இந்த வார இணையம் – 1

பொதுவாக கணினி சார்ந்த வேலைகளில் இருப்பவர்களின் பெரும்பகுதி நேரம் அவர்களது வேலை மற்றும் பல விடயங்கள் தொடர்பாக வாசிப்பது மற்றும் கற்றுக்கொள்ளுவது போன்றனவற்றில் கழியும். அவ்வகையில் ஒவ்வொரு வாரமும் நான் வாசித்தவதைகளில் எனக்கு பிடித்தவை மற்றும் மற்றவர்களுடன் பகிர வேண்டும் என்று எண்ணுகின்றவைகளை தொகுத்து ஒரு பதிவாயிட எண்ணியுள்ளோன். அவ்வகையில் இவ்வாரம்..

SOPA மற்றும் இணைத்தள பகிஸ்கரிப்பு

அமெரிக்க அரசாங்கத்தின் SOPA சட்டமூலம் நன்மையை விட தீமையே செய்யும் எனபதனால் பலரும் அதனைக்கைவிடுமாறு எதிர்த்து வந்தனர். அதன் ஒரு படியாக பல இணையத்தளங்கள் 18ம் திகதியன்று 24 மணத்தியாலங்களுக்கு தங்களை நிறுத்தி பகிஸ்கரிப்பொன்றை மேற்கொண்டன.

விக்கிபீடியா மற்றும் வேர்ட்பிரஸ் இணையத்தள திரைவெட்டுகள்

வேர்ட்பிரஸ் இணையத்தளம்

விக்கிபீடியா இணையத்தளம்

பல அமெரிக்கர்கள் இந்த விடயத்தில் எவ்வளவு விளக்கமின்றி இருக்கின்றார்கள் என்று காட்டுவதற்கு @grush என்பார் @herpderpedia என்கின்ற பெயரில் ருவிற்றர் கணக்கொன்றை உருவாக்கி அதன்மூலம் பலருடைய ருவீற்றுகளை மீள பதித்திருந்தார். அவற்றில் சில கீழே


iOs இற்கு Orkut மென்பொருள்

சமூக இணையத்தளங்களில் Facebook மற்றும் Twitter என்பன ஆக்கிரமித்திருந்தாலும், கூகிளின் சமூக வலைத்தளங்களில் ஒன்றான Orkut இன்னமும் 60 மில்லியனுக்கு மேற்பட்ட செயற்படு பயனாளர்களை கொண்டுள்ளது. விரைவில் Google+ உடன் Orkut இனை கூகிள் இணைத்துவிடும் எனப் பலர் கருதினாலும், கூகிள் இப்பொழுது Orkut இற்கு என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு App இனை iOS இயங்குதளங்களுக்கு வெளியிட்டுள்ளது.

நீங்களும் ஒரு Orkut மற்றும் ஐபோன் பாவனையாளர் எனின் இங்கே சொடுக்கி தரவிறக்கி கொள்ளுங்கள்.


புதிய வடிவமைப்பை பெறுகின்றது PHP இணையத்தளம்


மிக நீண்டகாலமாக ஒரே வடிவத்தில் இருந்து வந்த PHP இணையத்தளம் ஒரு புதிய வடிவமைப்பை பெறுகின்றது. வடிவமைப்பு பூரணமடைவதற்கு சிலகாலங்கள் இருந்தாலும், இப்போதே பார்ப்பதற்கு கீழுள்ள தொடுப்பைச் சொடுக்குங்கள். (பழைய வடிவமைப்பு எனக்கு மட்டும்தான் பிடித்திருந்தது போல..)

http://prototype.php.net/


Git இனை இலகுவாய் கற்றுக்கொள்ளுங்கள்


Git என்றால் என்ன வென்று தெரிந்த பலருக்கும் கூட அதனைப் பயன்படுத்துவது கடினம் என நினைத்து பயன்படுத்துவதை தவிர்த்து விடுவார்கள். அதனை இலகுபடுத்த உள்ளதே இந்த Git – the simple guide என்கின்ற கையேடு.

Git என்றால் என்னவென்று அறிய
Git – the simple guide

GitHub ஆனது திறமூல மென்பொருள்களுக்கு Git வழங்கியை வழங்கும் ஒரு பிரபல இணையத்தளமாகும்.


jQuery Transit ஒரு புதிய jQuery நீட்சி

jQuery animation இனை பயன்படுத்துபவரகள் “animate” என்கின்ற syntax இனை அறிந்திருப்பீர்கள். அதே syntax இனை “transition” என மாற்றுவதன் மூலம் அழகான animation களை உங்கள் இணையத்தளத்தில் உருவாக்க உதவுவதே இந்த நீட்சி.

உதாரணமாக

$('.logo').animate({ x: '90px' });

என்பதனை

$('.logo').transition({ x: '90px' });

என மாற்றிக்கொண்டால் சரி.

jQuery transit இணையத்தளம் : http://ricostacruz.com/jquery.transit/


The Goldilocks Approach

நீங்கள் ஒரு Responsive இணையத்தளத்தை உருவாக்க விரும்பினால், இதோ அதனை இலகுபடுத்த உங்களுக்கான ஆரம்பக்கோப்புகள்.

தரவிறக்க : http://goldilocksapproach.com


இவ்வார நகைச்சுவை

குறிச்சொற்கள்: , ,

3 பின்னூட்டங்கள்

  1. மதுவதனன் மௌ. சொல்லுகின்றார்: - reply

    நல்லது பகீ.. நல்ல விடயங்கள். நாங்களும் இந்த SOPA, PIPA பற்றி அறிந்திருக்கவில்லை. விக்கிப்பீடியாவின் மூடலுக்கக்குப் பின்னரே அறிந்தோம். அவர்களைக் குறை சொல்ல முடியாது. 🙂

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      எங்களுக்கு தெரியாதென்பதற்கு அவர்களுக்கு தெரியாதென்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அதைவிடவும் விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்திலேயே என்ன நடைபெறுகின்றது என்று குறிப்பட்டிருந்தது. அவற்றை எல்லாவற்றையும் விடவும், SOAP, SOFA என்று எழுதியவர்களைப் பற்றி என்ன சொல்லுவது?

  2. நிரூஜா சொல்லுகின்றார்: - reply

    வாழ்த்துக்கள் ஊரோடி! விக்கிபீடியாவைப் பற்றி தெரியாமல் இருப்பது ஒன்றும் பெரிய விடயம் இல்லை; நாம் தொடர்ந்து இணைத்தோடு தொடர்பு பட்டிருப்பதால் பல விடயங்களை பார்க்க வாசிக்க முடிகின்றது. உண்மையைச் சொன்னால், MS Word தெரியாத எத்தனையோ அமெரிக்கர்கள் இன்னும் இருக்கிறார்கள். 😉

    புதிய முயற்சிக்க் வாழ்த்துக்கள்.