வேர்ட்பிரஸினை backup செய்வது எவ்வாறு?

வேர்ட்பிரஸ் ஆனது இலகுவாக இணையத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளை உருவாக்குவதற்கு பயன்படும் மிகப்பிரபலமான ஒரு CMS ஆகும். அண்மையில் றொசான் எவ்வாறு வேர்ட்பிரஸினை Backup செய்வது எனக் கேட்டிருந்தார்.

இதனை பொதுவாக இரண்டு வழிகளில் செய்து கொள்ள முடியும். இவ்வழிகளினை விட இப்பொழுது நான் பயன்படுத்து மிக இலகுவான ஒரு முறையும் உள்ளது.

முதலாவது முறை:-

Cpanel hosting இனை வைத்திருப்பவர்கள் நேரடியாக தங்கள் cpanel control panel இல் உள்நுழைந்து தங்களது இணைத்தளம் முழுவதையும் இலகுவாக அங்கிருந்து backup செய்து கொள்ள முடியும். வேர்ட்பிரஸ் என்று மட்டுமல்லாது உங்கள் இணையத்தளம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருந்தாலும் இதனை பயன்படுத்த முடியும். இம்முறை மூலம் உங்கள் கோப்புக்கள் மற்றும் தரவுத்தளங்கள் அனைத்தும் ஒரே சொடுக்கில் backup செய்யப்படும்.

இம்முறையை பயன்படுத்தி மிக இலகுவாக உங்கள் இணையத்தளத்தை ஒரு வழங்குனரிடம் இருந்து இன்னொருவரிடம் மாற்றிக் கொள்ளலாம்.

இரண்டாவது முறை:-

இம்முறைமூலமும் நீங்கள் இலகுவாக Backup செய்து கொள்ள முடியும். இதற்கு உங்களிடம் ஒரு FTP மென்பொருளும் உங்கள் தரவுத்தளத்தினை அணுகுவதற்கு ஒரு மென்பொருளும் இருத்தல் வேண்டும். (phpMyAdmin சிறப்பானது மற்றும் இலகுவானது.).

முதலில் உங்கள் FTP மென்பொருளை பயன்படுத்தி உங்கள் வழங்கியினுள் உள்நுழைந்து அங்கிருந்து wp-content கோப்புறையை தரவிற்க்கி கொள்ளுங்கள்.

பின்னர் phpMyAdmin இனை பயன்படுத்தி உங்கள் தரவுத்தளத்தினை திறந்து கொள்ளுங்கள்.


இப்பொழுது வலப்புறத்தில் உங்கள் தரவுத்தளத்தில் உள்ள எல்லா அட்டவணைகளும் தெரியும். மேலுள்ள Export பொத்தானை சொடுக்குங்கள்


இப்பொழுது உங்கள் SQL கோப்பு தரவிறக்கப்பட்டு விடும்.

நீங்கள் வேறொரு வழங்கிக்கு இத்தளத்தை கொண்டு செல்ல விரும்பின் முதலில் அவ்வழங்கியில் சாதாரணமாக வேர்ட்பிரஸினை நிறுவிக்கொண்டு பின்னர் நீங்கள் தரவிறக்கி வைத்திருக்கும் wp-content கோப்புறையை தரவேற்றி விட வேண்டும். அதன் பின்னர், புதிய நிறுவலின் தரவுத்தளத்தினை phpMyAdmin இல் திறந்து import மூலம் உங்கள் sql கோப்பினை அங்கு உள்நுழைத்து விட்டீர்களானால் சரி.

நான் இப்பொழுது பயன்படுத்தும் முறை:- 

WPremote என்கின்ற இலவச சேவை நீங்கள் இலகுவாக உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தினை backup செய்து கொள்ள உதவுகின்றது.

  1. https://wpremote.com இணையத்தளத்திற்கு சென்று ஒரு கணக்கினை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
  2. அங்கே உங்கள் தளத்தினை இணைத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் அவர்களின் நீட்சியை நிறுவிக்கொள்ள வேண்டும்.
  3. இப்பொழுது நீங்கள் உங்கள் நிறுவல் தொடர்பான விபரங்களையும் Backup செய்து கொள்ளுவதற்கான வழிமுறையினையும் அங்கு காண முடியும்.

குறிப்பு: இந்த சேவை ஒரு புதிய சேவையாகும். எனவே ஒரு சிறிய தளத்தை முதலில் இணைத்து நீங்களாகவே பரிசோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.

குறிச்சொற்கள்: ,

4 பின்னூட்டங்கள்

  1. இரவி சொல்லுகின்றார்: - reply

    நான் http://pluginbuddy.com/purchase/backupbuddy/ பயன்படுத்துகிறேன். இலகுவாகப் படி எடுக்க, ஒரு வழங்கியில் இருந்து இன்னொரு வழங்கிக்கு மாற உதவியான நீட்சி.

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      Backupbuddy நிச்சயமாக ஒரு சிறந்த வழிதான். இருந்தாலும் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்பதனால் அதனைக் குறிப்பிடவில்லை.

  2. இரவி சொல்லுகின்றார்: - reply

    பணம் செலுத்த வேண்டும் என்பது ஒரு தடை தான்.

    2007 வாக்கில் கட்டண வார்ப்புருவையெல்லாம் யாராவது வாங்குவார்களா என்று நினைத்தேன். ஆனால், இப்போது எனது வாடிக்கையாளர் திட்டங்கள் அனைத்தையும் கட்டண வார்ப்புருக்கள் வைத்துத் தான் செய்து வருகிறேன். இப்போது WordPress.orgல் காணப்படும் இலவச வார்ப்புருக்களின் வகைகளும் தரமும் கூட சொல்லிக் கொள்வது போல் இல்லை.

    இதே நிலை கட்டண நீட்சிகளுக்கும் வரும். காசா இலவசமா என்பதை விட ஒரு செயலைச் செய்ய எது சிறந்த நீட்சி என்று மட்டுமே பார்க்கப்படும். பொழுது போக்காகவும், இலாப நோக்கற்றும் செயல்படுபவர்களுக்கு இலவச நீட்சிகள் போதுமானதாக இருக்கும். ஆனால், தொழில்முறையில் செயல்படுபவர்களுக்குக் கட்டணச் சேவைகள் இன்றியமையாததாகி விடும்.

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      கட்டணச்சேவைகள் இன்றியமையாததாகிவிடும் என்பதை நான் பொதுவாக ஏற்றுக்கொள்ளுவதில்லை.

      http://wordpress.org/extend/plugins/backwpup/ போன்ற நீட்சிகளும், WPRemote போன்ற இலவச சேவைகளும் எனது தொழில்முறையான வேலைகளுக்கு பொதுமானதாய் உள்ளன.