வேர்ட்பிரஸ் 3 – புதிய வசதிகள்
மிகப்பிரபலமான வேர்ட்பிரஸ் வலைப்பதிவு மென்பொருள் தனது 3.0 வது பதிப்பினை எட்டியுள்ளது. (இப்பொழுது RC1 வெளியிடப்பட்டுள்ளது, விரைவில் பயனர் பாவனைக்கு வரும்). இந்தப்பதிப்பில் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு என்பதனைத்தாண்டி Content Management System என்றபக்கத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக தெரிகின்றது. இப்பொழுது இப்புதிய பதிப்பில் கிடைக்கும் சில முக்கிய வசதிகளை பார்ப்போம்.
நிறுவுதல்.
வழமைபோன்ற மிக இலகுவான நிறுவதலை இந்த பதிப்பு கொண்டிருந்தாலும் பயனாளர்கள் தங்களுக்குரிய பயனாளர் பெயரையும், கடவுச்சொல்லையும் நிறுவலின்போதே தேர்ந்தெடுக்கும் வசதி இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. சாதாரண பயனாளர்களுக்கு தங்கள் வலைப்பதிவின் பாதுகாப்பினை ஒரு படி அதிகமாக்கக்கூடியதானதாக இந்த வசதி உள்ளது.
அடைப்பலகை
இவ்வளவு காலமும் இருந்துவந்த Kubrick அடைப்பலகை மாற்றப்பட்டு அழகிய புதிய அடைப்பலகை இந்த பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய இடுகை வகைகள். (custom post types)
வேர்ட்பிரஸ் பொதுவாக இடுகைகள், பக்கங்கள் என்ற இரண்டு வகையான இடுகைகளையே செய்ய அனுமதிக்கும். ஆனால் இந்த பதிப்பில் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு விரும்பியவாறான ஒரு இடுகை வகையினை உருவாக்கிகொள்ள முடியும். உதாரணத்திற்கு நீங்கள் தொடர்ச்சியாக புத்தகங்களை அறிமுகம் செய்பவரானால் Add new post அல்லது Add new page என்பது போல Add new book என்ற ஒரு இடுகை வகையினை உருவாக்கி வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியும். உள்ளடக்கம், தலைப்பு மட்டும் என்றல்லாது நீங்கள் விரும்பினால், விலை, பதிப்பகம் போன்ற பிற தகவல்களையும் உங்களால் இணைத்துக்கொள்ள முடியும்.
Menu
வேர்ட்பிரஸ் 3.0 இல் உள்ள மற்றுமொரு முக்கிய அம்சம் சிறப்பாக Menu க்களை கையாள முடிகின்றமையாகும். வேர்ட்பிரஸின் முன்னைய பதிப்புகளில் வேர்ட்பிரஸை நன்கு மேம்படுத்த தெரிந்தவரால் மட்டுமே மெனுக்களை நன்கு கையாள முடிந்தது. இப்பொழுது ஒரு சாதாரண பயனாளராலும் இலகுவாக இதனை செய்ய முடியும்.
WordPress MU உள்ளடக்கப்பட்டிருத்தல்.
இதன்மூலம் நீங்கள் உங்கள் வலைப்பதிவுகளை ஒரு ஒன்றிணைக்கப்பட்ட தளமாக இலகுவாக மாற்றிக்கொள்ள முடியும்.
உங்கள் தளத்தில் இந்த வசதியை கொண்டுவர கீழ்வரும் நிரலை நீங்கள் உங்கள் wpconfig.php கோப்பில் இணைக்க வேண்டும்.
define('WP_ALLOW_MULTISITE', true);
மேம்படுத்தப்பட்ட Export வசதி.
இது உங்கள் வலைப்பதிவை நீங்கள் இடம்மாற்றும்போது பயன்படும். இப்பொழுது அதிக வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அன்பு நண்பன் பகீரதன் அவர்களுக்கு..
தங்களது அருமையான பதிவுகள் தொடர – முதலில் வாழ்த்தியவனாக ஒரு சந்தேகத்தை கேட்க விரும்புகின்றேன்.
அதாவது – தாங்கள் பதிவொன்றில் குறிப்பிட்டபடி சொந்த இணைய செர்வரில் – காணப்படும் ஃபன்டாஸியா என்பதன் மூலமாக வேர்ட்பிரஸ் தீம் ஒன்றை நிறுவிக் கொண்டேன். ஆனால் – பிரச்சனை என்னவென்றால் –
எனது வேர்ட்பிரஸ் புளொக்கில் கட்டுப்பாட்டகம் உட்பட எல்லாமே தமிழில் வருகின்றது.
ஆனால் – சொந்த டொமைன் யிற்கான டேஸ் போர்ட் டில் – ஆகக்கறைந்தது போஸ்ட் என்பதில் கூட தமிழைப் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.
