Posts Tagged "ரொறன்ற்"

இந்த வார இணையம் – ஜன 29

கோப்பு பரிமாற்றம் மற்றும் Megaupload

படங்கள், மென்பொருள்கள் மற்றும் பாடல்களை இணையமூடாக பரிமாறுவதில் filesharing இணையத்தளங்கள் பெரும்பங்கு வகித்து வந்தன. பொதுவாக torrent இனை பயன்படுத்தாதவர்களுக்கு இத்தளங்கள் இலவசமாய் மென்பொருள்களையும் சினிமா படங்களையும் பெற்றுக்கொள்ள இவை வரப்பிரசாதமாய் இருந்து வந்தன. இப்படியான Filesharing இணையத்தளங்களில் முடிசூடாத மன்னனாக சிலகாலங்களின் முன்னர் இருந்து வந்தது Rapdishare இணையத்தளம். பல வழக்குகள் அவர்கள் மீது பதியப்பெற்று காப்புரிமை செய்யப்பட்ட கோப்புக்களை நீக்கத்தொடங்கியதால் அதன்பின்னர் Megaupload மற்றும் Hotfile என்பன பிரபலம் பெறத்தொடங்கின. சிறிது காலத்தில் Hotfile இணையத்தளமும் வழக்குகளை சந்திக்க Megaupload மிகப்பிரபலம் அடைந்தது. அதைவிடவும் Filesonic, fileserve என்பனவும் ஒரளவு பிரபலமாயிருந்தன.

இம்மாதம் இருபதாம் திகதியன்று பல நாடுகளிலும் இருந்த அவர்களது வழங்கிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு, அவ்விணையத்தள உரிமையாளர் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டு அவர்களது அனைத்து தளங்களும் டொமைன் பெயர்களும் தடைசெய்யப்பட்டன. (Megastuff.co, Megaworld.com, Megaclicks.co, Megastuff.info, Megaclicks.org, Megaworld.mobi, Megastuff.org, Megaclick.us, Mageclick.com, HDmegaporn.com, Megavkdeo.com, Megaupload.com, Megaupload.org, Megarotic.com, Megaclick.com, Megavideo.com, Megavideoclips.com மற்றும் Megaporn.com.)

இப்பொழுது Megaupload தளத்திற்கு சென்றால் இதனைத்தான் பார்க்கலாம்.

இந்த நடவடிக்கையினைத் தொடர்ந்து பல Filesharing தளங்களும், தங்கள் நடவடிக்கைகளை முடக்கியுள்ளன.

Filesonic – 3ம் நபர் தரவிறக்கங்களை தடைசெய்துள்ளது.
Fileserve – 3ம் நபர் தரவிறக்கங்களை தடைசெய்துள்ளது.
Uploaded.to – US பாவனையாளர்களை தடைசெய்துள்ளது.
Filejungle – 3ம் நபர் தரவிறக்கங்களை தடைசெய்துள்ளது.
Filepost – 3ம் நபர் தரவிறக்கங்களை தடைசெய்துள்ளது.
Uploadstation – 3ம் நபர் தரவிறக்கங்களை தடைசெய்துள்ளது.
Uploadbox – சேவையை 30ம் திகதியுடன் நிறுத்துகின்றது.
x7.to – சேவையை நிறுத்துகின்றது.

Filesharing இணையத்தளத்தினை பயன்படுத்தியவர்கள் இனிமேல் torrent களை பயன்படுத்த வேண்டியதுதான். Torrent சம்பந்தமாய் ஏதும் கேள்விகள் இருப்பின் இங்கே கேளுங்கள்.

Fokiz புதிய CMS

உங்கள் இணையத்தளங்களை இலகுவாக நிருவகிக்க உதவுபவை Content Management System (CMS) எனப்படும். இலவச CMS கள் வரிசையில் Drupal, Joomla மற்றும் WordPress போன்றவை மிகப்பிரபலமாயிருப்பினும், புதிய CMS களின் வரவுக்கோ அவற்றின் பாவனைக்கோ குறைவில்லை (CMS கள் பற்றிய என் முந்தைய பதிவை பாருங்கள்). அவ்வகையில் இவ்வாரம் புதிதாய் வெளியிடப்பட்டுள்ள CMS, Fokiz. Inline content editing மற்றும் Responsive layout என்பன இந்த CMS இல் குறிப்பிடக்கூடிய வசதிகள்

PirateBay – Magnet தொடுப்புக்கள் மற்றும் 3D Printing

Torrent இணையத்தளங்களில் மிகப்பிரபலமான thepiratebay இணையத்தளம் புதிய இரு அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கின்றது.
1. Magnet தொடுப்புக்கள்.
இனிவரும் காலங்களில் piratebay இணையத்தளத் torrent கோப்புக்களிற்கு பதிலாக magent தொடுப்புக்களையே பயன்படுத்தும். இதனால் வழமையான ரொரன்ற் பாவனையாளர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. இப்போதிருக்கின்ற அனைத்து ரொறன்ற் மென்பொருள்களுமே magnet தொடுப்புக்களை பயன்படுத்தக்கூடியவை. இம்மாற்றத்தின் மூலம் Piratebay இன் வழங்கி தேவைகள் குறைவடையப்போவதுடன் மிக இலகுவாக தளத்தினை பிரதி செய்து கொள்ளவும் முடியும்
2. முப்பரிமாண printing
முப்பரிமாண priting பிரபலமடைந்து வருகின்ற இவ்வேளையில் Piratebay இணையத்தளம் அதற்கென ஒரு புதிய பகுதியினை ஆரம்பித்துள்ளது. இங்கு சொடுக்கி பாருங்கள்.

இவ்வார தொடுப்பு

நிறங்கள் HEX to RGB – http://fooistrue.com/hextone/

29 தை, 2012