அடொபி நிறுவனம் Brackets என்கின்ற பெயரில் ஒரு புதிய இலவச திறமூல தொகுப்பான் ஒன்றினை உருவாக்கி வருகின்றது. இன்னமும் அல்பா பதிப்பில் இருக்கும் இதனை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த முடியும்.

இந்த தொகுப்பானின் சிறப்பம்சம், இது HTML5, CSS3 மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் இனை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதாகும்.

மேலதிக தகவல்களுக்கு: http://brackets.io
தரவிறக்க: https://github.com/adobe/brackets/downloads

14 ஆவணி, 2012

Source Sans Pro – அடொபியிடமிருந்து ஒரு திறமூல எழுத்துரு

எழுத்துரு உருவாக்கங்களிலும், எழுத்துரு தரப்படுத்தலிலும் முன்னணி வகிக்கின்ற நிறுவனங்களில் ஒன்றான அடொபி நிறுவனம், source sans pro என்கின்ற பெயரில் திறமூல மென்பொருள் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

திறமூல எழுத்துருவாய் இது வெளியிடப்பட்டிருப்பதனால், புதிதாக எழுத்துரு உருவாக்குபவர்களுக்கும் இது மிகப் பயனுள்ளதாய் இருக்கும்.

மேலதிக தகவல்களுக்கு : http://blogs.adobe.com/typblography/2012/08/source-sans-pro.html
தரவிறக்க : http://sourceforge.net/projects/sourcesans.adobe/files/

7 ஆவணி, 2012

Tomahawk Media Player

எங்கள் கணினியில் உள்ள பாடல்களை கேட்க பல மென்பொருள்கள் உதவுகின்றன. வின்டோஸ் இல் Windows Media Player, மக் இல் iTunes என இயல்பிருப்பாகவே மென்பொருகள் இருந்தாலும், Tomahawk அவற்றினை விட சிறப்பனாதும், திறமூல நிரலையுடையதுமான ஒரு மென்பொருள்.

உங்கள் கணினியில் இருக்கின்ற பாடல்களை மட்டுமல்லாது இணைவழி சேவைகளான youtube, soundcloud, spotify, last.fm, grooveshark போன்ற பல்வேறு சேவைகளூடாகவும் பாடல்களை இம்மென்பொருளை பயன்படுத்தி கேட்க இயல்வது மிகுந்த சிறப்பான வசதியாகும். இம்மென்பொருள் அனைத்து இயங்கு தளங்களுக்கும் கிடைக்கின்றது.

தரவிறக்க: http://www.tomahawk-player.org

9 வைகாசி, 2012