Posts Tagged "Adobe"

Coding ஏதும் செய்யாமல் இணையத்தளம் உருவாக்க Adobe Muse

இணையத்தளங்கள் உருவாக்குவதற்கான மிகப்பிரபலமான பல மென்பொருள்களை உருவாக்கி வருகின்ற அடொபி நிறுவனம் தனது புதிய மென்பொருளான Muse இனை அறிமுகப்படுத்தியுள்ளது. Muse என்பது இதன் தற்போதய பெயர் என்பதோடு இம்மென்பொருள் பதிப்பு ஒன்றினை அடையும்போது அதற்கான பெயர் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Adoeb Muse இணை பயன்படுத்துவதன்மூலம் எவ்விதமான Coding உம் எழுதாமல் ஒருவரால் மிக இலகுவாக ஒரு இணையத்தளம் ஒன்றினை உருவாக்கிவிட முடியும். உங்களுக்கு தேவையான html மற்றும் css கோப்புக்களை இம்மென்பொருள் எழுதித்தருவதோடு jQuery போன்ற javascript framework குகளையும் தனாகவே தேவைக்கேற்ப இணைத்துக்கொள்ளும். மேலதிக வசதிகள் தொடர்பாய் அறிந்து கொள்ள இங்கே பாருங்கள்.

இம்மென்பொருள் அடொபி AIR தொழிநுட்பத்தினை பயன்படுத்தி இயங்கினாலும் லினிக்ஸ் கணினிகளில் இயங்காது.

தரவிறக்கிக்கொள்ளவும், பயன்படுத்திப்பார்க்கவும் இங்கே வாருங்கள்.

16 ஆவணி, 2011

நான் பயன்படுத்தும் AIR மென்பொருட்கள்.

Adobe Integrated Runtime (AIR) என்பது அடொபி நிறுவனத்தினால் உருவாக்கப்ட்ட ஒரு Runtime ஆகும். இத்தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் மென்பொருள்கள் அனைத்து இயங்குதளத்திலும் இயங்க வல்லன. ஆனால் அதற்கு AIR Runtime அக்கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஒரு வகையில் இது JAVA போன்றது. ஆனால் மென்பொருளை உருவாக்க நீங்கள் பல மொழிகளை பயன்படுத்த முடியும் (HTML ஐக் கூட பயன்படுத்த முடியும்)

இப்படியான பல மென்பொருள்களை பல்வேறு தேவைகளுக்கும் நான் பலகாலமாக பயன்படுத்தி வருகின்றேன். அவற்றில் சிலவற்றினை இங்கே வரிசைப்படுத்தி உள்ளேன். தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கும் பயனளிக்கக் கூடும். அனைத்தும் இலவசமானவை.

Adobe Kuler
உங்களுக்கு தேவையான நிறங்களை இலகுவாக தேடிக்கண்டுபிடித்துக்கொள்ளவும், நீங்கள் உருவாக்கிய நிறங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு சிறந்த மென்பொருளாகும். இது இயங்க இணைய இணைப்பு அவசியமானது.

தரவிறக்க

Contrast-A
நிறங்களை இலகுவாக கண்டுகொள்ளவும் உருவாக்கிக்கொள்ளவும் உதவும் இன்னுமொரு மென்பொருள் இதுவாகும். நீங்கள் ஒரு இணைய வடிவமைப்பாளராயின் உங்களிடம் கட்டாயம் இருக்கவேண்டிய ஒன்று.

தரவிறக்க

Boks
இணையத்தளங்கள் வடிவமைப்பவர்கள், கடினமான லேஅவுட்களை இலகுவாக CSS இனை கொண்டு உருவாக்கிக்கொள்ள இம்மென்பொருள் பயன்படும். மேலும் விபரங்களுக்கு இம்மென்பொருளை பற்றி முன்னர் எழுதிய பதிவினை பாருங்கள்.

தரவிறக்க

Pixus
உங்கள் கணினித்திரைக்கான அடிமட்டம் இது. கணினித்திரையில் இருப்பவற்றின் நீள அகலங்களை இலகுவாய் இம்மென்பொருளை கொண்டு அளந்துகொள்ள முடியும். ஒரு இணையத்தள வடிவமைப்பாளரிடம் கட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள் இது.

