இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 2

முன்னைய பகுதி ஒன்றில் நாங்கள் பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இரண்டு வழிமுறைகளை பற்றி பார்த்திருந்தோம். இப்பொழுது அவற்றில் சில விடயங்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தொடர்ந்து வாசிக்க:
பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

அதற்கு முன்னர் முன்னைய பதிவில் மாயா கேட்டிருந்த ஒரு கேள்விக்கு வருவோம். அதில் தமிழ் பதிவுகளுக்கு கூகிள் தனது அட்சென்ஸ் இனை வழங்குவதில்லையே அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தார். உண்மையில் கூகிளின் நெறிமுறைகளுக்கமைய தமிழில் இருக்கும் இணையத்தளங்களுக்கு கூகிள் அட்சென்ஸை வழங்கமுடியாது. ஆனால் எங்களால் இலகுவாக ஒரு ஆங்கில வலைப்பதிவை தொடங்க இயலும். எனவே ஒரு ஆங்கில வைலப்பதவினை தொடங்கி அதனூடாக அட்சென்ஸை விரும்பினால் பெற்றுக்கொள்ள இயலும்.

போட்டிகளில் கலந்து கொள்ளல்.

பணம் சம்பாதிக்க அல்லது உங்களுக்கு தேவையான சில விடயங்களை இலகுவாக பெற்றுக்கொள்ள இன்னுமொரு வழி போட்டிகளில் கலந்து கொள்ளுதல். பல இணையத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் காலத்துக்கு காலம் போட்டிகளை நடாத்தி பரிசில்கள் கொடுக்கும். (கொஞ்சகாலத்துக்கு முந்தி தமிழ் வலைப்பதிவர் ஒருவரும் ஒரு போட்டி வைச்சு இலவசமா இணையத்தளம் ஒன்றை கொடுத்திருந்தார் – ஆரெண்டிறது அவ்வளவா ஞாபகம் இல்லை).




இப்படி எங்கயெங்க போட்டிகள் நடக்குது எண்டதை எப்படி கண்டுபிடிக்கிறது எண்டுறதையும் பிறகொரு பதிவில சொல்லுறன்.

இப்பொழுது நாங்கள் இன்றைய விடயத்துக்கு வருவோம்.

Elance அல்லது GetAFreelancer போன்ற இணையத்தளங்களினூடு வேலைகளை பெற்றுக்கொள்ளுதல்.

Elance நிறுவனம் மற்றும் GetAFreelancer இணையத்தளங்களில் நீங்கள் இலவசமாக ஒரு கணக்கினை உருவாக்கி கொள்ள முடியும். ஆனால் அங்கு சில வரையறைகள் உள்ளன. உதாரணமாக Elance நிறுவனத்தின் இலவச கணக்கினை கொண்டு உங்களால் ஆகக் கூடியது மாதம் ஒன்றிற்கு மூன்று கோரல்களையே செய்ய முடியும் (நீங்கள் மாதாந்தம் 10 அமெரிக்க டொல்ர்கள் செலவளித்தால் உங்களால் 20 கோரல்கள் வரை செய்ய முடியும்). இங்கு அனேகருக்கு ஏற்படுகின்ற பிரச்சனை என்னவென்றால் இந்த மாதம் செய்கின்ற மூன்று கோரல்களும் கிடைக்காது போய்விடின் பின்னர் இன்னுமொரு கோரலை செய்ய ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். இது சலிப்பினை ஏற்படுத்துவதோடு வேலை செய்யும் எண்ணத்தையும் கைவிட வைத்துவிடும்.

நாங்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும் அதனை சரியான முறையில் வெளிப்படுத்தாதவிடத்து எந்த பயனும் இல்லை. அதனால் இங்கு எமக்கு முக்கியமாக இரண்டு விடயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

1. எம்மிடம் இருக்க வேண்டியவை
2. கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது.

எம்மிடம் இருக்க வேண்டிய அடிப்படையான விடயங்கள்.

1. இணைய இணைப்பு.

