Posts Tagged "Google"

பிக்காசா 3 வெளியானது..

கூகிள் நிறுவனம் தனது மிக இலகுவாக படங்களை ஒழுங்குபடுத்தி மேம்படுத்த உதவும் பிக்காசா மென்பொருளின் பதிப்பு மூன்றினை வெளியிட்டுள்ளது.

சில நாட்களின் முன்னர் பீற்றா பதிப்பாக வெளியிடப்பட்டிருந்த இது இப்போது முழுமையான பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணையப்பக்கம் இன்னமும் அது பீற்றா பதிப்பென குறிப்பிட்டாலும், இதுதான் முழுமையான பதிப்பாகும்.

இங்கு சென்று தரிவிறக்கிக்கொள்ளுங்கள்.

3 கார்த்திகை, 2008

Cuil புதிய தேடுபொறி – கூகிளுக்கு போட்டியா??

இணையத்தில் தேட பல தேடுபொறிகள் இருந்தாலும் (Yahoo, Live) பலரது தெரிவாகவும் இருப்பது கூகிள் தேடுபொறிதான். இப்பொழுது அதற்கு போட்டியாக cuil எனும் தேடுபொறி வெளிவந்திருக்கின்றது.

cuil logo

ஏறத்தாள கூகிளை விட 120 பில்லியன் இணையப்பக்கங்களில் அதிகமாக அதாவது 1.12 டிரில்லியன் பக்கங்களில் தேடலை மேற்கொள்ளுவதாக இந்த தேடுபொறி அறிவித்துள்ளது. (கூகிள் 1 டிரில்லியன் பக்கங்களில் தேடுதலை செய்வதாக சில நாட்களின் முன் அறிவித்திருந்தது.)

இந்த தேடுபொறியினை மற்றைய, “தினமும் தோன்றும்” தேடுபொறிகள் போல எண்ணிவிட முடியாத அளவிற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன.

  • ஒன்று இந்த தேடுபொறியினை உருவாக்கி இருப்பவர்கள் முன்னைநாள் கூகிள் பணியாளர்கள்
  • இரண்டு இவர்கள் இதில் ஏற்கனவே 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டிருக்கிறார்கள்.

ஆனால் இது இன்னமும் பீற்றா வடிவில் தான் இருக்கிறது. தேடும் சொல்லிற்கேற்ப related category இனை காட்டுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று.

Cuil related category

இத்தேடுபொறியும் கூகிளை போலவே மிக வேகமாக தேடுவதாக எனக்கு படுகிறது. ஆனா தமிழில தேடினா ஒரு பதிலும் இல்லை.

cuil search result

29 ஆடி, 2008

Google Knol அனைவருக்கும் – விக்கிபீடியாவிற்கு போட்டியா?

கடந்த மார்கழி மாதம் அல்பா பதிப்பாக கூகிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட knol சேவை இப்பொழுது அனைத்து பயனாளருக்குமாக திறந்து விடப்பட்டுள்ளது. இது விக்கிப்பீடியாவிற்கு போட்டியாக உருவாக்கப்ட்டுள்ளதாக பலர் கருத்துக் கூறி வந்தாலும் கூகிள் தொடர்ச்சியாக அதனை மறுத்து வந்திருக்கிறது. இருந்த போதும் இது ஒரு வகையில் விக்கிப்பீடியாவை ஒத்த ஒரு சேவைதான்.

இவை இரண்டும் ஒரே மாதிரியான சேவையாக தோற்றமளித்தாலும் உண்மையில் இரண்டினதும் பார்வைத்தன்மை அடிப்படையில் வேறுபடுகின்றது. விக்கிப்பீடியா உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும் அதே நேரம் knol authorship இல் கவனம் செலுத்துகின்றது.

இன்னொரு முக்கியமான விடயம் விக்கிப்பீடியாவை போலல்லாது எங்களால் நாங்கள் உருவாக்கும் கட்டுரைகளின் காப்புரிமையை இங்கு மாற்றி அமைக்க முடியும்.

சரி இங்க வந்து ஒருக்கா சுத்தி பாருங்க.

25 ஆடி, 2008