ஆறு CSS Grid framework குகள்
ஒரு சாதாரணமான இணையத்தளத்தை வடிவமைப்பதாயினும் சரி சிக்கலான சஞ்சிகை போன்ற வடிவமைப்பை கொண்ட இணையத்தளம் ஒன்றை வடிவமைப்பதாக இருந்தாலும் சரி அதன் இனை இலகுவாக அனைத்து உலாவிகளிலும் சரியாக வேலைசெய்யக்கூடியதானதாக உருவாக்கிக்கொள்ள CSS Grid framework குகள் பயன்படுகின்றன.
நீண்ட காலமாகவே பக்க வடிவமைப்புகளை செய்ய அச்சகங்களில் Grid பயன்படுகின்றது. இணைய வடிவமைப்பில் Grid இனை பயன்படுத்துவதும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த Grid framework கள் layout ஒன்றினை உருவாக்கும் நேரத்தினை சில நிமிட வேலைகளாக குறைத்துவிடுகின்றது.
இவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் குறிப்பிடத்தக்க பயன்கள்.
- ஒன்றிற்குள் ஒன்றாக அடுக்கப்பட்ட ரேபிள்களை பயன்படுத்த தேவையில்லை.
- மிகவும் சிக்கலனா வடிவமைப்புகளை இலகுவாக செய்துகொள்ளலாம்.
- எல்லா உலாவிகளிலும் சரியாக வேலைசெய்யும்.
- உங்கள் நேரத்தை வெகுவாக குறைக்கும்.
- CSS எழுதும்போது ஏற்படும் பிழைகளை குறைக்கும்.
கீழே பிரபலமான சிலவற்றை தந்திருக்கின்றேன். உங்கள் வடிவமைப்பு வேலைகளுக்கு பயன்படுத்த தொடங்குங்கள். (நான் பயன்படுத்துவது blueprint)
960
blueprint
Elastic CSS
YAML
YUI
1KB CSS Grid
[…] எனது பதிவில் இணையத்தள அடிப்படை அமைப்பை இலகுவாக […]