என்னட்ட இருக்கிற இணைய இணைப்பு டயல்அப் தான். நீங்கள் சரியாக வேலைகளை தெரிந்தெடுத்தால் அலுவலகத்தில இருக்கிற இணைய இணைப்பும் ஒரு மணத்தியால நேரமும் காணும்.

2. கணினி

உங்களிட்ட சொந்தமா ஒரு கணினி இருக்கிறது நல்லம். அலுவலக கணினியிலயே எல்லாம் செய்யலாம் எண்டா கொஞ்சம் கஸ்டம்.

3. நேரம்

இது இணையத்தில் வேலை செய்ய என்று மட்டுமல்லாமல் எங்கு வேலை செய்வதானாலும் நேரம் என்பது முக்கியமானது. ஒக்டோபர் 2008 சௌந்தரசுகன் இதழில் இரவீந்திரபாரதி எழுதிய எப்படியும்.. சிறுகதையில வாற மாதிரி உங்களுக்கு நேரமிருந்தா அதையும் நேரம் எண்டு கொள்ள முடியாது.

ஆங்கிலத்தில் Quality time என்று சொல்லுவார்கள், அந்த நேரம் எமக்கு தேவை. தினமும் உங்களிடம் இரண்டு மணத்தியாலம் Quality time இருக்குமானால் கூட உங்களால் இணையத்தில் சிறப்பாக வேலை செய்ய முடியும். (நான் தினமும் ஒரு மணத்தியாலமாவது வேலை செய்வது என்று நினைத்திருக்கின்றேன்.)

4. Profile

எமக்கு வேலைதருபவர்கள் எங்களது கோரல்களை பார்த்த பின்னர் எம்மைப்பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள பொதுவாக விரும்புவார்கள் எனவே Elance அல்லது GetAFreelancer தருகின்ற எமது Profile பக்கத்தை முடிந்தளவு சிறப்பாக பேணுதல் வேண்டும். அனானியாக இருக்கின்ற எவருக்கும் எவரும் வேலை தர விரும்பமாட்டார்கள்.

Profile இல் கவனிக்க வேண்டிய விடயங்கள்.

a. புகைப்படம்.
பொதுவாக நாங்கள் எங்கள் வலைப்பதிவுகளில் புகைப்படங்களை பொதுவில் வைக்க விரும்புவதில்லை. (உதாரணத்திற்கு இளா என்றால் மஞ்சள் நிறத்தில் வீதிக்குறியீடு போன்ற ஒரு உழவு இயந்திரமும், ரவிசங்கர் என்றால் பச்சையாக ஏதோ ஒரு இலையும் தான் ஞாபகத்துக்கு வரும்). ஆனால் இணையத்தளமூடாக வேலை செய்யும் போது இவை சரிப்படா. பொதுவாக எமது புகைப்படம் எம்மை நன்கு அறிந்தவர் போன்ற உணர்வை வேலை தருபவருக்கு ஏற்படுத்தும். இது மிக முக்கியமானது.

b. குறிச்சொற்கள்.
வேலை தருபவர்கள் பொதுவாக சிறந்த வேலையாட்களை தேடிக்கண்டுபிடிக்க விரும்புவார்கள். எனவே அவர்கள் அதற்கான தேடலை செய்யும் போது நாங்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டுமாயின் எமது குறிச்சொற்கள் எம்மை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்கவேண்டும்.

c. tagline
இதனை பொதுவாக நம்மவர்கள் நன்கு பயன்படுத்துவதில்லை. tagline இல் சரித்திரம் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். tagline எமது திறமையை இரண்டு மூன்று சொற்களில் நச்சென்று சொல்லுவதாக இருக்க வேண்டும்.

d. எம்மைப்பற்றிய விபரம்.
Elance போன்ற இணையத்தளங்களுடாக வேலைதருபவர்கள் உங்கள் திறமையைத்தான் எதிர்பார்ப்பார்களே தவர நீங்கள் எங்கு படித்தீர்கள் திருமணமானவரா இல்லையா என்று எதிர்பார்ப்பதில்லை. எனவே அவ்வாறன விடயங்களை பொதுவாக விபரத்தில் இடத்தேவை இல்லை. சிலர் தமது விபரத்தில் தமது சுயவிபரக்கோவையை அப்படியே இடுவதுண்டு. ஆனால் அது நல்ல விளைவுகளை கொண்டு வரமாட்டாது. மதம் சார்ந்த விடயங்களை இணைப்பது பொதவாக நல்லதல்ல. சில நிறுவனங்கள் வேலை தரும்போது இப்படியான விடயங்களை எதிர்பார்த்தால் அவர்களுக்கு மட்டும் அவற்றை கொடுத்தால் போதுமானது.

