Posts Tagged "இணையத்தளம்"

புதிய தேடுபொறி Hakia

வழமையான எங்கள் கூகிள், யாகூ போலல்லாது ஒரு புதிய தேடுபொறி hakia. இந்த தேடுபொறி தேடப்படும் சொல்லின் பிரபல்யத்தை கருத்தில் கொள்ளாது மனித மூளையினைப்போன்று தேடப்படும் விடயத்தின் கருத்தொற்றுமையினை மட்டுமே கவனத்தில் கொள்ளுகின்றது. இதனால் இங்கு இணையப்பக்கங்களல்லாது இணையப்பக்கங்களில் உள்ள விடயங்களே பட்டியற்படுத்தப்படுகின்றன.

இந்த தேடுபொறி இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே வேலைசெய்கின்றது. அத்தோடு எழுத்துப்பிழைகளையும் சரியாக கவனிப்பதில்லை. இது இன்னமும் பேற்றா நிலையில் தான் உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

ஒரு முறை தேடிப்பார்த்துவிட்டு எனக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கள்.

3 தை, 2007