தரவிறக்க

Livebrush lite
மிக அழகான வெக்ரர் கிரபிக்ஸ்களை உருவாக்கிக்கொள்ள பயன்படும் மென்பொருள் இதுவாகும். மிக அழகான பின்னணிகளை உருவாக்கிக்கொள்ள இது பயன்படும். சிறுவர்களாலும் இதனை இலகுவாக பயன்படுத்த முடியும் என்பதால் கட்டாயம் பயன்படுத்தி பாருங்கள்.

தரவிறக்க

Fractal 4D
இதுவும் ஒரு வெக்ரர் கிரபிக்ஸ்களை உருவாக்கிக்கொள்ள பயன்படும் மென்பொருளாகும். மிக இலகுவாக அழகிய பின்னணிகள், தோற்ற வேலைப்பாடுகளை உருவாக்கிக்கொள்ளவும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கவும் இதனை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

தரவிறக்க

Adobe Photo Uploader for Facebook
பெயரை பார்த்தாலே இது எதற்கான மென்பொருள் என்பது புரிந்துவிடும். Facebook இற்கு படங்களை இலகுவாக பதிவேற்ற உதவும் மென்பொருள் என இது குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் Facebook இனை முழுவதுமாக இந்த மென்பொருளை கொண்டு இலகுவாக பார்வையிட முடியும். Facebook இற்கான ஒரு Desktop Client என இதனை சொல்லலாம்.

தரவிறக்க

Flickroom
நீங்கள் ஒரு Flickr பாவனையாளராயின் இந்த மென்பொருள் நிச்சயமாக உங்களுக்கானது. நீங்கள் Flickr இன் இணையத்தளத்திற்கு செல்லாமலே இம்மென்பொருளை பயன்படுத்தி அனைத்து வேலைகளையும் இலகுவாக செய்துகொள்ள முடியும். குறிப்பாக படங்களை தரவேற்றுவதும், மற்றவர்கள் தரவேற்றிய படங்களை தேடி எடுத்துக்கொள்ளவும் இம்மென்பொருள் மிக்க பயனுள்ளது.


படம்: யாழ்ப்பாணம், அளவெட்டி அளகொல்லை விநாயகர் ஆலயம்.

தரவிறக்க

Cooklet APP
சமைப்பதில் ஆர்வமுள்ள எவருக்கும் பயனளிக்கும் மென்பொருள் இது. இதன்மூலம் மிக இலகுவாக சமையல் குறிப்புகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடிவதோடு, உங்கள் சமையல் குறிப்புகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

தரவிறக்க

Finetune Desktop
ஆங்கில மொழிப்பாடல்களை இலவசமாக கேட்பதற்கு இது ஒரு சிறந்த மென்பொருளாகும். (குறிப்பாக பழைய பாடல்கள்). இம்மென்பொருள் இயங்கவும் இணைய இணைப்பு அவசியமானது.

தரவிறக்க

இம்மென்பொருள்கள் தொடர்பான உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

30 ஐப்பசி, 2010

Adobe AIR இனி லினிக்ஸிலும்.

நீண்ட காலமாக Adobe Lab இல் மேம்படுத்தப்பட்டு வந்த Adobe AIR இன் லினிக்ஸ் பதிப்பு இப்போது பூரணப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை இங்கு சென்று தரவிறக்கி கொள்ளலாம்.

Adobe AIR

உத்தியோகபூர்வமாக இது Ubuntu< OpenSUSE, Fedora லினிக்ஸ் வெளியீடுகளுக்கென்றே வெளியிடப்பட்டிருந்தாலும் ஏனைய லினிக்ஸ் வெளியீடுகளிலும் இது தொழிற்படும்.

இதனை நிறுவிக்கொள்ள உங்கள் Terminal இனை திறந்து Adobe AIR கோப்பிருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். பின்னர்
sudo ./AdobeAIRInstaller.bin
என தட்டச்சிட்டு என்ரர் செய்யுங்கள். இது பயனளிக்காவிடின் இதற்கு முன்னர்
sudo chmod 755 AdobeAIRInstaller.bin
என தட்டச்சிட்டு கொள்ளுங்கள்.

19 மார்கழி, 2008