Posts Tagged "iOS5"

நாங்கள் மறந்த தமிழும் iOS 5 உம்

ஏறத்தாள ஒரு வருட காலமாக உருவாக்கப்பட்டு வந்த அப்பிள் நிறுவனத்தின் கைப்பேசி இயங்குதளத்தின் ஐந்தாவது பதிப்பு சில நாட்களின் முன்னர் வௌியிடப்பட்டது. மேம்படுத்தி சில நாட்களே பயன்படுத்தி வந்தாலும், என்னை கவர்ந்த சில வசதிகளை இங்கே வரிசைப்படுத்தி உள்ளேன்.

1. தமிழ் இன்னும் அதிகமாய்
தமிழ் விசைப்பலகையோ அல்லது பயனர் முகப்போ பூரணமாக இன்னமும் iOS இல் இன்னமும் இல்லையாயினும், Regional settings இல் இலங்கை அல்லது இந்திய தமிழை தேர்ந்தெடுத்தால் இலக்கங்கள் மற்றும் திகதிகள் அனைத்தும் தமிழிற்கு மாறிவிடும். சாதாரணமாக அல்ல, நாங்கள் பொதுவாய் மறந்து போன தமிழ் இலக்கங்களுக்கு மாறிவிடும். (நீங்கள் அப்பிள் கணினி பாவனையாளர் எனின், இங்கே இருக்கும் எனது விசைப்பலகையை தரவிறிக்கி கொண்டால் உங்களால் தமிழ் இலக்கங்களை இலகுவாய் தட்டச்சிட முடியம்.)

2. கம்பியில்லா sync மற்றும், sync செய்யப்படும்போதே பயன்படுத்த முடிதல்.

3. iMessage
iOS5 நிறுவப்பட்டுள்ள iPhone, iPod மற்றும் iPad இடையே இலவசமாக குறுஞ்செய்திகள் அனுப்ப முடிதல்.

4. News stand
உங்கள் சஞ்சிகைகள் அனைத்தும் ஒரே இடத்தில் இலகுவாய் வாங்கவும் வாசிக்கவும் முடிதல்.

5. iCloud
5GB இலவச இடவசதி மற்றும் உங்கள் தகவல்கள் அனைத்தையும் Backup செய்துகொள்ள முடிதல்.

6. Notification
முன்னைய பதிப்புக்களை போலல்லாது எப்போதும் சென்று பார்த்துக்கொள்ளக்கூடியதான ஒரு பொதுவான Notification இடம்.

23 ஐப்பசி, 2011