Posts Tagged "Google adsense"

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க.

இந்த பதிவை நீண்டநாட்களாகவே எழுதவேண்டும் எனது நண்பர்கள் பலர் கேட்டுவந்தார்கள். இப்பொழுதுதான் அதற்கான நேரமும் அதற்கான தகுதியும் எனக்கு வந்திருக்கின்றது என நினைப்பதால் இப்பதிவை எழுதுகின்றேன். இதுதொடர்பாக உங்களுக்கு எழும் கேள்விகளை பின்னூட்டத்தில் கேளுங்கள். என்னால் முடிந்தளவு பதிலளிக்க முனைகின்றேன்.

தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வலைப்பதிவெழுதுவது மற்றையது இணையத்தூடு வேலை செய்வது. இரண்டுமே ஆர்வமிருந்தால் இலகுவானதுதான்.

முதலாவதாக வலைப்பதிவெழுதுவதன் மூலம் எவ்வாறு பணம் பெறலாம் என்பதனைப் பார்ப்போம்.

பொதுவாக வலைப்பதிவு மூலம் சம்பாதிப்பதற்கான வழி விளம்பரங்களை வலைப்பதிவுகளில் இடுதல். பொதுவாக இவை உங்கள் பதிவு மிகப்பிரபலமாக இல்லாது விடின் பெருமளவு பணத்தினை உருவாக்கி தரமாட்டா. ஆனாலும் பொழுதுபோக்காக நாங்கள் செய்கின்ற வலைப்பதிவு சிறிதளவு பணத்தினை ஈட்டித்தருமாயின் அது நல்லதுதானே?

இவ்வாறு விளம்பரங்களை வழங்குவதற்கு பல நிறுவனங்கள் இருந்தாலும் பலரும் அறிந்தது. கூகிள் அட்சென்ஸ்.

இங்கு செல்வதன் மூலம் ஒரு கணக்கை உங்களுக்கென்று உருவாக்கி கொண்டு உங்கள் வலைப்பதிவெங்கும் அவர்களது விளம்பரங்களை கீழே காட்டப்பட்டது போல வெளிப்படுத்த இயலும். பொதுவாக விளம்பரங்களின் மேல் சொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு சொடுக்கிற்கும் உங்களுக்கு பணம் கிடைக்கும்.(இந்த பதிவு பிடிச்சிருந்தா நீங்களும் கீழே இருக்கிற எனது விளம்பரத்தில் சொடுக்கி உதவலாம்)

இதைவிட பல பிரபல நிறுவனங்கள் வித்தியாசமான முறைகளின் மூலம் உங்கள் வலைப்பதிவிற்கு விளம்பரம் தரத்தயாராக உள்ளார்கள். இவர்களில் நான் பயன்படுத்துவது textlinkads நிறுவனத்தை. இவர்கள் உங்கள் வலைப்பதிவில் இடுகின்ற ஒவ்வொரு தொடுப்பிற்கும் மாதாமாதம் இவ்வளவு பணம் என்ற அடிப்படையில் பணம் வழங்குகிறார்கள். எவ்வளவுதரம் சொடுக்கியது எனப்து போன்ற விபரங்களை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கீழே சில திரைவெட்டுகளை பாருங்கள்.

இது எனது வலைப்பதிவில் இருக்கும் ஒரு தொடுப்பு சம்பந்தமான விபரம்.

இது ஒரு மாதத்தில் எனது வலைப்பதிவில் இருந்த தொடுப்பகளுக்கு மொத்தமாக அவர்கள் செலுத்திய பணம் பற்றிய விபரம்.

மாத முடிவில் உங்கள் கடனட்டைக்கு அல்லது உங்கள் வீட்டிற்கு காசோலையாக பணத்தை அனுப்பிவிடுவார்கள்.

கீழே இருக்கின்ற தொடுப்பில் சொடுக்கி நீங்களும் ஒரு கணக்கினை ஆரம்பித்து அவர்களது விளம்பரங்களை வெளியிட ஆரம்பியுங்கள்.

மேலும் இவ்வாறான சில இணையத்தளங்கள் பற்றிய விபரங்களை மேலும் ஒரு பதிவில் இடுகின்றேன். இப்பொழுது இரண்டாவது முறைக்கு போவோம்.

இணையத்தினூடாக வேலை செய்தல்.

இதற்கு நீங்கள் வலைப்பதிவு ஏதும் வைத்திருக்க தேவையில்லை. உங்களின் திறமைக்கேற்றவாறு பணம் சம்பாதிக்க முடியும். திறமையிருக்கின்ற அல்லது விருப்பம் இருக்கின்ற பலருக்கு இருக்கின்ற பிரச்சனையே இதற்கான வழிமுறைகள் தெரியாமைதான். கீழே அவற்றிற்கான சில வழிமுறைகளை பார்ப்போம்.

