ஊரோடி

தீபாவளி வாழ்த்துக்கள் – ௨௦௧௧

துன்பங்கள் மறைந்து இன்பங்கள் பெருக வலைப்பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் ஊரோடியின் மனங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன் ஊரோடி பகீ

25 ஐப்பசி, 2011

ஊரோடியை கேளுங்கள்!

நீண்டகாலமாகவே இருந்து வந்த ஒரு யோசனை இன்றுதான் சாத்தியமாகி உள்ளது. எனது மின்னஞ்சலுக்கு அடிக்கடி வேர்ட்பிரஸ், தமிழில் வேர்ட்பிரஸ் மற்றும் இணையமூடு வேலைசெய்தல் தொடர்பான கேள்விகள் வருவதுண்டு. அவற்றில் சில கேள்விகள் மீள மீள கேட்கப்படுபவையாக இருப்பதனால் அவற்றை பொதுவில் அனைவரும் பார்க்கக்கூடியதாக வைப்பதற்காக ஊரோடியை கேளுங்கள் என்ற இணையத்தை உருவாக்கியிருக்கின்றேன்.

வேர்ட்பிரஸ், ஜூம்லா, சிஎஸ்எஸ், இணைய மென்பொருள்கள், மக், இணையத்தூடு சம்பாதித்தல், மென்பொருள் தமிழாக்கம் போன்ற விடயங்களில் உங்களுக்கு எழும் கேள்விகளை நீங்கள் இங்கே கேட்கலாம். இதன்மூலம் பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களையும் தவிர்க்க முடியும்.

இவ்விணையத்தில் நான் மட்டும் பதிலளிப்பது என்றில்லாமல் பதில் தெரிந்த எவரும் பதிலளிக்க முடியும். இவ்விணையத்தளத்தை வேர்ட்பிரஸ் 3.1 தமிழ் மொழிபெயர்ப்புக்கான ஒரு பரிசோதனை இடமாகவும் பயன்படுத்த எண்ணியுள்ளேன்.

அன்புடன்
பகீ

28 தை, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழர்கள் அனைவருக்கும் நன்மை பெருகவும் வாழ்வு சிறக்கவும் ஊரோடியின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

14 சித்திரை, 2010