Posts Tagged "Wikipedia"

Google Knol அனைவருக்கும் – விக்கிபீடியாவிற்கு போட்டியா?

கடந்த மார்கழி மாதம் அல்பா பதிப்பாக கூகிள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட knol சேவை இப்பொழுது அனைத்து பயனாளருக்குமாக திறந்து விடப்பட்டுள்ளது. இது விக்கிப்பீடியாவிற்கு போட்டியாக உருவாக்கப்ட்டுள்ளதாக பலர் கருத்துக் கூறி வந்தாலும் கூகிள் தொடர்ச்சியாக அதனை மறுத்து வந்திருக்கிறது. இருந்த போதும் இது ஒரு வகையில் விக்கிப்பீடியாவை ஒத்த ஒரு சேவைதான்.

இவை இரண்டும் ஒரே மாதிரியான சேவையாக தோற்றமளித்தாலும் உண்மையில் இரண்டினதும் பார்வைத்தன்மை அடிப்படையில் வேறுபடுகின்றது. விக்கிப்பீடியா உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தும் அதே நேரம் knol authorship இல் கவனம் செலுத்துகின்றது.

இன்னொரு முக்கியமான விடயம் விக்கிப்பீடியாவை போலல்லாது எங்களால் நாங்கள் உருவாக்கும் கட்டுரைகளின் காப்புரிமையை இங்கு மாற்றி அமைக்க முடியும்.

சரி இங்க வந்து ஒருக்கா சுத்தி பாருங்க.

25 ஆடி, 2008

விக்கிபீடியா தேடுபொறி

Exalead தேடுபொறியானது தனது இணைய தேடுபொறியுடன் மேலதிகமாக இரண்டு தேடல் வசதிகளை இணைத்திருக்கின்றது. ஒன்று படங்களை தேடுதல் மற்றையது விக்கிபீடியாவில் தேடுதல்.

முதல் முறையாக ஒரு தேடுபொறியில் ஒரு தளத்தை மட்டும் தேடுவதற்கு ஒரு தேடுபொறியினை உருவாக்கி இருப்பது இதுதான் முதற்தடவை. நீங்களும் போய் ஏதேனும் தேடிப்பாருங்கள்.

6 வைகாசி, 2007