Posts Tagged "மென்பொருள்"

இணையத்தள வடிவமைப்பாளர்களுக்கான சில இணைய மென்பொருள்கள்

நீங்கள் ஒரு இணையத்தள வடிவமைப்பாளராக அல்லது ஒரு இணையத்தள வடிவமைப்பாளராக வரவிரும்பினால் கீழே சொல்லப்பட்டிருக்கும் இணையத்தளங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும்.

Favicon Generator
http://favigen.com
இணையத்தளம் ஒன்றின் மறுக்க முடியாத அம்சங்களில் ஒன்று favicon. அதனை இலகுவாக உருவாக்கிக்கொள்ள இந்த இணையத்தளம் பயன்படும். உங்கள் படக்கோப்பை தரவேற்றி ஒரு ico கோப்பாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

0 to 255
http://0to255.com
நிறங்களை சரியாக கண்டிறிவது என்பது ஒரு இணையத்தள வடிவமைப்பாளருக்கு எப்போதுமே இருக்கின்ற பெரியதொரு வேலை. இந்த இணையத்தளத்தை பயன்படுத்தி நீங்கள் உங்கள் குறிப்பிட்ட நிறத்தினைவிட கடுமையான நிறங்களையும் மென்மையான நிறங்களையும் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

Google Font Directory
http://code.google.com/webfonts
ஒரு இணையத்தளத்தில் வித்தியாசமான எழுத்துருக்களை பயன்படுத்த நீங்கள் விரும்பினால் அதற்கு இவ்விணையத்தளம் பயன்படும். Cufon எழுத்துருக்களை பயன்படுத்துபவர்களுக்கு, இது மிக இலகுவான ஒரு வேற்று முறையாகும்.

BgPattern
http://www.bgpatterns.com
இலகுவாக இணையத்தளம் ஒன்றிற்கு பின்னணிப்படத்தை உருவாக்கி கொள்ள விரும்புகின்றவர்களுக்கு இவ்விணையத்தளம் உதவும்.

Billable
http://billable.co.za
நீங்கள் செய்த வேலைக்கு இலகுவாக ஒரு சிட்டையை உருவாக்கி மின்னஞ்சலூடு அனுப்ப விரும்பினால் இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது.

26 தை, 2011

Adobe Project ROME

அழகான ஓவிய வேலைப்பாடுகள் மற்றும் அசைபடங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் கூடிய ஒரு மென்பொருள்தான் Adobe Project ROME. AIR இனை பயன்படுத்தி இயங்கும் இம்மென்பொருள் இப்போதைக்கு இலவசமாக வெளியிடப்பட்டுள்ளது.

rome logo

மிக மிக இலகுவான வடிவமைப்புடன் வேகமாக இயங்கும் வகையில் இது தயார் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உருவாக்கியவற்றை போன்ற கோப்புக்களாக உங்களால் சேமித்துக்கொள்ள முடியும்.

rome interface

போட்டோசொப் போன்ற பெரிய மென்பொருள்களை பயன்படுத்த சிரமப்படுபவர்கள் இம்மென்பொருளை பயன்படுத்தி இலகுவாக பலவிதமான கிரபிக்ஸ் வேலைகளை செய்து கொள்ளமுடியும்.

rome open

அத்தோடு நாம் உருவாக்கும் வேலைகளை ரெம்ளெற்றுகளாக இலகுவாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருப்பது சிறப்பானது. இதன்மூலம் மற்றவர்களின் உருவாக்கங்களையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வசதி உண்டு.

rome exchange

மேலும் தகவல்களுக்கும் இலகுவாக தரவிறக்கிக்கொள்ளவும் இங்கே செல்லுங்கள்.

29 ஐப்பசி, 2010

GoLive இனை நிறுத்தியது அடொப்

அடொப்நிறுவனம் தனது இணைய வடிவமைப்பு மென்பொருளான Adobe GoLive இன் மேம்பாட்டினையும் விற்பனையையும் 28.04.2008 இல் இருந்து பூரணமாக நிறுத்தியுள்ளது. தனது Adobe Dreamweaver மென்பொருளில் பூரண கவனத்தினை செலுத்துவதற்காகவே இந்த முடிவினை எடுத்துள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு GoLive பயனாளர்கள் Dreamweaver இற்கு மாறிக்கொள்ளுவதற்கு சலுகை விலையில் அம்மென்பொருளை வழங்கவும் முன்வந்துள்ளது.



அடொப் நிறுவனம் மக்ரோமீடியா நிறுவனத்தை வாங்க முன்னர், GoLive மட்டுமே அவர்களது இணைய வடிவமைப்பு மென்பொருளாக இருந்தது.

16 வைகாசி, 2008