Posts Tagged "வலைப்பதிவு"

ஐடியாவை சொல்லுங்க, பணத்தை வெல்லுங்க

தமிழ் வலைப்பதிவுகளில் பொதுவாக ஆங்கில பதிவுகளில் காணப்படுவது போல போட்டிகள் வைக்கப்படுவது குறைவு. அதற்கான தேவைகளும் இல்லாதிருப்பது ஒரு காரணம். இதோ அனைவரும் இலகுவாக கலந்துகொள்ளக் கூடிய ஒரு போட்டி.

போட்டிப் பரிசுகள்
முதற்பரிசு :- 4000.00 இலங்கை உரூபாக்கள் அல்லது சமமான அமெரிக்க டொலர்கள்
இரண்டாம் பரிசு : 2000.00 இலங்கை உரூபாக்கள் அல்லது சமமான அமெரிக்க டொலர்கள்

இதைவிடவும் இப்போட்டியை பற்றி தங்கள் வலைப்பதிவூடாகவோ அல்லது twitter மற்றும் facebook ஊடாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்துபவர்களுக்கும் பரிசு உண்டு. அதற்கு நீங்கள் உங்களுக்கு விரும்பிய முறையில் மற்றவர்களுக்கு அறிவித்து பின் பின்னூட்டத்தில் அதனை தொடுப்போடு தெரிவிக்கவேண்டும்.

பரிசு: இருவருக்கு தலா 1000.00 இலங்கை உரூபாக்கள் அல்லது சமமான அமெரிக்க டொலர்கள்.

விபரம்:
அனேகம் பேர் எனது யாழ்ப்பாணம் இணையத்தளத்தை ஒருமுறையாவது பார்த்திருக்ககூடும் (யாழ்ப்பாணத்துடன் தொடர்புடையவர்களாயிருப்பின்). அவ்விணையத்தளம் தொடங்கப்பட்டு மூன்று வருட காலத்துள் பலமுறை மீளமீள வடிவமைப்பு செய்து வந்திருக்கின்றேன். இருப்பினும் அங்கிருக்கின்ற அனைத்து விடயங்களையும் சரியாக வௌிப்படுத்த ஒரு வடிவமைப்பை இதுவரை என்னால் உருவாக்க முடியவில்லை.

போட்டி:
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் முதற்பக்கத்திற்கு ஒரு கோட்டு வரிப்படம் (homepage layout mockup) ஒன்றை வரைந்து அனுப்ப வேண்டும். யாழ்ப்பாணம் இணையத்தளத்தூடு சென்று மற்றைய பக்கங்களுக்கும் Layout அனுப்ப விரும்பினால் அனுப்பலாம். நீங்கள் ஒரு கடதாசியில் வரைந்து scan செய்தோ அல்லது நேரடியாக கணினியில் வரைந்தோ அனுப்பலாம். layout கள் சரியாக குறிக்கப்பட்டிருக்க வேண்டும். புதுமையான Layout இற்கு முன்னிடம் வழங்கப்படும்.

விதிமுறைகள்
1. பரிசு இலங்கையராயின் வங்கி மூலமாகவும், வேறு நாட்டவராயின் paypal மூலமாகவும் அனுப்பப்படும்.
2. எவரும் பங்குபற்றலாம்.
3. layout கள் (bage@me.com) இற்கு மின்னஞ்சல் செய்யப்படவேண்டும். நான் பதிலிடுவேன்.
4. போட்டியை பிரபலப்படுத்துபவர்கள் sql query மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்
5. Layout இனை அனுப்புவர் பிரபலப்படுத்துவதிலும் பங்கு பற்றலாம்.
6. போட்டிக்காலம் 01-11-2011 தொடக்கம் 07-11-2011 வரை.

ஏதேனும் கேள்விகள் இருப்பின் கேளுங்கள்.

