மென்பொருள்

வின்டோஸ் இயங்குதளத்திலுள்ள மிகவும் பாதுகாப்பற்ற மென்பொருள் Firefox

Bit9 என்கின்ற பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் வின்டோஸ் இயங்குளத்தில் இயங்குகின்ற மிகவும் பாதுகாப்பற்ற மென்பொருள்கள் பன்னிரண்டை கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆச்சரியமூட்டக்கூடிய வகையில் இதில் முதலிடம் பெற்றிருப்பது Firefox.

firefox

இவ்வாறு பட்டியல் படுத்தப்பட்டிருக்கும் மென்பொருள்களில் ஏழு எட்டு மென்பொருள்கள் மைக்ரோசொவ்ற் நிறுவனத்திற்கு நேரடிப் போட்டியுடைய மென்பொருட்களாகையினால் Bit9 நிறுவனத்திற்கு மைக்ரோசொவ்ற் பணம் கொடுத்து இப்பட்டியலை வெளியிட்டிருக்கின்றது என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக இன்று IE இல் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய குறைபாடு மேலும் இதற்கு வலுச்சேர்த்துள்ளது.

பட்டியல் படுத்தப்பட்டுள்ள மென்பொருட்கள்.

Mozilla Firefox
Adobe Flash and Adobe Acrobat
EMC VMware Player,Workstation and other products
Sun Java JDK and JRE, Sun Java Runtime Environment (JRE)
Apple QuickTime, Safari and iTunes
Symantec Norton products (all flavors 2006 to 2008)
Trend Micro OfficeScan
Citrix Products
Aurigma Image Uploader, Lycos FileUploader
Skype
Yahoo Assistant
Microsoft Windows Live (MSN) Messenger

மேலும் அறிய இங்கு வாருங்கள்.

16 மார்கழி, 2008

Sun released JavaFX 1.0

Sun நிறுவனம் தனது ஜாவா மொழியினை இணைய மென்பொருட்களை உருவாக்குவதற்கு மட்டுமென்று மேம்படுத்தி இனை வெளியிட்டுள்ளது. இது அண்மைக்காலமாக அடொபி நிறுவனத்தின் Flex மென்பொருள் உருவாக்கி வந்த சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

javaFX 1.0

மேலும் அறிய இங்கு வாருங்கள்.

5 மார்கழி, 2008

Parallels released Parallels Desktop 4.0

அப்பிள் கணினிகளில் வின்டோஸ் மென்பொருள்களை இயங்க வைக்க உதவும் மென்பொருள்களில் பிரபலமான மென்பொருள் Parallels நிறுவனத்தின் Parallels Desktop for Mac. இவர்கள் தமது மென்பொருளின் பதிப்பு நான்கினை இப்போது வெளியிட்டிருக்கின்றார்கள்.

அப்பிள் கணினி பயன்படுத்துபவர்கள் இம்மென்பொருளினை பயன்படுத்தி விரும்பிய வின்டோஸ் மென்பொருள்களை தங்கள் கணினிகளில் நிறுவிக்கொள்ள முடியும்.

பதிப்பு நான்கில் உள்ள முக்கிய வசதிகளாவன..

64-bit OS support
4-way multiprocessor support
8 GB allocable to the guest OS
DirectX 9 with Pixel Shader 2.0
OpenGL 2.1
256 MB of video RAM allowed (up from 64)
Leopard Server as a guest.

13 கார்த்திகை, 2008