Internet Explorer 6 இனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள்.
Internet Explorer 6 ஆனது பொதுவாக பாவனையை விட்டு அகன்று கொண்டிருக்கும் ஒரு இணைய உலாவியாகும். இருந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக பலர் இன்னமும் அதனை பயன்படுத்தி வருகின்றார்கள். எனது வலைப்பதிவுக்கு வருகின்றவர்களில் 45 வீதமானோர் இன்னமும் இதனை பயன்படுத்துகின்றனர்.
இது பாவனையாளர்களுக்கு மட்டுமன்றி இணைய வடிவமைப்பாளர்களுக்கும் ஏராளமான தொல்லைகளை கொடுத்து வருகின்றது.
இதனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளது. பார்த்துவிட்டு தயவு செய்து உங்கள் இணைய உலாவியை மேம்படுத்தி கொள்ளுங்கள் அல்லது வேறு இணைய உலாவிக்கு மாறிக்கொள்ளுங்கள்.
1. PC World சஞ்சிகை Internet Explorer 6 இனை உலகின் மிகமோசமான தொழிநுட்பம் சார்ந்த தயாரிப்புகளில் 8 வது இடத்தில் வரிசைப்படுத்தி இருக்கின்றது.
2. இந்த மென்பொருள் ஏழு வருடங்கள் பழமை வாய்ந்தது. இணைய உலகின் அளவுத்திட்டங்கள் மற்றும் கால அளவிடைகளுடன் இதனை ஒப்பிடுவதாயின், இது கற்காலத்தை சேர்ந்த ஒரு மென்பொருள்.
3. IE6 வழுக்களின் சொர்க்கபுரி. இதனை தயாரித்தவர்களே (Micorsoft) இதுபற்றி கவனம் செலுத்தாதபோது நாங்கள் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
4. Internet Explorer இன் புதிய பதிப்புகள் (பதிப்பு 8 வரை) இப்போது கிடைக்கின்றது.
5. IE 6 இணைய பக்கங்களை render செய்ய தனது சொந்த முறையினை பயன்படுத்துகின்றது. இது இணைய வடிவமைப்பாளர்களுக்கு பெரும் தலையிடியை கொடுக்கின்றது.
6. IE6 இலுள்ள CSS rendering மிக மோசமானது. (உண்மையை சொல்வதானால் IE 6 CSS என்ற மொழியை txt கோப்பாகவே render செய்கிறது)
7. வேறு ஒரு இணைய உலாவிக்கு மாற அல்லது IE 6 இனை மேம்படுத்த உங்களுக்கு இரண்டு நிமிடமளவிலேயே நேரம் செலவாகும்.