வின்டோஸ் இயங்குதளத்திலுள்ள மிகவும் பாதுகாப்பற்ற மென்பொருள் Firefox

Bit9 என்கின்ற பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் வின்டோஸ் இயங்குளத்தில் இயங்குகின்ற மிகவும் பாதுகாப்பற்ற மென்பொருள்கள் பன்னிரண்டை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆச்சரியமூட்டக்கூடிய வகையில் இதில் முதலிடம் பெற்றிருப்பது Firefox.

firefox

இவ்வாறு பட்டியல் படுத்தப்பட்டிருக்கும் மென்பொருள்களில் ஏழு எட்டு மென்பொருள்கள் மைக்ரோசொவ்ற் நிறுவனத்திற்கு நேரடிப் போட்டியுடைய மென்பொருட்களாகையினால் Bit9 நிறுவனத்திற்கு மைக்ரோசொவ்ற் பணம் கொடுத்து இப்பட்டியலை வெளியிட்டிருக்கின்றது என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக இன்று IE இல் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய குறைபாடு மேலும் இதற்கு வலுச்சேர்த்துள்ளது.

பட்டியல் படுத்தப்பட்டுள்ள மென்பொருட்கள்.

Mozilla Firefox
Adobe Flash and Adobe Acrobat
EMC VMware Player,Workstation and other products
Sun Java JDK and JRE, Sun Java Runtime Environment (JRE)
Apple QuickTime, Safari and iTunes
Symantec Norton products (all flavors 2006 to 2008)
Trend Micro OfficeScan
Citrix Products
Aurigma Image Uploader, Lycos FileUploader
Skype
Yahoo Assistant
Microsoft Windows Live (MSN) Messenger

மேலும் அறிய இங்கு வாருங்கள்.

குறிச்சொற்கள்: , ,

5 பின்னூட்டங்கள்

  1. ஜமால் A M சொல்லுகின்றார்: - reply

    Microsoft Windows Live (MSN) Messenger – இதுவுமா

    ஆனாலும் Microsoft Windowsஐ நம்பி எதுவும் செய்ய இயலாது.

    ———————

    பதிவுக்கு சம்மந்தம் இல்லாமல்:

    பிளாக்கை வடிவமைக்க ஏதேனும் மென்பொருள் உள்ளதா.

    தெரிவிக்கவும் அல்லது பதிவிடவும்.

    நன்றி

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    ஜமால் வாங்க,

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    பதிவை வடிவமைக்க நான் பயன்படுத்தும் மென்பொருட்கள் அடொபி போட்டோசொப், CSS Edit, Text Mate. நீங்கள் வின்டோஸ் இயங்குதளத்தில் உள்ளவராயின் பின்னைய இரண்டு மென்பொருள்களுக்கும் பதில் Notepad ++ பயன்படுத்தலாம்.

    அல்லது Adobe Dreamweaver பயன்படுத்தலாம். இங்கு வேர்ட்பிரஸ் மென்பொருளுக்கான ஒரு plug-in உம் உள்ளது.

  3. balaji சொல்லுகின்றார்: - reply

    டோறேன்ட் பைல் இறக்குமதி செய்இறுக்குவது வது கூகிள் குரோம் முடியாய வில்லை . எப்படி

  4. arun m சொல்லுகின்றார்: - reply

    வணக்கம்
    நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

    http://www.thamizhstudio.com/

    Add a Gadget – ல் இதை பயன்படுத்துக

    வழி –> Add a Gadget –> select HTML/JavaScript

    Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

    Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>

  5. பகீ சொல்லுகின்றார்: - reply

    பாலாஜி வாங்க,

    Torrent கோப்பினை தரவிறக்க Torrent மென்பொருள் ஒன்றினை பயன்படுத்தவேண்டும். மிகவும் பிரபலமான Torrent மென்பொருள் uTorrent.

    நீங்கள் torrent கோப்பு சம்பந்தமான தகவல்களை கொண்ட சிறிய text கோப்பினை (.torrent)விரும்பினால் Google Chrome இனால் தரவிறக்க முடியும். அதில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.