ஐடியாவை சொல்லுங்க, பணத்தை வெல்லுங்க

தமிழ் வலைப்பதிவுகளில் பொதுவாக ஆங்கில பதிவுகளில் காணப்படுவது போல போட்டிகள் வைக்கப்படுவது குறைவு. அதற்கான தேவைகளும் இல்லாதிருப்பது ஒரு காரணம். இதோ அனைவரும் இலகுவாக கலந்துகொள்ளக் கூடிய ஒரு போட்டி.

போட்டிப் பரிசுகள்
முதற்பரிசு :- 4000.00 இலங்கை உரூபாக்கள் அல்லது சமமான அமெரிக்க டொலர்கள்
இரண்டாம் பரிசு : 2000.00 இலங்கை உரூபாக்கள் அல்லது சமமான அமெரிக்க டொலர்கள்

இதைவிடவும் இப்போட்டியை பற்றி தங்கள் வலைப்பதிவூடாகவோ அல்லது twitter மற்றும் facebook ஊடாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்துபவர்களுக்கும் பரிசு உண்டு. அதற்கு நீங்கள் உங்களுக்கு விரும்பிய முறையில் மற்றவர்களுக்கு அறிவித்து பின் பின்னூட்டத்தில் அதனை தொடுப்போடு தெரிவிக்கவேண்டும்.

பரிசு: இருவருக்கு தலா 1000.00 இலங்கை உரூபாக்கள் அல்லது சமமான அமெரிக்க டொலர்கள்.

விபரம்:
அனேகம் பேர் எனது யாழ்ப்பாணம் இணையத்தளத்தை ஒருமுறையாவது பார்த்திருக்ககூடும் (யாழ்ப்பாணத்துடன் தொடர்புடையவர்களாயிருப்பின்). அவ்விணையத்தளம் தொடங்கப்பட்டு மூன்று வருட காலத்துள் பலமுறை மீளமீள வடிவமைப்பு செய்து வந்திருக்கின்றேன். இருப்பினும் அங்கிருக்கின்ற அனைத்து விடயங்களையும் சரியாக வௌிப்படுத்த ஒரு வடிவமைப்பை இதுவரை என்னால் உருவாக்க முடியவில்லை.

போட்டி:
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் முதற்பக்கத்திற்கு ஒரு கோட்டு வரிப்படம் (homepage layout mockup) ஒன்றை வரைந்து அனுப்ப வேண்டும். யாழ்ப்பாணம் இணையத்தளத்தூடு சென்று மற்றைய பக்கங்களுக்கும் Layout அனுப்ப விரும்பினால் அனுப்பலாம். நீங்கள் ஒரு கடதாசியில் வரைந்து scan செய்தோ அல்லது நேரடியாக கணினியில் வரைந்தோ அனுப்பலாம். layout கள் சரியாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும். புதுமையான Layout இற்கு முன்னிடம் வழங்கப்படும்.

விதிமுறைகள்
1. பரிசு இலங்கையராயின் வங்கி மூலமாகவும், வேறு நாட்டவராயின் paypal மூலமாகவும் அனுப்பப்படும்.
2. எவரும் பங்குபற்றலாம்.
3. layout கள் (bage@me.com) இற்கு மின்னஞ்சல் செய்யப்படவேண்டும். நான் பதிலிடுவேன்.
4. போட்டியை பிரபலப்படுத்துபவர்கள் sql query மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்
5. Layout இனை அனுப்புவர் பிரபலப்படுத்துவதிலும் பங்கு பற்றலாம்.
6. போட்டிக்காலம் 01-11-2011 தொடக்கம் 07-11-2011 வரை.

ஏதேனும் கேள்விகள் இருப்பின் கேளுங்கள்.

1 கார்த்திகை, 2011

இலகுவாய் ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக்கொள்ள Codecademy

கணினியில் Code எழுதுகிறவர்களை பார்த்து பலரும் பிரமித்துப்போவதுண்டு. இது எமக்குச்சரிவராது என்று எண்ணுபவர்களும் உண்டு. இதனை இலகுபடுத்தி அனைவரும் இலகுவாக Code எழுத கற்றுத்தரும் இடம்தான் Codecademy.

மிக இலகுவான ஆங்கிலத்தில் படிமுறை படிமுறையாக நீங்கள் இங்கு Code எழுத கற்றுக்கொள்ள முடியம். இதுவரையில் ஜாவாஸ்கிரிப்ட் தொடர்பான பாடங்கள் பல இணைக்கப்பட்டுள்ளன. இலவசமாக கணக்கொன்றை உருவாக்கிக்கொண்டு ஒவ்வொரு படிமுறையாக அவ்விணையத்தளத்திலேயே செய்து பாரக்கலாம். (குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்ளுவது உங்களைப்பொறுத்தது.)

நீங்கள் கற்றுக்கொண்டதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இங்கு வசதிகள் உண்டு.

30 ஐப்பசி, 2011

cufon மற்றும் font-face

இணையத்தளங்களை வடிவமைக்கும்போது அல்லது எங்களது சொந்த வலைப்பதிவுகளிலேயே வழமையான எழுத்துருக்கள் அல்லாது வேறு எழுத்துருக்களை பயன்படுத்த நாங்கள் விரும்புவதுண்டு. ஆனால் அனேக நேரங்களில் அது அனைவருக்கும் சரியாக வேலைசெய்யாது. அவ்வவ் எழுத்துருவை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அவ்வெழுத்துருக்கள் தெரியும். (முன்பு பாமினி எழுத்துருவில் இணையத்தளம் வைத்திருப்பவர்கள் எழுத்துருவையும் தரவிறக்க வழங்குவது இதற்காகவே.)