கூகிளிடமும் கேட்டு கிடைக்காத மிகச் சரியான – தெளிவான – விடைக்காக தங்களை நாடி வந்திருக்கிறேன்.. தீர்வு என்ன..?
இவன் – மஸா
ஃபன்டாஸியா மூலம் வேர்ட்பிரஸை உங்கள் தளத்தில் நிறுவிக்கொண்டால் அது ஆங்கிலப்பதிப்பையே நிறுவும். உங்களிற்கு தமிழப்பதிப்பு தேவையானால் அதனை வேர்ட்பிரஸ்தளத்தில் தரவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு ஆங்கிலத்தில் பயன்படுத்துவது பிரச்சனை இல்லை, ஆனால் தளம் தமிழில் இருக்கவேண்டும் என எண்ணினால் உங்கள் அடைப்பலகையை மொழிமாற்றம் செய்துகொண்டால் போதுமானது. (இதை நீங்கள்தான் செய்ய வேண்டும்.) (ஊரோடி அடைப்பலகை மட்டும்தான் தமிழ்)
தங்களது உடனடி பதிலுக்கு நன்றி நண்பரே..
ஆங்கில அறிவு பெரிதாக இல்லாத ஒருவருக்காக, தமிழ் இடைமுகத்தை எற்படுத்திக் கொடுக்கும் ஒரு முயற்சியாக இதனை நான் மேற்கொண்டிருந்தேன்.
தாங்கள் கூறியபடி – முயற்சித்துவிட்டு மீண்டும் வருகின்றேன்..
நன்றிகளுடன் – மஸா..
தங்களது வழிகாட்டலின் பிரகாரம் – ஒரு வழியாக தமிழில் போஸ்டிங் கண்டுபிடித்தாகிவிட்டது.
ஆனால் – சிக்கல் என்னவென்றால், தமிழ் அட்மின் டேஸ்போர்ட் வசதிகளை ஏற்படுத்துவதற்கு WordPress இலவச புளொக் யில் காணப்படும் மொழி தெரிவு செய்யும் வசதியை நேரடியாக வேர்ட்பிரஸ் யினை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணிய பிறகும் காணமுடியவில்லை.
எனவே, கூகிள் குழுமம் ஒன்றின் உதவியுடன் ta_TA.mo என்ற file ஒன்றை கண்டுபிடித்து நிறுவினேன். அதற்கு பிறகு பாதி தமிழ் மொழிபெயர்பை அட்மின் பகுதியில் பார்க்க கூடியதாக இருந்தது. இலவச புளொக் போன்ற முழுமையான மொழிபெயர்பை பெற ஏதாவது வழிகளிருந்தால் அறியத் தாருங்கள் நண்பரே..
முடியுமானால் – எனது சிக்கல்களை மையப்படுத்தி, தங்களது வேர்ட்பிரஸ் குருவாகலாம் தொடரின் அடுத்த கட்டத்தை பதிவு செய்தாலும் எல்லா நண்பர்களும் பயனடைவார்கள் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
தங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்..
நன்றியுடன்
மஸா..
29.01.2011
பிரச்சனை என்னவெனில் மொழிகோப்பினை நிறுவிய பின்னர் ஒரு தெரிவு தானாகவே வந்துவிடாது என்பதுதான். மொழிக்கோப்பினை எவ்வாறு நிறுவுவது என்பது தொடர்பாக இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
அண்மையில் நான் வேர்ட்பிரஸ் தமிழ் மொழிபெயர்ப்புக்கு (இலங்கை) பொறுப்பெற்றிருப்பதால் விரைவில் அவைகுறித்த பதிவொன்றிட எண்ணியுள்ளேன். அதுவரை ஏதும் கேள்விகள் இருப்பின் இங்கே வந்து கேளுங்கள். பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
நன்றி
நன்றிகள் நண்பரே..
தங்களது இலங்கைத் தமிழாக்கம் தொடர்பான முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.. என்னால், இயன்ற பங்களிப்பையும் அதற்காக நான் செய்கின்றேன்..
வாழ்த்துக்களுடன் – மஸா..
29.01.2011
என்னால் நீங்கள் கூறிய புத்தகத்துக்கான பகுதியை காணமுடியவில்லை
அது வேர்ட்பிரஸில் இப்போது இருக்கின்ற வசதியொன்று. Custom Post Type என்கின்ற வசதியை கொண்டு நீங்கள் விரும்பிய ஒரு Post type இனை உங்களால் உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் அதற்கு நீங்கள் கொஞ்சம் Coding எழுதிக்கொள்ள வேண்டும்.
எவ்வாறு அதனை எழுதுவது …? கொஞ்சம் உதவி செய்யுங்கள்
விரைவில் அது தொடர்பான ஒரு பதிவினை எழுத முயற்சிக்கின்றேன்…