உபுந்து (ubuntu)

8 மில்லியன் பயனாளர்களுக்கு மேலதிகமாக நானும் இப்ப உபுந்துவை பயன்படுத்த தொடங்கிற்றன். நண்பர் ஒருவரிடமிருந்து இறுவட்டு கிடைச்சுது. முகப்பில் “உபுந்து – மனிதர்களுக்கான இயங்குதளம்” வாசகம் (அப்ப இவ்வளவு காலமும் நான் பாவிச்ச மான்ட்ரேவ்?????). சரி என்னதான் இருக்கெண்டு பாப்பம் எண்டு நிறுவியதில இப்ப நானும் ஒரு பயனாளர் ஆகிட்டன்.

பாவிச்சு பாத்த இரண்டு நாளில எனக்கு தெரிஞ்ச நல்லதுகள்.

 • வழமைபோல இலவசம் (பதிஞ்சு விட்டா இறுவட்டு வீட்டுக்கே இலவசமா அனுப்பி வைப்பினமாம்)
 • சுகமான add/remove softwares கருவி (வேணுமெண்டா வேற லினிக்ஸ் இயங்குதளத்திலயும் நிறுவலாம்)
 • மேம்படுத்தப்பட்ட gnome gui. (வழமையா பாவிச்சது KDE தானே)
 • உபுந்துவுக்கான ATI VGA driver.
 • அனேகமான வன்பொருட்களுடன் ஒத்திசைதல். (மான்ட்ரேவ், நொப்பிக்ஸ் இதுகளும் ஒத்திசையுதுதான்)
 • அபி வேர்ட், ஓபின் ஒவ்வீஸ், நெருப்பு நரி எல்லாம் இதோடயே வருகுது. (மற்றதுகளிலயும்தான்).
 • எல்லாவகையான ADSL மொடங்களையும் அடையாளப்படுத்தி தானே நிறுவிக் கொள்ளல்.
 • மேம்படுத்தப்பட்ட Disk manager, My computer.
 • plug and play devices உடன் மிகுந்த ஒத்திசைவை காட்டல்.


எனக்கு வந்த பிரச்சனைகள்.

 • என்ர மொடத்தை (Motorola) மற்ற லினிக்ஸ் இயங்குதளங்கள் மாதிரியே கண்டுகொள்ளாமலே விட்டுட்டுது. மான்ட்ரேவுக்காவது driver இருந்துது. இன்னும் configure பண்ணி முடியேல்ல இப்பதான் linmodems க்கு போயிருக்கிறன். ஆருக்காவது தெரியுமெண்டா சொல்லுங்கோ. (சுகமான வழி)
 • wvdial சரிவரமாட்டன் எண்டுது.
 • windows partition க்க போறதுக்கு தலைகீழா நிக்க வைச்சிட்டுது. ஒரு மாதிரி இப்ப உள்ள போயிட்டன். (terminal ஐ பாவிக்க வைச்சிட்டுது)

இப்பதானே பாவிக்க தொடங்கியிருக்கிறன். போகப்போக ஏதாவது புதுசா கண்டா உங்களுக்கும் சொல்லுறன். (கூகிள் உபுந்துவோட சேந்து மலிவான கணினிகளை விக்கப்போகுது எண்டும் கேள்விப்பட்டன் உண்மையோ தெரியேல்ல) உங்களுக்கும் ஏதாவது அனுபவமிருந்தா பின்னூட்டமா போடுங்கோவன்.

குறிச்சொற்கள்: ,

4 பின்னூட்டங்கள்

 1. Baarathi சொல்லுகின்றார்: - reply

  இது பற்றி:
  இங்கோ (http://tamilgnu.blogspot.com/) எங்கோ படித்தது ஞாபகம். ஆனால் எங்கென மறந்துவிட்டேன்.

 2. Baarathi சொல்லுகின்றார்: - reply

  இது பற்றி:
  இங்கோ (http://tamilgnu.blogspot.com/) எங்கோ படித்தது ஞாபகம். ஆனால் எங்கென மறந்துவிட்டேன்.

 3. பகீ சொல்லுகின்றார்: - reply

  பாரதி வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. நானம் அத்தளத்தின் வாசகனே

 4. பகீ சொல்லுகின்றார்: - reply

  பாரதி வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. நானம் அத்தளத்தின் வாசகனே