துர்க்காபுரம் – தெல்லிப்பளை

நீண்ட நாட்களின் பின்னர் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலிக்கு செல்லும் வாய்ப்பு இன்று கிடைத்தது. வாசலிலேயே அமர்ந்திருந்து கண்களாலேயே காரியங்களை செய்விக்கும் சிவத்தமிழச்செல்வியை தவிர ஏனைய அனைத்தும் அவ்வவ்வாறே அழகாய் இருந்தன.

சில படங்கள் உங்களுக்காக.
குறிச்சொற்கள்: , , , , ,

4 பின்னூட்டங்கள்

 1. மோகன் சொல்லுகின்றார்: - reply

  இந்த கோயிலின் படங்களில் கூட மனித நடமாட்டம் இல்லாத ஒரு வெறுமை தெரிகிறது. ஈழம் குறித்த பல செய்திகளை படிக்கும் போது நெஞ்சு கணக்கத்தான் செய்கிறது. எவ்வளது அழகான கோயில்கள்… எத்தனை அருமையான ஊர்கள்… இவற்றை நிம்மதியாய் தரிசனம் செய்வதற்கு கூட முடியவில்லை. இனப்பிரச்சனை தீரும் நாளில் எம்போன்றோரும் உங்கள் ஊருக்கு வர இயலும். அதுவரையில் நானோ, நீங்களோ இந்த மண்ணில் இருப்போமா தெரியவில்லை.

  படங்களின் நேர்த்தியையும் சிற்ப வேலைப்பாடுகளையும் சொல்லவந்தவன் இப்படி கருத்துக்களை திசை திருப்பிவிட்டேன். படங்கள் அத்தனையிலும் ஏதோ ஒரு இனம் புரியாத மெளனம் தெரிகிறதே… ஆள் அரவமற்ற வேளையில் எடுக்கப்பட்டதா பகீ?

 2. பகீ சொல்லுகின்றார்: - reply

  இந்த படங்களை நான் உண்மையில் வெள்ளிக்கிழமை காலையில் எடுத்தேன். விடயம் என்னவெனில் இந்த கோவில் இருக்கும் பாதை அடிக்கடி இராணுவ வாகன தொடரணிக்காக தடைசெய்யப்படுவதால் மக்கள் குறைவாக இருக்கின்றார்கள்.

  உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி மோகள்.

 3. மோகன் சொல்லுகின்றார்: - reply

  நன்றி பகீ…

 4. vasu சொல்லுகின்றார்: - reply

  I hope i will come here one fine day.