நிழற்படம்

துர்க்காபுரம் – தெல்லிப்பளை

நீண்ட நாட்களின் பின்னர் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலிக்கு செல்லும் வாய்ப்பு இன்று கிடைத்தது. வாசலிலேயே அமர்ந்திருந்து கண்களாலேயே காரியங்களை செய்விக்கும் சிவத்தமிழச்செல்வியை தவிர ஏனைய அனைத்தும் அவ்வவ்வாறே அழகாய் இருந்தன.

சில படங்கள் உங்களுக்காக.
18 ஆடி, 2008

இந்துக்களின் போரில் வென்றது யாழ் இந்து.

இந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 222 ஓட்டங்கள் குவிக்க, தொடர்ந்து வந்த பெரிதும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கொக்குவில் இந்து 209 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. முதல் முறையாக சர்வதேச தரத்திலான நிற உடைகள், மற்றும் அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் என களைகட்டியிருந்தது போட்டி. கீழே கைப்பேசியில் எடுத்த சில படங்கள். மேலும் சில படங்கள் விரைவில். (படங்களை தரவேற்றிறது பெரிய சிக்கலாயிருக்கப்பா…)
12 வைகாசி, 2008

Windows, Mac ஒரு ஒப்பீடு படமாய்..

இந்த ஒப்பீடு சில காலத்துக்கு முன்னர் Gizmodo இணையத்தில் எடுத்தது. பார்க்காதவர்களுக்காக இங்கேயும்..
7 வைகாசி, 2008