இந்த பிரச்சனையை பல விதங்களில் தீர்க்க முடிந்தாலும் பிரபலமான இரண்டு முறைகளை பற்றி இங்கே குறிப்பிடுகின்றேன்.

1. Font-face

இது CSS பதிப்பு 2 இல் பிரேரிக்கப்பட்டு CSS 3 இல் இப்பொழுது பாவனைக்கு வந்திருக்கின்றது. இருந்தாலும் இது Internet Explorer இல் பதிப்பு ஐந்திலேயே வேலை செய்யும் (அட!!). எனவே ஒரு எழுத்துருவை பயன்படுத்த அதனை கீழ்வருமாறு எங்கள் CSS கோப்பில் சேர்த்துக்கொண்டால் போதும்.

@font-face {
	font-family: Baamini;
	src: url('Baamini.otf');
}

ஆனால் பிரச்சனை என்னவென்றால் அனைத்து இணைய உலாவிகளும் இந்த கோப்பு வகையை ஏற்றுக்கொள்ளாது. ஒவ்வொரு இணைய உலாவியும் ஒவ்வொருவகையையே ஏற்றுக்கொள்ளும்.

1. Internet Explorer இல் EOT கோப்பு மட்டும் வேலை செய்யும்.
2. Mozilla Firefox இல் OTF மற்றும் TTF வேலை செய்யும்.
3. Safari மற்றும் Opera வில் OTF, TTF மற்றும் SVG வேலை செய்யும்
4. Google Chrome இல் TTF மற்றும் SVG வேலை செய்யும்.
5. WOFF அனேக பிந்திய பதிப்பு இணைய உலாவிகளில் வேலை செய்யும்.

இதனால் எல்லா உலாவிகளிலும் வேலைசெய்ய எங்கள் CSS கோப்பு பின்வருமாறு அமைய வேண்டும்.

@font-face {
    font-family: 'Baamini';
    src: url('baamini.eot');
    src: url('baamini.eot?#iefix') format('embedded-opentype'),
         url('baamini.woff') format('woff'),
         url('baamini.ttf') format('truetype'),
         url('baamini.svg#ZombieA') format('svg');
}

பின்னர் நீங்கள் இதனை பயன்படுத்த வழமை போல

font-family: Baamni;

என அழைத்துக்கொண்டால் போதுமானது.

இலகுவாக உங்கள் எழுத்துருவை இவ்வாறான எல்லா வடிவங்களுக்கும் இலவசமாக மாற்றிக்கொள்ள FONT Squirrel இன் @fontface generator பயன்படும்.

2. Cufon
Cufon ஆனது ஜாவாஸ்கிரிப்ட் இனை பயன்படுத்தி உங்களுக்கு விரும்பிய எழுத்துருவை பயன்படுத்த உதவும் ஒரு javascript library ஆகும். நீங்கள் இங்கே செல்வதன் மூலம் உங்கள் எழுத்துருவை ஒரு javascript கோப்பாக மாற்றிக்கொள்ள முடியும். பின்னர் உங்கள் இணையத்தளத்தில் நீங்கள் அக்கோப்பையும் cufon இனையும் கீழ்வருமாறு இணைத்துக்கொள்ள வேண்டும்.

<script src="cufon-yui.js" type="text/javascript"></script>
<script src="YourFont.font.js" type="text/javascript"></script>

இப்பொழுது உங்கள் எழுத்துருவை உங்கள் இணையத்தளத்தோடு இணைத்தாகிவிட்டது. அவ்வெழுத்துருவை பயன்படுத்த கீழ்வருமாறு ஜாவாஸ்கிரிப்டை இணைத்துக்கொள்ள வேண்டும்.

<script type="text/javascript">
Cufon.replace('h1'); 
Cufon.replace('h2');
</script>

Cufon இனை பயன்படுத்துவது தொடர்பில் மேலும் அறிய இங்கே வாருங்கள்.

குறிப்பு:-
எந்தவிதமான பிரச்சனையும் இன்றி அனைத்து உலாவிகளிலும் வேலைசெய்யக்கூடிய எழுத்துருக்களை கீழே தந்திருக்கின்றேன். இணையத்தளம் வடிவமைப்பவர்களுக்கு பயனுள்ளதாயிருக்கும்.

font-family: Arial, Helvetica, sans-serif;
font-family: 'Arial Black', Gadget, sans-serif;
font-family: 'Bookman Old Style', serif;
font-family: 'Comic Sans MS', cursive;
font-family: Courier, monospace;
font-family: 'Courier New', Courier, monospace;
font-family: Garamond, serif;
font-family: Georgia, serif;
font-family: Impact, Charcoal, sans-serif;
font-family: 'Lucida Console', Monaco, monospace;
font-family: 'Lucida Sans Unicode', 'Lucida Grande', sans-serif;
font-family: 'MS Sans Serif', Geneva, sans-serif;
font-family: 'MS Serif', 'New York', sans-serif;
font-family: 'Palatino Linotype', 'Book Antiqua', Palatino, serif;
font-family: Symbol, sans-serif;
font-family: Tahoma, Geneva, sans-serif;
font-family: 'Times New Roman', Times, serif;
font-family: 'Trebuchet MS', Helvetica, sans-serif;
font-family: Verdana, Geneva, sans-serif;
font-family: Webdings, sans-serif;
font-family: Wingdings, 'Zapf Dingbats', sans-serif;
28 ஐப்பசி, 2011