Why I love Gmail
நான் முதல்முறையா மின்னஞ்சல் பாவிக்கத்தொடங்கினது 1999 இன்ர கடைசிப்பாதியிலதான். பாவிக்கத்தொடங்கினது எண்டதை விட கணக்கொண்டை உருவாக்கினது எண்டதுதான் உண்மை. முதலில Hotmail லில. பிறகு கொஞ்சக்காலம் போக Yahoo! அதைவிட வேகமா இருந்ததாலயும் Yahoo! அரட்டை மென்பொருள் மிகப்பிரபலமாகவும் தொடங்க அதில ஒரு கணக்கு தொடங்கினான்.
ஜிமெயில் அறிமுகமான காலத்தில கூகிள் மென்பொருட்கள் மேல ஒரு ஈர்ப்பு இருந்ததால (அந்த நேரத்தில மின்னஞ்சல் “பயன்படுத்த” தொடங்கீற்றன்) உடனேயே ஒரு மின்னஞ்சல் கணக்கு தொடங்கினாலும் பொதுவா பயன்படுத்தி வந்தது யாகூவைத்தான். இருந்தாலும் கொஞ்சக்காலம் போக கொஞ்சம் கொஞ்சமா ஜிமெயிலுக்கு அடிமையாகியாச்சு. இப்ப பொதுவா எனக்கு ஜிமெயிலில என்ன பிடிச்சிருக்கெண்டு பாப்பம்.
அரட்டை
இந்த அரட்டை வசதி இப்ப யாகூ இலயும் இருந்தாலும் அது பெரும்பாலும் ஒருவராலும் பயன்படுத்த படுவதில்லை என்பதுதான் உண்மை.
இந்த அரட்டையில மிகமுக்கியமான பயன் என்னெண்டா அரட்டைகளை சேமித்து வைக்கிறது. விருப்பமில்லையெண்டா விடலாம். அதுக்கும் வசதி இருக்குது.
POP3
எனக்கு மிகவும் பயன்படுற ஜிமெயிலின்ர வசதி இதுதான். இந்த வசதி இருக்கிறதால ஜிமெயில் இப்ப என்ர மின்னஞ்சல் Client ஆக பயன்படுகிறது என்கிறதுதான் உண்மை. அத்தோட வெவ்வேறு மின்னஞ்சல் கணக்குகளிலிருந்து பெறப்படுகின்ற மின்னஞ்சல்கள் வேறு வேறு Label கள் மூலம் வேறுபடுத்தப்பட்டிருத்தலும் இதன் சிறப்பம்சமாகும். இதன்மூலம் Spam உம் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகின்றது.
அத்தோட இவ்வாறு மின்னஞ்சல்களை ஒன்றா இணைக்கிறதால மின்னஞ்சல்கள் அனுப்பும் போதும் எங்களுக்கு விரும்பிய மின்னஞ்சல் கணக்கிலிருந்து அனுப்பும் வசதியும் இதில் இருக்கின்றது.
Labels
மற்றைய மின்னஞ்சல் வழங்குநர்களின் Folders என்பதற்கு மாற்றீடாக கூகிள் அறிமுகப்படுத்தியதுதான் இந்த Label. பலர் Label இனை விட folder மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்த இலகுவானதாக இருப்பதாக கூறினாலும் என்னை பொறுத்தவரையில் Label சிறப்பாக இருப்பதாக நினைக்கின்றேன்.
ஜிமெயிலில் இருக்கின்ற எனக்கு மிகவும் பயன்படுகின்ற மற்றுமொருவிடயம், தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் ஒரே மின்னஞ்சலுள் சேமிக்கப்படல். இதில் இன்னமும் முக்கியமானவிடயம் என்னவெனில் இந்த மின்னஞ்சல் கலந்துரையாடலில் பலர் கலந்துகொண்டால் ஒவ்வொருவர் பெயரும் வெவ்வேறு நிறங்களில்; இலகுவாக பிரித்தறியக்கூடியவாறாக அமைந்திருத்தல். எனது அலுவலகம் சார் மின்னஞ்சல்களின்போது இந்த வசதி எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கின்றது.
பிழைதிருத்தம்
இந்த பிழைதிருத்த வசதி அனேகமான மின்னஞ்சல் சேவைகளில் இருந்தாலும் ஜிமெயிலின் பிழைதிருத்தியை பயன்படுத்தியவர்கள் அதன் இலகுத்தன்மையில் நிச்சயமாக ஆச்சரியப்பட்டுப்போவார்கள்.
கீழே குறிப்பிடுகின்ற இரண்டு வசதிகளும் கூகிளின் அனைத்து சேவைகளுக்கும் பொதுவானதாயினும் இந்த வசதிகளும் மிகவும் பயனுள்ள வசதிகளே. இவற்றை திரைவெட்டுகளை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
கடைசியா ஒரு விசயம் மட்டும் எனக்கு விளங்கவே இல்லை. நீங்களாவது சொல்லுங்க.
ஏன் இது இன்னமும் அங்க இருக்கு???
“”கடைசியா ஒரு விசயம் மட்டும் எனக்கு விளங்கவே இல்லை. நீங்களாவது சொல்லுங்க. ஏன் இது இன்னமும் அங்க இருக்கு??? “”
என்ன நண்பரே – இப்போதாவது விடை தெரிந்ததா..? – ஜீமைல் இல்லாத மற்ற மெயில் காரங்களுக்கு ஜீமைல் ஐ தானம் கொடுக்கதான் வச்சிருக்காங்க..
இருந்தாலும் – இந்தப் பின்னூட்டம் ரொம்ப லேட்டோ..? ( இப் பதிவை வாசிக்கும் சக நண்பர்களுக்கும், இவ் விடயம் தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளட்டுமே.. )