அறிவியல்

பித்தவெடிப்புக்கு மருந்து

மழைகாலம் தொடங்கி விட்டது. பித்தவெடிப்பு இருப்பவர்களுக்கு தொல்லைகொடுக்கும் காலம் மட்டுமல்லாமல் சிலருக்கு பித்தவெடிப்பேற்பட்டு மிகவும் வலி வேதனைகளை கொடுக்கும். இதனால் என்னுடை நூற்சேர்வைகளுக்கிளிருந்து பித்தவெடிப்புக்கான மருந்தை கண்டு எழுதியிருக்கிறேன். தேவையானவர்கள் பார்த்து பயன் பெறவும். அப்படியே எனக்கும் ஒரு பின்னூட்டம் போடவும்.

சாந்தியாம்பித்தவெடி கண்டபேற்குத் தயவாக மருந்தொன்று செப்பக்கேளும் வாந்தியாம் வாயூறல் மயக்கம்நீங்க வாகாகத்தயிலமொன்று சாற்றக்கேளும் காந்தியாம்வெட்டிவேர்யேலந்தானும் கனமானமஞ்சிட்டிதேவதாரம் வேந்தியாம்நெல்லிமாஞ்சில்
கிராம்புசந்தம் மேலான தாளிசமாம் சீரமாமே,

சீரகமாநாகப்பூ பருததிநெல்லி திறமானமுசுமுசுக்கை சொன்னாங்கண்ணி காரமாமதுரமோடேலஞ்சுக்கு கனமானசிட்டமுடன் மாஞ்சில் முததம் தீராமாம்குடோரியது வொன்றாய்க்கூட்டித்திறமாக எண்ணெய்தனில் காய்ந்துமேதான்
வீரமாம்யெண்ணெயிடதயியிவேகம் வேதாந்தகுருபீடமிதுவாமே.

இதுவுமாம்கண் புகைச்சல்கண்ணெறிவு யிதமானகபாலவலிமண்டைக்குத்து சதுவுமாம்நீர்ப்பாய்ச்சல்நீரெறிவு சதுரானபித்தவெடிபித்தக்காந்தல் கதுவுமாம்பித்நாற்பதுவும்போகும் கடினமாம்யித்தயிலம் நவுலொணாது வெதுவுமாம் மண்டலந்தான்
முழுகிவாநீ மேருவாந்தயிலமது விளம்பக்கேளே.

இது பதினெண்சித்தர்களில் மகாமகுத்துவம் பொருந்திய தன்வந்திரிபகவான் யூகிமுனிக்கு உபதேசித்த வயித்தியகாவியம் ஆயிரம் ( 1892 இல் பதிக்கப்பட்டது – வித்தியாவிநோத அச்சுக்கூடம்) என்ற நூலி்ல் இருந்து எடுக்கப்பட்டது.

16 கார்த்திகை, 2006

கைப்பேசிகளால் புகைப்படம்

நான் கைப்பேசிகளால் புகைப்படம் எடுப்பது சம்பந்தான் ஒரு பதிவை சில நாட்களின் முன் பதிந்திருந்தேன். ஆனால் இப்போது அதனை தமிழ் மணம் திரட்டியூடாக பார்க்க முடிந்தாலும் நேரடியாக எனது குடிலில் காணமுடியவில்லை. என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன். Edit post இலும் பதிவை காணமுடியவில்லை.

தொடுப்பு

7 ஐப்பசி, 2006