ்ப்பாணத்தில இருந்து பதியினம் எண்டு தெரிஞ்சால் எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ. அல்லது பதியிறனிங்களே ஒரு பின்னூட்டம் போடுங்கோ. மெத்தப்பெரிய உபகாரமா இருக்கும்.

குறிச்சொற்கள்: ,

3 பின்னூட்டங்கள்

 1. வசந்தன்(Vasanthan) சொல்லுகின்றார்: - reply

  முந்தி யாழ்.கோபி எண்டு ஒரு சிங்கன் உங்க இருந்து பதிஞ்சுகொண்டிருந்தவர். இப்ப ஆளைக்காணேல.
  இன்னொரு பெண் நூலகர் பதிஞ்சுகொண்டிருந்தவ. முடிந்தால் நீங்கள் ரெண்டு பேரும் சந்திக்கலாம்.
  நீர் உங்கயிருந்து யாழ்ப்பாண நிலைவரத்தைப் பற்றி அடிக்கடி அறிக்கை போடும்.
  பொருட்களின்ர தட்டுப்பாடு, முக்கியமான பொருட்களின்ர விலை எண்டு தொகுத்து அடிக்கடி நிலைமையை வெளியில கொண்டு வாரும்.
  முடிந்தால் சில படங்களையும் போடும்.

 2. வசந்தன்(Vasanthan) சொல்லுகின்றார்: - reply

  முந்தி யாழ்.கோபி எண்டு ஒரு சிங்கன் உங்க இருந்து பதிஞ்சுகொண்டிருந்தவர். இப்ப ஆளைக்காணேல.
  இன்னொரு பெண் நூலகர் பதிஞ்சுகொண்டிருந்தவ. முடிந்தால் நீங்கள் ரெண்டு பேரும் சந்திக்கலாம்.
  நீர் உங்கயிருந்து யாழ்ப்பாண நிலைவரத்தைப் பற்றி அடிக்கடி அறிக்கை போடும்.
  பொருட்களின்ர தட்டுப்பாடு, முக்கியமான பொருட்களின்ர விலை எண்டு தொகுத்து அடிக்கடி நிலைமையை வெளியில கொண்டு வாரும்.
  முடிந்தால் சில படங்களையும் போடும்.

 3. tharsan சொல்லுகின்றார்: - reply

  நானும் யாழ்பாணத்தில் இருந்துதான் ஆனால் பதிபவர் இல்லை சும்மா கிண்டுதல் கிலறுதல்