பெயர் வைத்த கதை ???
இது ஒண்டும் பெரிய கதையில்லை எண்டாலும் இந்த ஊரோடி எண்ட பெயர் என்னெண்டு வந்ததெண்டு சொல்லத்தானே வேணும். முதல்ல தெரிஞ்சது தெரியாததெண்டு எல்லா விசயத்தையும் பற்றி அலட்டுறதுதானே நாடோடி எண்டு வைப்பம் எண்டு தான் இருந்தனான். ஆனா நானெங்க நாடு நாடாப் போனனான். இடம்பெயர்ந்து ஊரூராத்தானே போனனான் அதுதான் ஊரோடி எண்டு வச்சனான். இன்னொரு காரணமும் இருக்கு பிறகொருமுறை சொல்லுறன்.
இப்ப ஒரு சிறுகவிதை எப்பவோ வசிச்சது. ஆனந்த விகடனோ குமுதமோ தெரியேல்ல
பசி
அவனுக்கு உடம்பில்
அவளுக்கு வயிற்றில்
பரிமாறிக்கொண்டார்கள்.
குறிச்சொற்கள்: அலட்டல்கள், ஊரோடி
முந்தி முந்திக் காலத்தில நாங்க சின்னப் பிள்ளையளா இருந்தபோது சிறுகதைகள் எழுதும் பழக்கம் ஊத்தவாளிப் பழக்கம் ஒன்று இருந்தது. ஒரு இடத்தை பழகும் முன்னரே இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது (ஒவ்வொரு ஒவ்வொரு வீடு வீடா மாறுற போது)ஏற்படுகிற பிரச்சினையை வச்சு கதை எண்டு எழுதினேன். தலைப்புக்காய் –
அப்ப உங்கள மாதிரி நான் சிந்தனா செய்யாட்டியும், நான் “நாடோடிகள்” என்று வைக்க நினைக்க பக்கத்தில இருந்த அறிவான தோழி “வீடோடிகள்” என்று வைக்குமாறு பரிந்துரைத்தா 🙂
பிறகு, கதை வெளிவந்ததா இல்லியா என்பது தெரிஞ்ச விசயம் தானே!! ஆனா “தெளிந்த” விசயம்:
நான் ஒரு வீடோடி!
எனவே,
Welcome ஊரோடி..
நீங்க போட்ட கவிதை படிக்கிறபோது வருகிற ஒன்று:
குழப்பம்
அவளுக்கு மனதில்
அவனுக்கு மூளையில்
பரப்பிக் கொன்றார்கள்
😉
என்ன இருந்தாலும் அறிவா யோசிச்சது எண்டு சொன்னதுக்கெண்டாயினும் ஒரு நன்றி சொல்லத்தானே வேணும். இவ்வளவு பெருந்தன்மை யாருக்கும் வராது.
இந்த பெயர் வித்தியசமாகவும் கவர்ச்சியாகவும் இருக்குது