5. Portfolio

பொதுவாக இணையத்தள வடிவமைப்பவர்கள் அல்லது சின்னங்கள், பதாகைகள், அழைப்பிதழ்கள் வடிவமைப்பவர்கள் தங்கள் Portfolio ஒன்றினை வைத்திருப்பது பயன்தரும். ஏனெனில் பொதுவாக வேலை தருபவர்கள் நீங்கள் செய்த முன்னைய வேலைகளை பார்க்க ஆர்வமாயிருப்பார்கள். Elance போன்ற இணையத்தளங்கள் அங்கத்தவர்களுக்கு இதுபோன்ற வசதிகளை செய்து தந்தாலும், தனியாக portfolio ஒன்றினை வைத்திருப்பது அதிக பயன் தரும். எனைய வேலைகள் செய்பவர்களும் உதாரணமாக முகாமைத்துவம், சட்டம், மொழிபெயர்ப்பு, தள மேலாண்மை செய்பவர்களும் அவர்களுடை கடந்தகால வேலைகளை வெளிப்படுத்தும் வகையில் கட்டாயம் ஒரு Portfolio வைத்திருக்க வேண்டும்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் portfolio பார்த்தவுடன் புரியக்கூடியதாக சரியாக வகைப்படுத்தி வரிசைப்படுத்தி உங்கள் கடந்த கால வேலைகளை வெளிப்படுத்தவேண்டும். ஒருவர் உங்கள் portfolio இற்கு வந்து ஆராய்ச்சி செய்துதான் அவற்றை அறிய வேண்டும் என்றிருந்தால் நீங்கள் அவ்வாறொன்றை வைத்திருப்பதில் பயனில்லை.

உதாரணத்திற்கு கீழே காட்டியிருக்கின்ற சில portfolio க்களை சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.





இப்படியான ஒன்றை நீங்களும் இலவசமாக வைத்துக்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அதை அடுத்த பதிவில் விரிவாக சொல்லுகின்றேன்

6. துறைசார் மேம்படுத்தப்பட்ட அறிவு.

மேம்படுத்தப்பட்ட அறிவெண்டா பெரிய ஒரு விசயம் இல்லை. நாட்டில என்ன நடக்குது எண்டு தெரிஞ்சிருக்க வேணும். உதாரணத்திற்கு உங்களுக்கு HTML மொழி தெரியும். அதில இணையத்தளங்களை வடிவமைக்கிற வேலைகளை நீங்கள் செய்ய விரும்பினால் உங்களுக்கு HTML தொடர்பா உலகத்தில என்னென்ன நடந்து கொண்டிருக்கு என்கிற செய்தி தெரிந்திருக்க வேண்டும். HTML 5.0 என்ன வசதிகளோட வருது HTML 4.1 இற்கும் HTML 5 இற்கும் என்ன வித்தியாசம் XHTML எண்டா என்ன எனபது போன்றவை.

இதனால என்ன பயன் என்பதை கோரல் ஒன்றை எப்படி செய்யிறது எண்டு பாக்கேக்க சொல்லுறன்.


கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் அடுத்த பதிவில் பார்ப்போம். தவறவிடக்கூடாதெண்டால் இங்க சொடுக்கி செய்தியோடையை பதிவு செய்து கொள்ளுங்கள்.

கேள்விகள் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்.

