புகைப்படங்களாய் யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணக்குடாநாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. மிகப்பலம்வாய்ந்த அரசொன்றினை கொண்டிருந்த இது, இதன் மிகப்பலமான காலகட்டத்தில் இந்தியாவின் இராமேஸ்வரம் தொடக்கம் புத்தளம் வரையிலாக பரந்து விரிந்த அரசொன்றினை கொண்டிருந்து. இன்று வீதிகள் தோறும் நிறைந்திருக்கும் ஆலயங்களும் கல்விச்சாலைகளும் அதன் பெருமையை விளப்ப வல்லன.

சிறியதும் பெரியதுமாய் ஏறத்தாள மூன்றாயிரம் இந்து ஆலயங்களும் குறைவிலாத கிறீத்தவ தேவாலயங்களும் இன்றும் நிமிர்ந்து நின்று யாழ்ப்பாணத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பன.. கீழே யாழ்ப்பாணத்தை சூழ நான் எடுத்த புகைப்படங்களில் சில

இலகு கருதி படங்களை சிறிதாக்கி பதிவிட்டுள்ளேன். ஏதாவது காரணத்திற்காக பெரிய படம் தேவைப்படுவோர் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்

மிகமிக அரிதான பெருக்கமரங்களில் ஒன்று. ஒல்லாந்தர் காலத்து இம்மரம் இன்னமும் புங்குடுதீவில் நிமிர்ந்து நிற்கின்றது.

ஆதவன் மறையும் மாலைநேரத்தின் அழகிய பொழுது, அனலைதீவின் கடற்கரையில்..

யாழ்ப்பாணத்திலும் அருகி வரும் திருக்கை மாட்டு வண்டில்கள்.

தமிழும் சைவமும் தந்த நல்லைநகர் ஆறுமுக நாவலர் வீட்டில் இன்னமும் எஞ்சியிருக்கும் சுவர்

யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்கள்

மாலை நேரம் மதிமயங்கும் வேளை

சித்தன்கேணி சிவாலயத்தின் பூங்காவனத்திற்கு அணிசேர்க்கும் அழகிய மயில்.

நிறைந்த அமைதியாய், பறாளாயிலுள்ள தீர்த்தக்கேணி

பனைமரங்கள் மட்டுமல்ல பரந்து விரிந்திருக்கும் பெருமரங்களும்தான் – இணுவில் காரைக்கால் சிவன்கோவில் சூழல்

ஆனந்த நடமிடும் நடராஜப்பெருமான் – உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் ஆலயம்

யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள அழகிய தீவுகள் – எழுவைதீவு

யாழ்ப்பாணத்தை சூழ பரந்து விரிந்திருக்கும் நீலக்கடல்

யாழப்பாண அரசை இன்னமும் நினைவுறுத்த நிமிர்ந்து நிற்கும் மந்திரிமனை

காடுகளாகும் குடிமனைகள்

புனருத்தாரணம் செய்யப்பட்ட வேலணை முத்துமாரி அம்மன் ஆலயம்

அளவெட்டி பெருமாக்கடவையில் பரந்து விரிந்திருக்கும் வயல்வெளி

யாழ்ப்பாணத்தில் இன்னமும் சில இடங்களில் காணக்கூடிய கல்வேலிகள்

அமைதியாய் நிமிர்ந்து நிற்கும் பண்டைய கலங்கரை விளக்கு களில் ஒன்று.

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

17 பின்னூட்டங்கள்

 1. Karthikeyan சொல்லுகின்றார்: - reply

  Migavum arumai 🙂

 2. கன்கொன் சொல்லுகின்றார்: - reply

  அழகான படங்கள்…
  பகிர்விற்கு நன்றி…

 3. நிரூஜா சொல்லுகின்றார்: - reply

  அருமை…

 4. லோஷன் சொல்லுகின்றார்: - reply

  அருமையான படத் தொகுப்பு..

 5. Ketha சொல்லுகின்றார்: - reply

  இந்த படங்கள், மண்ணின் மீதான உன் நேசத்தையும், தேடலையும், உனது பயணங்களையும் உனது பார்வையையும் ஒருசேர தருகின்றன. பகிர்வுக்கு நன்றி.

 6. nilavalavan சொல்லுகின்றார்: - reply

  அருமையான படத் தொகுப்பு.

 7. johan Paris சொல்லுகின்றார்: - reply

  பகீ!அருமையான படங்கள்.
  நீங்கள் தேர்ந்த புகைப்படக் கலைஞர் கூட. பிரமாதம்
  இறுதிப்படத்தில் உள்ள கலங்கரை விளக்கம் எங்கேயுள்ளது.

  • பகீ சொல்லுகின்றார்: - reply

   யோகன் அண்ணா,

   நீண்டகாலத்தின் பின் உங்கள் பின்னூட்டம் காண்பதில் மகிழ்ச்சி. கலங்கரை விளக்கம் அனலைதீவில் இன்னமும் இருக்கின்றது.

 8. க.அபிமன்யு சொல்லுகின்றார்: - reply

  யாழ்ப்பாணத்தின் பெருமைகளை சொல்லும் வகையில் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளது.

 9. johan Paris சொல்லுகின்றார்: - reply

  இந்த வண்டியை திருக்கல் என்பதா? திருக்கை என்பதா?

 10. sivanadiyan சொல்லுகின்றார்: - reply

  ஐயா பகீ பதிவாளரே

  நல்ல வர்ண படங்கள்
  யாழ்ப்பாணத்தின் பெருமைகளை சொல்லும் வகையில் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளது
  உங்கள் பணி சிறக்கட்டும் தொடரட்டும் உங்கள் பணி
  நட்புடன்
  சிவனடியான்

 11. ச.இலங்கேஸ்வரன் சொல்லுகின்றார்: - reply

  இரண்டு தடவைகள் நெடுந்தீவிற்கு பாடசாலை தரிசிப்பிற்கு சென்றபோதும் அங்குள்ள சில அற்புதமான இடங்களை பார்க்க இயலாமல் போய்விட்டது.தங்களின் படங்களின் ஊடாக அவற்கை பார்க்க கிடைத்தமைக்கு நன்றிகள்

  • பகீ சொல்லுகின்றார்: - reply

   இலங்கேஸ்வரன் வாங்க,

   இவற்றில் சில அனலைதீவில் எடுக்கப்பட்டவை. நெடுந்தீவு அல்ல…

 12. ஜிகிதரன் சொல்லுகின்றார்: - reply

  அழகான படங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி