Posts Tagged "Email."

ஜிமெயில் புதிய வசதிகள்

கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் மேலும் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக தனது உத்தியோகபூர்வ வலைப்பதிவின் மூலம் அறிவித்திருக்கின்றது. அவை இப்போது சோதனைக்கு விடப்பட்டுள்ளன.

புதிய நட்சத்திர குறிகள்
நட்சத்திரமிடுதல் என்பது ஜிமெயிலில் மட்டும் இருக்கின்ற ஒரு சிறப்பான வசதியாகும். மிக முக்கியமான அல்லது விரைவில் கவனமெடுக்கவேண்டிய மின்னஞ்சல்களை நட்சத்திரமிட்டு வைக்க இந்த வசதி கைகொடுத்து வந்தது. ஆனால் அதிகளவான மின்னஞ்சல்கள் நடசத்திரமிடப்படும்போது அவற்றில் முக்கியமானவற்றை கண்டு பிடிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு தீர்வாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரட்டையில் படங்கள்.
ஜிமெயில் சேவையோடு இணைக்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான ஒன்று அரட்டை. அதில் மிக முக்கியமான ஒரு வசதியை ஜிமெயில் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது. இதன்மூலம் அரட்டை செய்பவரின் புகைப்படம் கீழ்காட்டப்படவாறு அரட்டை வின்டோவில் தெரியும்.

இலகுவான தொடுப்புக்கள் அமைக்கும் வசதி
இதன் மூலம் நாம் அடிக்கடி ஜிமெயிலில் செய்யும் வேலைகளுக்கு குறுக்கு வழியொன்றை (Shortcut) ஒன்றினை அமைத்துக்கொள்ள முடியும்.

18 ஆனி, 2008

Gmail contacts redesigned.

கூகிள் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் Contacts பக்கத்தினை முழுவதுமாக மீள்வடிவமைப்பு செய்திருக்கின்றது. இது சில காலத்திற்கு முன்னரே சில பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டாலும் இப்போதுதான் எல்லா பயனாளர்களும் பயன்படுத்த தக்க வகையில் வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது இதன்மூலம் மிக இலகுவாக எங்களின் Contacts களை ஒழுங்குபடுத்தி கொள்ள முடியும். கீழே திரைவெட்டை பாருங்கள்.



3 மார்கழி, 2007

யாகூ மின்னஞ்சல் அரட்டையுடன்

மாசி 2006 இல் கூகிள் நிறுவனம் இலகுவான, இணைய உலாவியினுள்ளேய
பயன்படுத்தக்கூடிய தனது Gmail chat இனை அறிமுகப்படுத்தியது. இப்போது 2007 மாசியில் யாகூ தனது அரட்டை மென்பொருளை Yahoo Mail Beta உடன் இணைத்திருக்கின்றது.

அனேகாமாக இன்னும் சில தினங்களில் இது அனைவரும் பயன்படுத்தக்கூடியதாக வந்து விடும். இதன் மூலம் தனது அரட்டை மென்பொருளின் பயனாளர்களின் எண்ணிக்கையை (தற்போது 73 மில்லியன், யாகூ மின்னஞ்சல் 250 மில்லியன்) அதிகரிக்க முடியும் என யாகூ நம்புகின்றது.

அது சரி Yahoo Mail Beta என்றால் என்ன? யாகூ சொல்கின்றது

The Yahoo! Mail beta is a true Web 2.0 experience, including a sleek, easy-to-use interface with the speed and responsiveness of a desktop application. In addition to instant messaging, the Yahoo! Mail beta also features enhanced functionality such as drag and drop e-mail organization, message preview, an integrated calendar and an RSS reader.

16 மாசி, 2007