இதற்கு பொதுவாக இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று இதற்கான வழிகளை செய்துதருகின்ற இணையத்தளங்கள் மற்றையது இணையத்தளமூடாக வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள்.

இதில் முன்னைய வழிமுறையைப்பற்றி இப்போது பார்ப்போம்.

இணையத்தூடாக வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்து தரும் இணையத்தளங்கள் பல உள்ளன. அவற்றில் என்னைப்பொறுத்தவரை இலகுவானது என கருதும் இணையத்தளங்கள் இரண்டு கீழே.

Elance



Elance

மேலே சொடுக்கி இந்த இணையத்தளத்தில் நீங்கள் ஒரு கணக்கினை ஆரம்பித்து கொண்டால் உங்கள் திறமைக்கேற்ப வேலைகளை பெற்றுக்கொள்ள முடியும். இங்கு இருக்கின்ற முக்கியமான பிரச்சனை உங்களை நீங்கள் சந்தைப்படுத்துவதுதான். அங்கே உங்களுக்கேற்ற வேலை ஒன்றினை நீங்கள் கண்டுகொண்டால் உடனே நீங்கள் ஏன் அந்த வேலைக்கு தகுதியானவர் என்றும் உங்களால் எவ்வாறு அந்த வேலையை முடித்துக்கொடுக்க முடியும் என்றும் ஒரு கோரல் (Bid) ஒன்றினை செய்ய வேண்டும். நீங்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்ட தொகை கிடைக்கும். இங்க ஆகக்குறைந்த தொகை 50 அமெரிக்க டொலர்கள் என்பதால் சிறிய வேலைக்கே நீங்கள் நல்ல பணத்தினை சம்பாதித்து கொள்ள முடியும்.

வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் வேலை வகைகள்.

GetAFreelancer

இந்த இணையத்தளமும் மேலே குறிப்பிட்டதைப்போன்றதுதான். இங்கு ஆகக்குறைந்த தொகை 30 அமெரிக்க டொலர்கள்.

நாங்கள் இப்பதான் வலைப்பதிவெண்டாலே என்னெண்டு பாத்திருக்கிறம். உதில கேட்டிருக்கிற விசயம் தெரியுமெண்டா நான் ஏன் இப்படி இருக்கிறன். இதைவிட சுகமான வேலை ஏதும் இருந்தா சொல்லு எண்டுற ஆக்களுக்குதான் கீழ இருக்கிற இணைத்தளம்.

Mturk

இந்த இணையத்தளம் அமேசன் நிறுவனத்தின் ஒரு பகுதி. இங்கு நீங்கள் மிகச்சிறயளவு பணத்திற்கு சிறிய சிறிய வேலைகளை செய்ய முடியும். வீட்டில ஒரு பொழுதும் போகேல்ல நல்ல இணைய இணைப்பு இருக்கு எண்டு சொல்லுறாக்களுக்கு இது நல்ல இடம். இந்த படம் நல்லா இருக்கு. இது நல்லா இல்லை எண்டு சொன்னாலே காசு கிடைக்கும்.

போய் ஒரு இரண்டு வேலை செய்து பாருங்க.

இணையத்தளமூடாக வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள்

இரண்டாவது முறையில வேலைகளை தேடிக்கண்டுபிடிக்கிறதே கஸ்டமான வேலை. என்னுடைய பங்கிற்கு கீழ ஒரு தொடுப்பு தந்திருக்கு போய் பாருங்க. அவ்வளவுதான்.

Work with Yaro


அடுத்த பதிவில ஒரு சிறந்த கோரல் (Bid) ஒன்றை எப்பிடி செய்யிறது, எப்பிடி இலகுவா வேலைகள் எடுக்கிறதென்பதை பற்றி விரிவா பாப்பம். தவறவிடக்கூடாதெண்டால் இங்க சொடுக்கி செய்தியோடையை பதிவு செய்து கொள்ளுங்கள்.

கேள்விகள் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்.

21 தை, 2009

கூகிள் விளம்பரம் அச்சில்.

கூகிள் தனது Adword உடன் Google Print இனை ஒன்று சேர்த்திருக்கின்றது. இதன்மூலம் இலகுவாக செய்தித்தாள்களில் கூகிள் ஊடாக விளம்பரம் செய்ய முடியும். விளம்பரப்படுத்துபவர்கள் தங்களின் விளம்பரங்களை கொடுக்கும் போது

  • எந்நாள்களுக்கிடையில் விளம்பரம் வரவேண்டும்?
  • ஒவ்வொரு கிழமையும் எவ்வளவு பணம் செலவழிக்க விரும்புகின்றீர்கள்?
  • எந்த பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த விரும்புகின்றீர்கள்?

என்பவற்றை கொடுத்தால் போதும் மீதியை கூகிள் பார்த்துக்கொள்ளும். கீழே சில திரைவெட்டுகளை பாருங்கள்.



9 வைகாசி, 2007