குறிச்சொற்கள்: , , , ,

24 பின்னூட்டங்கள்

  1. Tamilish.com சொல்லுகின்றார்: - reply

    இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 2…

    முன்னைய பகுதி ஒன்றில் நாங்கள் பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இரண்டு வழிமுறைகளை பற்ற…

  2. ரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply

    நல்ல இடுகை. நிறைய தெரிந்து கொண்டேன். தமிழகத்தில் என்னிடம் தொலைபேசிய வலைப்பதிவு நண்பர் ஒருவர் உங்கள் பதிவின் மூலம் நிறைய நுட்பத் தகவல்கள் தெரிந்து கொள்வதாகச் சொன்னார்.

    //ரவிசங்கர் என்றால் பச்சையாக ஏதோ ஒரு இலையும் தான் ஞாபகத்துக்கு வரும்//

    🙂

  3. மாயா சொல்லுகின்றார்: - reply

    முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி

  4. நா ஜெயசங்கர் சொல்லுகின்றார்: - reply

    Elance ஒரு நல்ல தளம் தான் எனினும் இலவச கணக்கு உள்ளவர்களுக்கு அது தரும் 3 கனெக்ட் (கோரல்கள் அல்ல) கொண்டு ஒன்றும் செய்ய இயலாது! ஏன்னெனில் 95% ப்ராஜக்ட்டுகளுக்கு குறைந்த பட்சம் 4 கனெக்ட் தேவைபடும் அதனால் நிச்சயம் 10$ காசு கட்டினால் தான் கோரல்கள் செய்யமுடியும். அதுவும் 4 அல்லது 5 கோரல்கள்தான் செய்யமுடியும். புதிய உறுப்பினர்களுக்கு ப்ராஜெக்ட் கிடைப்பது கடினம் அதனால் நிறைய ப்ராஜக்ட்டுகளில் கோரல்கள் செய்ய வேண்டும்! நான் அறிந்த வரை 15 ப்ராஜெக்ட்டுகளில் கோரல்கள் செய்தால் ஒன்று அல்லது இரண்டு வாய்ப்புக்கள் வரலாம்! அப்படி கிட்டு ஒவ்வொறு ப்ராஜெக்ட்டுகளில் முழு தொகையிலிருந்து 6.75%லிருந்து 8.75% வரை ஈலான்ஸ் எடுத்துக்கொள்ளும் என்பது இன்னொரு தகவல்!

    அதனால் புதிதாக துவங்க நினைப்பர்வகள்

    http://www.getafreelancer.com
    http://www.getacoder.com
    http://www.rentacoder.com

    Freelancing எனப்படும் இந்த தளங்களில் முயற்சியை துவங்குவது நல்லது! முதல் கோரல்கள் சிறிய ப்ராஜெக்ட் அதாவது 250$ குறைவாக பட்ஜெட் உள்ள ப்ராஜெக்ட் முயற்சிப்பது நல்லது! சிறியன ஆகும் போது வேலைதருபவர்களுக்கு அதிக பயம் இறாது! அதனால் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம் வரும்.

    வாழ்த்துக்கள்!

  5. பகீ சொல்லுகின்றார்: - reply

    நா. ஜெயசங்கர் வாங்க. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

    நீங்கள் கூறியது உண்மைதான் அவர்கள் மூன்று கனெக்ட் தான் தருகிறார்கள் ஆனால் அனேகமான வேலைகளுக்கு நான்கிற்கு மேல் தேவைப்படும் என்று நீங்கள் சொன்னது தவறானது. 50 தொடக்கம் 500 அமெரிக்க டொலர்கள் வரையான வேலைகளில் கோரல் செய்ய உங்களுக்கு 1 கனெக்ட் போதுமானது. இதைத்தான் நான் ஆகக்கூடியது 3 கோரல்கள் செய்யலாம் என்று குறிப்பிட்டேன் (நுடயnஉந இல் உள்ள அனேகமான வேலைகள் 50-500 அமெரிக்க டொலர்களுக்கானதே) நீங்கள் சொல்லுவது போல 95 வீதமானவைக்கு கோரல் செய்யமுடியாதல்ல, 95வீதமானவைக்கு உங்களால் கோரல் செய்ய முடியும் என்பதுதான் உண்மை.

    நானும் பணம் செலுத்தாத ஒரு கணக்கினைதான் வைத்திருந்தேன். என்னுடைய முதல் மூன்று கோரல்களில் ஒன்று ஒரு வேலையை பெற்றுத்தந்தது. அதன்பின்னர் பணம் செலுத்தி அங்கத்தவராகி விட்டேன்.

