Cuil புதிய தேடுபொறி – கூகிளுக்கு போட்டியா??
இணையத்தில் தேட பல தேடுபொறிகள் இருந்தாலும் (Yahoo, Live) பலரது தெரிவாகவும் இருப்பது கூகிள் தேடுபொறிதான். இப்பொழுது அதற்கு போட்டியாக cuil எனும் தேடுபொறி வெளிவந்திருக்கின்றது.
ஏறத்தாள கூகிளை விட 120 பில்லியன் இணையப்பக்கங்களில் அதிகமாக அதாவது 1.12 டிரில்லியன் பக்கங்களில் தேடலை மேற்கொள்ளுவதாக இந்த தேடுபொறி அறிவித்துள்ளது. (கூகிள் 1 டிரில்லியன் பக்கங்களில் தேடுதலை செய்வதாக சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.)
இந்த தேடுபொறியினை மற்றைய, “தினமும் தோன்றும்” தேடுபொறிகள் போல எண்ணிவிட முடியாத அளவிற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.
- ஒன்று இந்த தேடுபொறியினை உருவாக்கி இருப்பவர்கள் முன்னைநாள் கூகிள் பணியாளர்கள்
- இரண்டு இவர்கள் இதில் ஏற்கனவே 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டிருக்கிறார்கள்.
ஆனால் இது இன்னமும் பீற்றா வடிவில் தான் இருக்கிறது. தேடும் சொல்லிற்கேற்ப related category இனை காட்டுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.
இத்தேடுபொறியும் கூகிளை போலவே மிக வேகமாக தேடுவதாக எனக்கு படுகிறது. ஆனா தமிழில தேடினா ஒரு பதிலும் இல்லை.