1 கார்த்திகை, 2011

வலைப்பதிவில் ஒரு வருடம்

“ஊரோடி – பெரிதாக ஒன்றும் யோசிக்காமலேயே இருக்கிற நேரத்தில ஏதாவது அலட்டுவம் என்டு தான் பதியத் தொடங்கியிருக்கிறன். சயந்தன்ர பதிவுகள் தான் இதை தொடங்கத் தூண்டினது. இருந்தாலும் வழமையா எந்த விசயம் எண்டாலும் இழுத்தடிக்கிறனான் இதைமட்டும் ஏனோ படுவேகமா செய்திட்டன். அரைவாசியில் விடப்போறனோ தெரியேல்லை. காலம் நிலைமை எல்லாம் யாழ்ப்பாணத்திலை ஓரளவுக்கெண்டான்ன சரியா இருந்தா தொடர்ந்தும் ஏதாவது அலட்டுவன் எண்டுதான் நினைக்கிறன். இன்னும் தமிழை ரைப் பண்ண ஒரு வசதியும் செய்யேல்ல இப்பயும் சுராதான்ர புதுவையைத்தான் பவிச்சு எழுதுறன். விரைவில அதுக்கும் ஒரு வழிசெய்திருவன் எண்டுதான் நினைக்கிறன். தமிழ்மணம் வலைத்தளத்தில இருந்து இந்த ரெம்பிளற்றை எடுத்தனான். சின்ன மாற்றங்கள்தான். மேலும் மேம்படுத்த யோசிக்கிறன். யாழ்ப்பாணம் போய் என்ர கணனியிலை இருந்தாத்தான் சரிவரும்.”

இது சரியா ஒரு வருசத்துக்கு முதல் இந்த வலைப்பதிவை ெதாடங்கேக்க நான் எழுதினது.

ெபரிய சாதனை எண்டு ெசால்லுறதுக்கு ஒண்டும் இல்லை, இருந்தாலும் யாழ்ப்பாணத்தில இருக்கிற இருந்த இைணய வசதி பல ேநரங்களில என்னை இந்த வலைப்பதிவை விட்டு ேபாகத்தூண்டி இருக்குது.

பிறகு இப்ப நன்றி ெசால்லுற ேநரம். முதலில இந்த வலைப்பதிவிற்கு என்னை வரப்பண்ணின சயந்தன். பிறகு பின்னூட்டங்களால ஊக்கம் அளிச்ச ேயாகன் அண்ணா. ெபயர் ெசால்ல ெவளிக்கிட்டா எல்லாற்றையும் ெசால்லோணும். அைதவிட ெபாதுவா புலம் ெபயர்ந்த ஈழத்து பதிவர்கள் எண்டு ெசான்னா சுகம். அைதவிட எல்லா பதிவர்களுமே ஒரு விதத்தில உற்சாகம் ஊட்டினார்கள் என்றுதான் ெசால்ல ேவணும். ேவற என்ன ஒரு வருசத்தில இரண்டு தரம் அைடப்பலகை மாத்தினான். நீங்களும் பாருங்கோ.

சில கணக்குகளை பாருங்க. வந்து ேபானாக்கள் பற்றி.
பிறகு ெகாஞ்ச காசும் உைழச்சனான். அைதயும்பாருங்க.ேவறென்ன வந்தனீங்க ஒரு பின்னூட்டத்தை ேபாட்டுட்டு ேபாங்க.

30 புரட்டாதி, 2007

வானம்பாடி


கடைசியா யாழ்ப்பாணத்தில இருந்து பதியப்படிற பதிவு ஒண்டை கண்டு பிடிச்சிட்டன். வானம்பாடி என்ற பெயரில தான் பதியப்படுது. கலிஸ் எண்டவர் பதியிறார். பதியத்தொடங்கி இரண்டு மூன்று நாள்தான் ஆகுது. நீங்களும் ஒருக்காப்பாத்து வரவேற்றாத்தானே ஒரு உற்சாகமா இருக்கும். எங்க உங்கட பின்னூட்டங்களை பாப்பம்.

22 கார்த்திகை, 2006