Posts Tagged "Apple"

100 மில்லியன்கள்.

இந்த சித்திரை தொடக்கத்தில் 100 மில்லியன் ஐபொட்களை விற்றுவிட்டதாக அப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. இது ஐபொட் வெளிவந்ததிலிருந்து சரியாக ஐந்தரை வருடங்களாகும். இதுவே சரித்திரத்தில் மிகவேகமாக விற்றுத்தீர்த்த MP3 player ஆகும். அத்தோடு iTunes பாட்டுத்தளம் ஒன்றேகால் வருடத்தில் 100 மில்லியன் பாட்டுக்களை விற்று அமெரிக்காவின் ஐந்து பெரும் பாட்டு விற்பனையாளர்களில் நான்காவது இடத்தினை பெற்றுள்ளது.

(விளக்கப்படத்தை எங்கேயோ பாத்த மாதிரி இருக்கா?? இது Macuser சஞ்சிகையின் ஆடி மாத பதிப்பில் வெளிவந்த படம்)

4 ஆடி, 2007

சிறுத்தை களத்தில்

மிக நீண்ட காலமாக (ஏறத்தாள ஒரு வருடம்) எதிர்பார்த்திருந்த சிறுத்தை இப்பொழுது களத்திற்கு வந்துள்ளது. அப்பிள் நிறுவனம் தனது இயங்கு தளத்தின் பிரதான பதிப்பான Mac OSX 10.5 இனை வெளியிட்டுள்ளதோடு அதற்கு ஏற்றாற்போல் தனது இணையத்தளத்தினையும் மீள் வடிவமைப்பு செய்துள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் அப்பிள் இணைத்தளத்திற்கு சென்று மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

16 ஆனி, 2007

ஐபோன் விளம்பரம்

இந்த ஐபோன் விளம்பரத்தை நீங்கள் ஒருகாலமும் பாத்திருக்க மாட்டியள். இப்பவெண்டாலும் பாருங்கோ..


20 மாசி, 2007