வெளிச்சப்பெட்டி (Light box)
இப்ப சில நாட்களா என்ர பதிவுகளில இருக்கிற படங்களை பெரிசாக்கிறதுக்கு நீங்கள் சொடுக்கி பாத்திருந்தா ஒரு effect ஐ பாத்திருக்கலாம். இதுக்கு பெயர் Light Box. இது தான் இப்ப அனேகமான இணையத்தளங்களில படங்கள் பிழைச்செய்திகள் அறிவுறுத்தல்கள் போன்ற சில விசயங்களை காட்டுறதுக்கு பயன்படுத்தப்படுகுது. நானும் என்ர பதிவுகளில இப்ப படங்களை பெரிசாக்கி காட்டுறதுக்கு இதை பாவிக்க தொடங்கியிருக்கிறன். இதில இருக்கிற நன்மை என்னெண்டா படங்களை பெரிசாக்கி பாக்கிறதுக்கு நீங்கள் இன்னொரு சாளரத்தை திறக்க தேவையில்லை. அதோட திறந்து வைச்சிருக்கிற இணையப்பக்கமும் திருப்பி லோடாகிற தேவைகள் இல்லை.
இதைப்பற்றி மேலதிக விபரம் தேவையெண்டா இங்க போய் பாருங்கோ.
ஆனா இதைப்பாவிக்கிற எண்டா நீங்கள் இந்த ஜாவாஸ்கிரிப்ட் நிரலை அந்த இணையத்தளத்தின்ர வழங்கியில இருந்தே பாவிக்க ஏலாது. அதை பதிவிறக்கி உங்கட ஏதாவது வழங்கியில அல்லது ஜாவாஸ்கிரிப்ட் host பண்ணிற ஏதாவது இணையத்தளங்களை பாவிக்க வேணும். உஙகளுக்கு இதை பயன்படுத்த விருப்பம் இருந்து ஆனா இந்த வசதிகள் இல்லாம இருந்தா எனக்கு ஒரு பின்னூட்டம் போடுங்கோ என்ர வழங்கியின்ர முகவரியை தாறன் (அதில இருந்துதான் நான் பயன்படுத்திறன்).
பகீ!
நல்ல தகவல். தேவைப்படும்போது தொடர்பு கொள்கின்றேன். அறியத்தந்தமைக்கு நன்றி.
பகி!
தகவலுக்கு நன்றி!. தேவைப்படும்போது தொடர்பு கொள்கின்றேன்.
பகீ!
நல்ல தகவல். தேவைப்படும்போது தொடர்பு கொள்கின்றேன். அறியத்தந்தமைக்கு நன்றி.
பகி!
தகவலுக்கு நன்றி!. தேவைப்படும்போது தொடர்பு கொள்கின்றேன்.
நன்றி மலைநாடான் வருகைக்கும் பின்னூட்டத்திறகும்
நன்றி மலைநாடான் வருகைக்கும் பின்னூட்டத்திறகும்