    நீங்கள் கூறிய இணையத்தளங்களும் சிறப்பானவைதான்.

    இந்த தொடர்பதிவு எனது அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. உங்கள் போன்றவர்களின் பின்னூட்டம் இப்பதிவுகளுக்கு வலிமை சேர்க்கும்.

    மீளவும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    ரவிசங்கர்,

    //நல்ல இடுகை. நிறைய தெரிந்து கொண்டேன். தமிழகத்தில் என்னிடம் தொலைபேசிய வலைப்பதிவு நண்பர் ஒருவர் உங்கள் பதிவின் மூலம் நிறைய நுட்பத் தகவல்கள் தெரிந்து கொள்வதாகச் சொன்னார்.//

    அப்பிடியா? கேட்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  7. பகீ சொல்லுகின்றார்: - reply

    மாயா வாங்க,

    முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். நன்றி.

  8. sutha சொல்லுகின்றார்: - reply

    எனது பெயர் யோ.சுதா நான் பகரீனில் (Bahrain) இருக்கின்றேன். இங்கு நான் வேலைக்குப் போவதில்லை கணனிமூலம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கின்றேன். நீங்கள் உதவுவீர்களா?

  9. visva சொல்லுகின்றார்: - reply

    mikka mgilchi……………..

  10. Nijamudeen சொல்லுகின்றார்: - reply

    நான் நிஜாமுதீன் இப்பகுததிக்கு புதியவன் கம்ப்யூடரில் என்ன என்ன பயின்றால் நெட்டின் மூலம் நிரைய சம்பாதிக்க முடியும்?

  11. radha சொல்லுகின்றார்: - reply

    hai can u give me a sample work of amazone

  12. radha சொல்லுகின்றார்: - reply

    hai can u give me a sample work of amazonemechanicaltruc

  13. Mohamed Shathath சொல்லுகின்றார்: - reply

    தங்களது வலைப்பதிவை வைத்து வைத்து நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன். இன்றும் நிறைய விடயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன் நண்பரே. தங்களது தகவல்களுக்கு மிக்க நன்றி.

  14. gowtham சொல்லுகின்றார்: - reply

    sir super sir! naanga middle class family naan ippo +2 mudichu veetla summa than irukken! net moolama panam sampathikka mudiyum endru therinjavudane veetla compel panni pc vangitten(2 weeks before) 3 months munnadi my dad erandhutaru net la panam sampathikka mudiyumnu veetla sonna namba matingaranga ennaku entha vela best nu solunga please bahe sir! nan oru wapsite create panni ads display pannalamnu ninaikiraen please sir suggest pannunga!

  15. […] முனைகின்றேன். தொடர்ந்து வாசிக்க: பாகம் 2 பாகம் 3 பாகம் […]

  16. […] பற்றி பார்த்தோம். பின்னர் இரண்டாம் பகுதியில் இணையத்தினூடு வேலை செய்ய […]

  17. vino சொல்லுகின்றார்: - reply

    i ‘am very lucky

  18. saravanan சொல்லுகின்றார்: - reply

    எனது பெயர் saravanan நான் (erode) இருக்கின்றேன். இங்கு நான் வேலைக்குப் போவதில்லை கணனிமூலம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கின்றேன். நீங்கள் உதவுவீர்களா?

  19. தவபாலன் சொல்லுகின்றார்: - reply

    அற்புதமான உங்கள் தகவல்களுக்கு நன்றி. நான் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவனல்ல, இணையத்தின் வழி எவ்வாறு பொருளீட்டலாம் என்பதை கொஞ்சம் விளக்கினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

    • பகீ சொல்லுகின்றார்: - reply

      அந்த விபரம்தான் இந்த பதிவுத்தொடரில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்டிருப்பதில் ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

  20. sakthivel சொல்லுகின்றார்: - reply

    i want your phone number for fast clarification

  21. siva சொல்லுகின்றார்: - reply

    i want to earn money through internet,pls guide me.thanks sir.