வேர்ட்பிரஸ் தமிழ் மொழியில்
வேர்ட்பிரஸ் ஆனது இலவசமான திறமூல நிரலையுடைய, இணையத்தளங்களை இலகுவாக உருவாக்கிக்கொள்ள உதவும் ஒரு மென்பொருளாகும். வலைப்பதிவு எழுதுபவர்கள் தங்களது சொந்த தளத்தில் வலைப்பதிவை வைத்திருக்க விரும்பின் அதற்கான சிறப்பான மென்பொருள் இது மட்டும்தான். (ஊரோடி வலைப்பதிவும் வேர்ட்பிரஸினையே பயன்படுத்துகின்றது.)
கடந்த தை மாதத்தில் வேர்ட்பிரஸினை தமிழ்ப்படுத்துவது என்ற முயற்சியை ஆரம்பித்து சிறிது சிறிதாக மொழிமாற்றம் செய்து வந்தேன். இடைக்கிடையே வேர்ட்பிரஸில் ஆர்வம் உள்ள பலரும் பங்களித்து வந்தார்கள்.
ஏறத்தாள ஒரு வருடமாகிய நிலையில் இப்போது வேர்ட்பிரஸின் 3.3 தமிழப்பதிப்போடு சேர்ந்து வெளிவந்துள்ளது. நீங்களும் தமிழ்ப்பதிப்பை தரவிறக்கி நிறுவிக்கொள்ள http://ta-lk.wordpress.org க்கு வாருங்கள்.
நீங்களும் உங்கள் ஓய்வு நேரத்தில் மொழிமாற்றத்தில் பங்களிக்க விரும்பின் இங்கே வாருங்கள்.
அருமை.
தமிழில் இரண்டு பதிப்புள்ளது போல மற்றொரு பதிப்பில் மொழிபெயர்க்க முயல்கிறேன்.
அருமை.
தமிழ் மொழிபெயர்க்க முயல்கிறேன்.